சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இணை 2 பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், ரூபாய்.60,000 லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் (பொறுப்பு) முத்துப்பாண்டி மற்றும் ஆவண தயாரிப்பு எழுத்தர் இ சேவை மையம் நடத்தும் புவணப்பிரியா உள்ளிட்ட இருவர் கைது. வெள்ளிக்கிழமை நவம்பர் மாதம் 15 ஆம் தேதி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் பழைய கண்டனூர் சாலையில் வசிக்கும் வைரவேல் தனது இட
த்தை விற்பனை செய்ய பத்திரப்பதிவு செய்த நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ள நபர் விடுப்பில் இருக்க அதில் (பொறுப்பு) அலுவலராகப் பணியிலிருந்த முத்துப்பாண்டி பத்திரப் பதிவு செய்த ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க ரூபாய் 60 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாகத் தெரிகிறது. பத்திரம் பதிவு செய்த பின்னர் அதைக் கூறிய நிலையில் தொடர்ந்து பத்திரப்பதிவும் நடைபெற்றது. ஆனால், லஞ்சம் கேட்ட பணத்தைக் கொடுக்காததால் பத்திரத்தைத் பணம் இல்லாமல் திருப்பித் தர மறுத்ததால் ஆத்திரமுற்ற நிலம் விற்பனை செய்த வைரவேல் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாரளித்தார்.
அதைத் தொடர்ந்து, நேற்று ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழிகாட்டுதலின் படி பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.60,000-தை அரசு தரப்பில் சாட்சிகள் முன்பு புகார்தாரர் வைரவேல் அரசு சாட்சி ஆகியோர் காரைக்குடி எண்.2 இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று சார்பதிவாளர் (பொறுப்பு) முத்துப்பாண்டியை பார்த்து தான் பதிவு செய்த ஆவணங்கள் சம்மந்தமாக கேட்க மதியம் 1.45 மணிக்குச் சென்றவர்களிடம், அங்கிருந்த சார்பதிவாளர் (பொறுப்பு) முத்துப்பாண்டியைச் சந்தித்து பத்திரம் ரெடியாகி விட்டதா என கேட்டதற்கு அவர் எல்லாம் ரெடியாகிவிட்டது, நான் கேட்ட பணம் ரூபாய்.60,000/-த்தைகா கொண்டு வந்திருக்கிறீர்களா? எனக் கேட்டதாகவும், பணத்தை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தவுடன்,
அவர் தன்னுடைய "பணத்தை ஆவண இ சேவை எழுத்தர் புவனப்பிரியாவிடம் கொடுத்து விட்டு, அவர் பணத்தை வாங்கிட்டேன்னு எனக்கு போன் பண்ணி சொல்லச் சொல்லுங்க எனக் கூறியதால், அங்கிருந்து புறப்பட்டு, ஆவண இ சேவை எழுத்தர் புவனப்பிரியாவின் அலுவலகத்திற்கு வைரவேலும் அரசு சாட்சியும் சென்று இ சேவை ஆவண எழுத்தர் புவனப்பிரியாவைச் சந்தித்து பத்திரம் ரிலீஸ் ஆகிவிடுமா? என கேட்டதாகவும், அதற்கு அவர் தன்னிடம் சப்ரிஜிஸ்டர் சார் கேட்ட பணம் ரூபாய்.60,000/-த்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா? என கேட்டதாகவும் அதற்கு வைரவேல் சாரை இப்ப பார்த்துட்டுத்தான் வருகிறேன், பணத்தை வாங்கியவுடன் உங்களை போன் பண்ணி வாங்கிட்டோம்னு சொல்லச் சொன்னாங்க எனக் கூறி பினாப்தலீன் இரசாயனப் பவுடர் தடவப்பட்ட பணம் ரூபாய்.60,000/-த்தை பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து புவனப்பிரியாவிடம் கொடுத்த உடன் புவனப்பிரியா அந்த பணத்தை வாங்கி, இரண்டு கைகளாலும் எண்ணிப்பார்த்துவிட்டு, ஒரு வெள்ளை நிற கவரில் வைத்து அவரது மேஜை மேல் வைத்துவிட்டு, அவரது மொபைல் தொலைபேசியில் இருந்து