இனி தன்னை, ஆள்வார்பேட்டை ஆண்டவர், உலகநாயகன், காதல் இளவரசன் போன்ற அடைமொழிகள் கொண்ட பட்டப் பெயர்களைக் கொண்டு யாரும் அழைக்க வேண்டாமென நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.
இனி தன்னை உலகநாயகன் உள்ளிட்ட பட்டங்களைக் கொண்டு அழைக்க வேண்டாமெனவும், தனது பெயரைப் பயன்படுத்தினாலே போதுமானது என்றும் கமல்ஹாசன் கருத்து.
இது குறித்து காரணமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டப் பெயர்களால் அல்லது அடைமொழிகள் கொண்டு என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன். உங்களின் இந்த பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.
சினிமாக் கலை, எந்தவொரு தனி மனிதனையும் விடப் பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக் கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலும் ஆனது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்து தான் சினிமா உருவாகிறது.
கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.
இனி தன்னை உலகநாயகன் உள்ளிட்ட பட்டங்களைக் கொண்டு அழைக்க வேண்டாமெனவும், தனது பெயரைப் பயன்படுத்தினாலே போதுமானது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும், ஊடக நண்பர்களும், திரைத்துறையச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்ய கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இத்தனை காலமாக நீங்கள் என்மேல் காட்டிவரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்தில் இருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதை விளக்கவில்லை அதனால் மக்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.'""ஆழ்வார்பேட்டை ஆண்டவா…
வேட்டிய போட்டு தாண்டவா" இது அவரது பாடல்...கடந்த இரண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் ஆதரித்த மநீமை கட்சி தேர்தல் ஒப்பந்தம் மூலம் கடந்த தேர்தலில் ஒரு மாநிலங்களவைத் தொகுதி வழங்கிய நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் மட்டுமே செய்த நிலையில் அந்த பதவி முதல் வாய்ப்பில் வழங்கப்படவில்லை இனி அந்த ஒப்பந்தம் அடிப்படையில் வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு ஆண்டவருக்கு அதிகம் இருந்த நிலையில் தற்போது வரை ஏமாற்றமே மிஞ்சியது ஆகவே விரைவில் அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவாரா என்பதே தற்போது உள்ள நிலை. ஆகவே ஆண்டவரின் அடுத்த அறிக்கை வரும் போது சில உண்மைகள் வெளிவரும் அதுவரை நாமும் காத்திருப்போம்.
கருத்துகள்