முதலாம் இராஜேந்திர சோழரின் தாய் வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர்
அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது.
சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர் துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம் வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள் “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம்
ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர் வேளிர் கடல் கடந்து ஈழத்தீவு சென்றதால் மாமன்னர் இராஜராஜ சோழரின் சகோதரியான குந்தவை நாச்சியாரால் மகளாகவே தஞ்சாவூர் சோழர்கள் அரண்மனையில் பாசமுடன் வளர்க்கப்பட்டவர் கொடும்பாளூர் வேளிர் மலையமான் எனும் சிற்றரசன் பின்னர் திருக்கோவிலூர் சிற்றரசனான வரலாறு கொண்ட வேளிர் எனும் சிற்றரசன் மகள் அரசி வானதி.
"காளாமுகர்கள்' என்பவர்கள் சைவ சமயத்தின் ஒரு பிரிவினராவர். அவர்கள் நெற்றியில் கருப்பு வண்ணத்தைப் பூசித் தோற்றத்தில் பயங்கரமானவர்களாகத் தெரிவார்கள். காளாமுகர்கள், தாங்கள் மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் பிறந்தவர்களாகக் கூறிக் கொண்டனர்.
தண்ணீர் குடிப்பதற்காக மனிதர்களின் மண்டை ஓட்டினையே காளாமுகர்கள் பாத்திரமாகப் பயன்படுத்தியுள்ளனர். சுடுகாட்டுச் சாம்பலையே தங்கள் உடல் முழுவதும் பூசிக் கொண்டனர். கையில் எப்போதும் மண்டை ஓட்டையும் தடியையும் வைத்திருந்தனர். சிவபெருமானுக்கு சோமபானம் "கள்" வைத்துப் படைத்தனர். நீண்ட ஜடாமுடியைத் தரித்திருந்ததோடு ருத்திராட்ச மாலைகளையும் அணிந்திருப்பர்.
சைவ சமயத்தைச் சார்ந்த இந்தக் காளாமுகர்கள் கர்நாடக மாநிலத்தில் அதிகமாக வசித்தனர். கொடும்பாளூரை ஆண்ட சிற்றரசான வேளிர்கள் சாளுக்கிய மற்றும் சேர நாட்டில் கொண்டிருந்த அரசியல் தொடர்பு காரணமாக"காளாமுகர்கள்" கொடும்பாளூருக்கு வந்து தங்கி யிருக்கக்கூடும் என்பது வரலாற்று அறிஞர்களின் பார்வை.
வேளிர் சிற்றரசான பூதி விக்ரமகேசரி, காளாமுக சைவப் பிரிவின் தலைவனான "மல்லிகார்ஜுனனுக்கு' ஒரு பெரிய மடம் கொடும்பாளூர் முகப்புப் பகுதியில் கட்டிக் கொடுத்து நாளடைவில் உணவு கிடைக்கும் சத்திரமாகவே மாறியது அம்மடத்தில் ஐம்பது காளாமுகர்களுக்கு உணவளிக்க பல கிராமங்களை மானியமாக அளித்ததாக மூவர் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
அந்த சத்திரம் இன்றும் கொடும்பாளூரில் சிதிலமாகி உள்ளது ஆனால் அக்காலத்தில் உணவளிக்க பல கிராமங்களை மானியமாக அளித்ததாக மூவர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டுத் தகவல். கொடும்பாளூரில் மூவர் கோவிலில் தோரணங்கள், விமானக்கூடுகள் ஆகியனவும் சோழர்கள் காலச் சிற்பிகளால் நேர்த்தியாகவே வடிக்கப்பட்டுள்ளது.
கோவில் ஒரு தாமரை மலர் போன்ற பீடத்தின் மேல் அமைக்கப் பட்டுள்ளது. அடிப்பகுதியைச் சுற்றியுள்ள யாளிகளின் சிற்பங்களும் நான்கு மூலைகளிலும் உள்ள மகரங்களின் திறந்த வாயிலிருந்து வெளிப்படும் சிறிய மனித உருவங்களும் கவர்கின்றன. கருவறைச் சுவற்றின் மூன்று பக்கங்களிலும் மாடங்கள் அமைந்துள்ளது.
கருவறையின் மாடங்களிலும் விமானத்திலும் காணப்படும் சிற்பங்கள் சோழர் சிற்பக்கலைத் திறனுக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. இச்சிற்பங்களின் அங்க அமைப்பு, அளவு, பரிமாணங்கள் மனித உடற்கூற்றோடு அமைந்திருப்பது சிறப்பானது. கோவிலுக்குச் சற்று கிழக்கே "ஐந்தலை' எனும் ஐந்து கோயில்கள் இருந்து காலப்போக்கில் அழிந்து தற்போது அடித்தளம் மட்டுமே உள்ளது.
மற்ற கோவில்களை விட காலத்தால் முற்பட்டதென வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.