சார்பதிவாளர் (பொறுப்பு) முத்துப்பாண்டியை அழைத்து "பத்திரம் ரிலீஸ் பண்றதுக்கு சார் கேட்ட பணம் ரூபாய்.60,000/-த்தை வைரவேல் கொடுத்துவிட்டார் எனக் கூறிய பின்னர் அவர் வைரவேலிடம் உங்க ஆவணங்கள் எல்லாம் ரெடியாக இருக்கு, வாங்கிய பார்ட்டிகளைப் போய் வாங்கிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னதும், அரசு சாட்சியுடன் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, வைரவேல் சைகை செய்தததைத் தொடர்ந்து அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக்கண்காணிப்பாளர், என்ன நடந்தது என்று கேட்க, அவரும் பணம் கொடுத்தை கூறினார். பின்னர் காவல் துணைக்கண்காணிப்பாளர், ஆவண எழுத்தர் அலுவலகத்திற்குள் குழுவாகச் சென்று, அவ்வலுவலகத்தில் இருந்த புவனப்பிரியாவை வைரவேல் அடையாளம் காட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக்கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ குழுவினரிடம் புவனப்பிரியா சிக்கிய பின் அழுது புலம்பி, என்னைக் காப்பாற்றுங்கள், சப்ரிஜிஸ்டர் சார் கேட்ட பணம் ரூபாய்.60,000/-த்தை அவரிடம் கொடுப்பதற்காகத்தான் வழக்கம் போல் வாங்கிவிட்டதாகவும், அந்தப்பணம் தனக்கு உரியது இல்லை என்றும், மேஜை மீதிருந்த பணத்துடன். வெள்ளை நிற தபால் கவரினை காண்பித்து, அதில் தான் வைரவேலிடம் வாங்கிய பணத்தை வைத்துள்ளதாகவும், அந்தப்பணத்தை அப்படியே சப்ரிஜிஸ்டர் முத்துப்பாண்டியிடம் கொடுக்க உள்ளதாகவும் கூறவே. காவல் துணைக்கண்காணிப்பாளர் ஜான்பிரிட்டோ, அவரை ஆசுவாசப்படுத்தி பின்னர் தொடர் நடவடிக்கையாக காவல் துணைக்கண்காணிப்பாளர், காரைக்குடி எண்.2 இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று, ரூபாய்.60,000/- லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் முத்துப்பாண்டியை பிடித்த நிலையில் சோடியம் கார்பனேட் கரைசல்கள் பரிசோதனை நடத்தப்பட்டது பின்னர் விசாரணை முடிந்து வழக்கு குற்ற எண். 12/2024 U/S 7(a) and 12 of Prevention of Corruption Act 1988 as amended by the PC (Amendment) Act 2018 ன் படி லஞ்சம் பெற்ற காரைக்குடி இணை 2 அலுவலக சார் பதிவாளர் (பொறுப்பு) முத்துப்பாண்டி முதல் குற்றம் செய்த நபராகவும், இ சேவை ஆவண எழுத்தர் புவணப்பிரியா இரண்டாம் நபராகவும் கைது செய்யப்பட்டு சிவகங்கை கூட்டிச் சென்று அரசு மருத்துவமனையில் சான்றிதழ் பெற்ற பின்னர் இன்று அதி காலை உரிய நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் எத்தனையோ அதிகம் பணம் பெறும் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பலர் இருக்க இவர்கள் சிக்கியது பலரும் பேசும் நிலை உள்ளது. இந்த சம்பவம் கேள்விப்பட்டு அப் பகுதியில் இருந்து பல பத்திர எழுத்தர்கள் கடையை மூடி விட்டு உடன் தப்பித்த நிலையில் அப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது பத்திரப் பதிவு அமைச்சர் எனது நெருங்கிய உறவினர் என்னை யாரும் அசைக்க முடியாது என புதிய மாவட்டப் பதிவாளர் அராஜகமாகப் பேசுவதை நாமே பலமுறை பார்த்துள்ளோம் இந்த நிலை மாறவேண்டும் அல்லது அரசு இவர்களை ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்யாத வரை இலஞ்சம் லாவண்யங்கள் தொடரும். இன்னும் பல ஊழல் பூதங்கள் அலுவலகத்தில் ஒழிந்துள்ளது அதுவும் விசாரணை வளையத்தில் வரவேண்டும் என்பதே பலரின் கருத்தாகும்.
கருத்துகள்