திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் படத்தில்
காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்துள்ளதாக சில மதவாத அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில் மே 17 அமைப்பின் திருமுருகன் காந்தி என்பவர் கேப்டன் முகுந்த் வரதராஜனை போர்க் குற்றவாளி எனப் பேசியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி அஸ்வத்தாமன் புகார் அளித்துள்ளார். நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியானது. கல்லூரி காலம் முதல் ராணுவத்தில் இணைந்து வீர மரணம் அடைந்தது வரையிலான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வியல் உண்மைகள் அடங்கிய இந்தக் கதை படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இளம் வயது இளைஞராகவும், ராணுவ மேஜராகவும் தனது தேர்ந்த நடிப்பை சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்துவாக சாய்பல்லவி தனது தேர்ந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார்.
தற்போது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில் நிகர வசூல் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருக்கிற நிலையில் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகு படத்தில் காஷ்மீர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தற்போது திமுகவின் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்வான ஜவாஹிருல்லா என்பவர் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தை முற்றுகையிடப்பட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைதும் செய்யப்பட்டனர். இது திரைப்பட எதிர் விளம்பரமாக மாறியது அதுவரை பார்க்காமல் இருந்த பலரும் படம் பார்க்க வைத்தது.
இந்த நிலையில் திரைப்படம் குறித்துப் பேசிய மே 17 இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளரான டேனியல் என்ற திருமுருகன் காந்தி, அமரன் படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற வில்லனைக் கைது செய்யாமல் இந்திய ராணுவத்தின் முகத்தைப் பார் என சுட்டுக் கொலை செய்ததாக காட்சி அமைக்கப்பட்டு இருந்ததெனவும் மேலும் ஆயுதமற்ற காயம் அடைந்த எதிரியை சுட்டுக் கொல்லக் கூடாது என்பது உலக அளவில் சட்டம் அதை மீறினால் அது போர் குற்றம் என பேசி இருந்தார்.
இந்த நிலையில் தேசத்திற்காக உயிர் நீத்த கேப்டன் முகுந்த் வரதராஜனை போர் குற்றவாளி என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி கூறியதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியான அஸ்வத்தாமன் புகார் அளித்துள்ளார்.இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில், திருமுருகன் காந்தி என்ற நபர் மே 17 என்கிற ஒரு குழுவை நடத்தி வருகிறார். இந்த நபர் 06.11.2024 அன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் குறித்து பேசிய மேற்கண்ட நபர், காஷ்மீர் தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களை மக்கள் உரிமைப் போராளிகள் என்றும், காஷ்மீரின் தீவிரவாதக் குழுக்களை தேசிய இன விடுதலைப் போராளிகள் என்றும் கூறியுள்ளார்.
காஷ்மீர் தீவிரவாதக் குழுக்களை பாகிஸ்தான் எப்படி அழைக்குமோ அப்படி அழைத்திருக்கிறார் இந்த நபர்.மேலும், காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் இந்திய ராணுவத்தின் அசோக சக்ரா விருதைப் பெற்ற மிக உயர்ந்த மாவீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களை போர் குற்றவாளி என்றும் அருவருக்கத்தக்க விதத்தில் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு, தேசத்தின் இறையாண்மைக்கு எதிராகவும் பிரிவினை வாதத்தை நேரடியாகத் தூண்டுகிற விதத்திலும் அரசுக்கு எதிராக பகைமூட்டும் நோக்கத்தோடும் உள்ளது. மேலும் இந்திய ராணுவத்திற்கு எதிரான மனநிலையை மக்களிடையே விதைக்கும் நோக்கத்தோடும் இந்த மேற்கண்ட நபர் செயல்பட்டுள்ளார் இந்த நபர் ஏற்கனவே இந்திய தேசத்தை பொறுக்கி தேசம் என்று கூறியிருந்தார். அப்பொழுதே நான் அவர் மீது புகார் அளித்திருந்தேன். அப்பொழுதே தமிழ்நாடு காவல்துறை இவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற நபர்களின் தேசத்திற்கு எதிரான தொடர் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டிருக்கும். எனவே இனியும் தாமதிக்காமல் மேற்கண்ட நபர் மீது பாரதிய நியாய சட்டம் பிரிவு 152 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்
அதுபோல தமிழ்நாட்டில் சில இடங்களில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்னிறுத்தும் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், 'அமரன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அந்நிகழ்வில் கலந்து கொண்டோரில் சிலர், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். கூடவே, காஷ்மீர் பிரிவினைவாத பயங்கரவாதிகளை போராளிகள், தியாகிகள் என்ற கருத்து திரிப்பையும் வாசித்துள்ளனர்.
இதெல்லாம் பிரிவினைவாதத்தை ஊட்டும் திட்டமிட்ட சதிசெயல்கள் என்பதை தமிழ்நாடு காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை உருவாக்க இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களும், பிரிவினைவாத அமைப்புகளும், அமரன் படத்தை வைத்து, தீவிரமான சதி செயலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து, துவக்கத்திலேயே ஒடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அமைந்துள்ளது.
கருத்துகள்