மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) பாபா சித்திக் மும்பையின் பாந்த்ரா பகுதியில் நேற்று சனிக்கிழமை 12 அக்டோபர் 2024 இரவு 9.30 மணியளவில் நீலம் நகரிலுள்ள அவரது மகனான பாந்த்ரா கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலியான நிலையில் காவல் துறையினர் இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.
ஒருவர் ஹரியானாவை சேர்ந்தவர், மற்றவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்” என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறினார். துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பியோடிய 3 வது குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இதில் ஏதாவது கும்பல் ஈடுபட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்திக்கிற்கு அண்மையில் அச்சுறுத்தல் வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மரணம் குறித்த புதிய தகவல் பரவியதையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே ஏராளமானோர் திரண்டனர். அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.NCP (SB) தலைவர் சரத் பவார், சித்திக் மரணத்தைத் தொடர்ந்து முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.
“மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, இது கவலையளிக்கிறது. நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. உள்துறை அமைச்சரும் ஆட்சியாளர்களும் அரசின் வண்டியை இவ்வளவு லேசாகத் தள்ளப் போகிறார்கள்
என்றால், சாமானியர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும் இதற்குப் பொறுப்பேற்று ஆட்சியாளர்கள் பதவியில் இருந்து விலக வேண்டிய தேவையும் உள்ளது. பாபா சித்திக் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்” என X ல் பதிவிட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவில் 42 வருடம் காங்கிரஸ் கட்சியிலிருந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார் பின்னர் தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பின்னர் அஜீத் பவார் தலைமை ஏற்றார், முதலில் ஷஹாபுதீன், பின்னர் அதிக் அகமது, பிறகு முக்தார் அன்சாரி, அடுத்து பாபா சித்திக் என அனைவரும் இஸ்லாமிய தலைவர்கள். அனைவரும் ஏதோ ஒரு சதியால் கொல்லப்பட்டுள்ளனர். என அச் சமுக மக்கள் மத்தியில் கேள்விகள் எழுகின்றன, என்ன நடக்கிறது?
தாவூத் இப்ராஹிம் தொடர்பு மூலம் லாரன்ஸ் கூட்டாளி தனுஜ் தாபன் படுகொலைக்கு பழி வாங்கவே, பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது, மும்பையில் ஆதிக்கம் செலுத்துவதில் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிம் இடையே நீண்ட காலமாக இருந்த போட்டியே பாபா சித்திக் கொலைக்கு காரணமா? என்ற கோணமும் இதில் அடங்கும்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவருமான பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 48 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பயணித்த அவர் மக்களிடையேயும் கட்சியினர் இடையே செல்வாக்கு பெற்றவராவார்.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் தலைவருமான பாபா சித்திக் மும்பையில் மர்ம நபர்களால் சுடப்பட்ட நிலையில்

வயிறு,மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான், தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர்பு வைத்ததே மகாராஷ்டிரா மாநிலத்தின் மாஜி அமைச்சர் கொலைக்கு காரணம்? என்ற கோணத்தில் நடக்கும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு யாராவது உதவி செய்தால் பாபா சித்திக் இருக்கும் நிலைமை தான் அவர்களுக்கு ஏற்படும் என்று பிஸ்னோய் கும்பல் மிரட்டல் சல்மான் கான் உடன் நெருக்கமாக இருந்ததற்காக ஏற்கனவே இரண்டு பிரபலங்களை பிஷ்னோய் கும்பல் தாக்கியதாகவும் காவல் துறை தரப்பில் தகவல் வரும் நிலையில் சல்மான் கான் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாம்.

கருத்துகள்