வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் போட்டி
கேரளா மாநில வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு.
வயநாடு நாடாளுமன்ற மக்களவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என கட்சித் தலைமை அறிவித்தது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வென்றார். அதனால், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, அந்தத் தொகுதி காலியான நிலையில், வயநாடு தொகுதிக்கு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்ததில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அந்தக்கட்சி தேர்தலுக்கு முன்னர் அறிவித்துவிட்டதனால், அந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற நிலையில் நாடு முழுவதும் தனிக் கவனம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்
நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்