நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவின் சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ஹிந்து சாசுவத நிதி லிமிடெட் நிறுவனத்தில்
அதன் முதலீட்டாளர்களிடம் ரூபாய் 525 கோடியை மோசடி செய்ததாக உள்ள புகாரில் அதன் தலைவரான சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளர் மற்றும் வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளார்கள்
இந்த நிலையில் மோசடி தொடர்பாக மயிலாப்பூர் ஹிந்து சாஸ்வத நிதியம், நிர்வாக இயக்குனரான தேவநாதன் யாதவின் முழு சொத்துக்களையும் பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. முதலீட்டாளர்களின் பணத்தை அபகரித்த விவகாரத்தில், மயிலாப்பூர் ஹிந்து சாஸ்வத நிதி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் தேவநாதன் யாதவ்
ஆகியோரின் சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும். மயிலாப்பூர் ஹிந்து சாஸ்வத நிதி முதலீட்டாளர்கள் மற்றும் வைப்பாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எம்.சதீஷ்குமார் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி பி.வேல்முருகன் திங்கட்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
தேவநாதனின் வின் தொலைக்காட்சி சேனலின் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவநாதன் யாதவ் மற்றும் ஊழியர்கள் இரண்டு நபர்களான ஆர் குணசீலன் மற்றும் டி மகிமைநாதன் ஆகியோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். சென்னை மயிலாப்பூரில் செயல்பட்ட தி மயிலாப்பூர் ஹிந்து சாஸ்வத நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடமிருந்து 24 கோடியே 50 லட்சம் ரூபாயைப் பெற்று மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஆகிய ஏழு நபர்களுக்கு எதிராக சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைதும் செய்தனர். இந்த நிலையில், 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதால் அமலாக்கத்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக்கோரி முதலீட்டாளர்கள் நலச் சங்க தலைவர் சதீஷ்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் அஸ்வின்குமார் ஆஜராகி வாதிட்ட போது, ஆஜரான அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறைக்குக் கிடைத்த தகவல்கள் மூலம் வழக்கு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விரைவாக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் வின் தொலைக்காட்சி உரிமையாளர் தேவநாதன் யாதவ், கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்
அவரது தேர்தல் நடவடிக்கைகளில் அவரிடம் பல கோடிகள் பணம் பல முக்கிய நபர்கள் பெற்றிருப்பதும் விசாரணை தெரிய வந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட நபர்களின் குரலாகும்.
கருத்துகள்