கொடும்பாளூரில் கோவில் பகுதியைச் சுற்றி நடைபெற்ற தொல்லியல் துறையின் அகழாய்வில் கிடைத்த சிற்பங்கள் அனைத்தும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. காளாமுகர்களுக்கு பின்னர் மதுரை பாண்டியர் தஞ்சாவூர் சோழர்கள் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சத்திரம்
இடங்கழி நாயனார் நடத்தியது சிறப்பு அங்கு உள்ள நந்தி சோழ தேச மன்னர் அமைப்பு நந்தி கொம்பு இல்லாமல் இருக்கும், பாண்டிய மன்னர் கட்டிய ஆலயத்தில் நந்தி கொம்பு இருக்கும். இடங்கழி நாயனார் திருக்கோயிலுள்ள இடத்திலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் முசுகுந்தேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.சங்க காலத்தில் புகழ் பெற்ற நகரமாக விளங்கிய கொடும்பாளூா் சோழர் மாற்றுத் தலைநகர் உறையூருக்கும், பாண்டியர் தலைநகர் மதுரைக்குமிடையே இருந்த பெருவழிப்பாதையில் எழில்மிகு நகரமாகும். கோவலனும், கண்ணகியும் காவிப்பூம்பட்டிணத்திலிருந்து கொடும்பாளூா் சத்திரத்தில் உணவருந்தி சாவடியில் தங்கி அவ் வழியாக மதுரை சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கொடும்பாளூா், சிலப்பதிகாரத்தில் “கொடும்பை நெடுங்குளக் கோட்டகம்” எனவும். “கோனாட்டுக் கொடும்பாளூா்” என “கொங்கு மண்டல சதகம்” எனவும் குறிப்பிடுகிறது.
சிவத்திருத்தொண்டு புரிந்த 63 நாயன்மாா்களில் ஒருவர் “இடங்கழி நாயனாா்” ஆட்சி செய்த அவதார பூமி கொடும்பாளூா் எனபது இங்கு கூடுதல் சிறப்பு. இடங்கழி நாயனாா் குறுநில மன்னராக அதாவது வேளிர் சைவம் தழைக்கத் தொண்டு செய்தவா். பெரிய வரலாற்றுப் பின்னணி கொண்ட புனித பூமி அதற்கான தடயங்களை இழந்து சிற்றூராக மாறியுள்ளது அந்தப் பகுதியில் வாழும் மக்கள் இந்த பெருமை மிகு வரலாறு அறியாத நிலையில் வாழுவதைக் காணலாம். கொடும்பாளூரின் வரலாற்றுப் பின்புலத்தை வரலாற்று ஏடுகளில் மட்டுமே காண்பதும் நம் மனதிற்கு வருத்தத்தை அளித்தது
கொடும்பாளூரில் சிவனந்தன் சைவ நெறி தவறாத பக்தா் ஒருவா் வாழ்ந்து வந்தாா். சிவனடியாா்களின் பசிப்பிணி தீர திருவமுது செய்வதே இவரின் தலையாய பணி. ஒரு நாள் கூட இப்பணியில் அவர் தவறியதில்லை .ஒரு சமயம், திருவமுது படைக்கப் பொருள் கிடைக்காமல் அலைந்த சிவனந்தன். எங்கு தேடியும் கிடைக் கவில்லை. அன்றிரவு இந்தப்பகுதியின் அரசரான இடங்கழி நாயனாரின் அரண்மனைக்குள் புகுந்த சிவனந்தன், அங்கிருந்த தானியங்களைத் திருடிய போது அவரைப் பிடித்த அரண்மனைக் காவலா்கள், மறு நாள் காலை மன்னனின் முன் நிறுத்தினா்.“எதற்காக அரண்மனைக்குள் புகுந்து தானியங்களைக் கொள்ளையடித்தாய்?” என சிவனந்தனிடம் கேட்டாா் இடங்கழி நாயனாா். “நான் சிவனடியாா்களுக்கு அன்றாடம் உணவளிப்பது வழக்கம். ஆனால் அதற்குத் தேவையான பொருள்கள் கிடைக்கவில்லை. எனவே அரண்மனைக்கு வந்து தானியங்களைத் திருடினேன்,” என்றாா். சிவனந்தனின் கூற்றைக் கேட்ட இடங்கழி நாயனா், அவரை விடுதலை செய்து, அவரிடம் மன்னிப்பு கோரியதோடு சிவனடியாா்களுக்குத் தேவையான நெல்லையும் பொருளையும் இனி அரண்மனையிலிருந்து எடுத்துச் செல்லலாம் என ஆணையிட்டாா். சிவனந்தரது சிவப்பணி சத்திரம் தொடா்ந்து நடந்தது. சில காலம் கழித்து மழையின்றி பஞ்சம் நிலவி விளைச்சலும் பாதிக்கப்பட்டது. அரண்மணையிலிருந்த பொருட்களும் தீா்ந்தன. சிவனடியாா்களுக்குத் திருவமுது படைக்க முடியவில்லை. இடங்கழி நாயனாா் தம் நாட்டிற்கு ஏற்பட்ட சோதனையால் சிவனடியாா்களுக்கு அமுது படைக்க இயலவில்லையே என்று ஈசனிடம் வேண்டினாா். -விளம்பரம்-

அன்று தினம் நாமும் வழிபட்டோம். சுந்தரமூா்த்தி நாயனாா் தாம் அருளிச்செய்த திருத்தொண்டா் தொகையில் “மடல்சூழ்ந்த தாா்நம்பி இடங்கழிக்கு அடியேன்” என இவரது புகழினைப் பாடியுள்ளாா். சிவனடியாா்களுக்குத் திருவமுது படைக்க ஒரு காலத்தில் “அன்னம்பாலிக்கும் தில்லைத் திருச்சிற்றம்பலமாகத் திகழ்ந்த திருவூரான கொடும்பாளூா்” சென்று காலத்தை வென்று நிற்கும் இக்கலைக்கோயில்களைக் கண்டு மகிழ்வது வாழ்வியல் நிறைவு
சிவனடியார்களுக்குத் திருவமுது படைத்த இடங்கழி நாயனார் அவதாரத்தால் "அன்னம் பாலிக்கும் தில்லை திருச்சிற்றம்பலமாகத் திகழ்ந்த திருவூரான கொடும்பாளூர்' 1500 ஆண்டு காலம் சென்று காலத்தை வென்று நிற்கும் இக்கலைக் கோயில்களைக் கண்டு வருவது சிறப்பு.
கருத்துகள்