உச்ச நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்றார்.
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. உச்ச நீதிமன்றத்தின் 51வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி வரை இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சஞ்சீவ் கண்ணா டெல்லியில் 1960 ஆம் ஆண்டு பிறந்தவருடைய தந்தை தேவ்ராஜ் கண்ணா டெல்லி உயர் நீதிமன்றத்தில் 1985 ஆம் ஆண்டு நீதிபதியாக இருந்தவர். தாயார் சரோஜ் கண்ணா, ஹிந்தி பேராசிரியராக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பணி செய்தார். சஞ்சீவ் கண்ணா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றிய சஞ்சீவ் கண்னா, 2004 ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். வேறு எந்த ஒரு நீதிமன்றத்திலும் சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கவில்லை. இதற்கு முன்பு ஒரு சில நீதிபதிகளே இப்படி வேறு எந்த நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்காமல் நேரடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருக்கிறார்கள்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பிரதமர் வாழ்த்து
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அவரது பதவிக்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்”.
கருத்துகள்