தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தற்காலிகத் தமிழ் ஆசிரியை பள்ளி வளாகத்திலேயே முன்பிருந்த காதலனால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம்
தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து தொடர்ந்து காவல்துறை என ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் மல்லிபட்டினத்தில் முகாமிட்டுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைந்தார். இந்த நிலையில் பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு விளக்கமளித்துள்ளார்.
அந்த அறிக்கை, கடந்த 10.06.2024 முதல் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக தமிழ் ஆசிரியராக செல்வி ரமணி 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பாடம் போதித்து வந்தார்.
இவருக்கு முதல் பாட வேலை இல்லை என்பதால் நேற்று (20.11.2024) ஆம் தேதி காலை 10.10 மணிக்கு ஆசிரியர்களுக்கான ஓய்வு அறை வராண்டாவில் சின்னமனை மதன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக ஆசிரியை ரமணி கழுத்து வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு ஓடும் போது ஆசிரியர்கள் மதனைப் பிடித்து காவல் துறையினரிம் ஒப்படைத்தனர். ஆசிரியை ரமணி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.தற்காலிக தமிழாசிரியர் ரமணியைக் கொன்ற நபரின் பெயர் மதன் குமார், (வயது 28); சின்னமனைதான் சொந்த ஊர்; 10 ஆம் வகுப்பு படித்தவர்.
நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்கிறார். தங்கை திருமணத்திற்காக ஊருக்குத் திரும்பியவர், மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.
ரமணியும், மதன்குமாரும் ஒரு ஆண்டிற்கு மேல் காதலித்த நிலையில். மூன்று மாதங்களுக்கு முன், மதனின் பெற்றோர், ரமணி வீட்டுக்குச் சென்று பெண் கேட்டபோது; அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
திடீரென ரமணியின் பெற்றோர் மனம் மாறி. மதன் நடத்தை சரியில்லாதவர் என யாரோ ஒருவர் கூறியதால் வந்த மாற்றம் எனக் கூறப்படுகிறது. பெற்றோர் பேச்சை ரமணி தட்டவில்லை; மதனுடன் பேசுவதை நிறுத்தினார்.
மதன், நேற்று முன்தினம் மாலையில், திருமணம் குறித்து ரமணியிடம் பேசியுள்ளார். ரமணி அவரை திட்டிவிட்டு போய்விட்டாராம். அந்த ஆத்திரத்தில் தான் கத்தியுடன் பள்ளிக்கு வந்து, ரமணியுடன் பேசிப் பார்த்தும் பலன் இல்லாததால், கத்தியால் குத்தியிருக்கிறான் கொலையாளி
பள்ளியில் இருந்து 150 மீட்டரில், மாவட்ட ஆட்சியர் வருகைக்காக காவலில் நின்று கொண்டிருந்த சேதுபாவாசத்திரம் காவலர்கள் வந்து, மதனை பிடித்துச் சென்றனர். பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தின் பல ஊர்களில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இது தனிப்பட்ட நபர்கள் பிரச்சினைகளால் நடந்த கொடூரமான கொலை, இது கல்வித்துறை சார்ந்த நிகழ்வுகள் இல்லை.
கருத்துகள்