தமிழ்நாடு முழுவதும் 45 மாவட்ட நீதிபதிகள் பணியிடமாற்றம்
செய்யப்பட்டனர். அதில் 13 பேர் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில்
சென்னை மாவட்ட நீதிபதிகளின் பணியிடமாற்ற விபரம் வருமாறு: திருப்பூர் மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிபதி ஜெ.ஓம்பிரகாஷ் சென்னை 14 வது சிட்டி சிவில் நீதிமன்றம் (சிபிஐ) ன் கூடுதல் நீதிபதியாகவும், தமிழ் சட்ட இதழ் இணை ஆசிரியர் டி.டி.சக்ரவர்த்தி சென்னை நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், சென்னை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி சி.திருமகள் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் 10 வது கூடுதல் நீதிபதியாகவும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவாளர் (சட்டம்) என்.முரளிதரன் நீலகிரி மாவட்ட நீதிபதியாகவும், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி ஜெ.சந்திரன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், தருமபுரி மாவட்டத்தில் குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி கே.கீதாராணி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 8 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி டி.மலர்வாலண்டினா அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும்,
கடலூர் மாவட்டக் குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி பி.வித்யா எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டாகவும், விழுப்புரம் குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.ஐஸ்வரானே சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சென்னை 8 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கருத்துகள்