முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் வழியில் உயர் கல்வி பயின்றதாக போலியான சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த நபர்கள் மீது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி இனி நடவடிக்கை பாயும்

மதுரை மாவட்டம், திருமங்கலம் சக்திராவ், சென்னை உயர்நீதிமன்றம்  மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ஆம் ஆண்டில் நடத்திய குரூப் 1 தேர்வில், பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு, தமிழ் வழிக் கல்வியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தவறான முறையில் வழங்கப்பட்டதாகவும்,





மேற்கண்ட தேர்வில் போலியான சான்றிதழ் பலர் வழங்கியதால் வைலை பெற்றதற்கு நீதிமன்றத்தில் கண்டனம் தெரிவித்தனர் நீதிதிகள் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு காலக்கெடு விதித்து. 




2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் போலியான சான்றிதழ்கள் கொடுத்து முறைகேடு செய்து பதிவு செய்த வழக்கை விசாரிக்க ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கி  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.




வெற்றி பெற வேண்டுமென்ற கனவோடு கண் விழித்து விளக்கு வெளிச்சத்தில் பலர் படிப்பதாகவும், சிலர் குறுக்கு வழியில் வெல்வதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.





"தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ஆம் ஆண்டில் நடத்திய குரூப் 1 தேர்வில், தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு, தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான அரசாணை படி 20 சதவீத இடஒதுக்கீட்டுச் சலுகை ரோஸ்டர் முறையில் வழங்கப்பட்டது.





இதன் மூலம் தகுதி இல்லாத பலர் தமிழ் வழியில் நேரடியாகக் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டுச் சலுகைகள், தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு வழங்குவது சட்டவிரோதம்.




இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவுகளை அரசு தரப்பில் உயர் அலுவலர்கள் நிறைவேற்றவில்லை.




ஆகையால், உயர் அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்தனர்.




அப்போது, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தரப்பில் தாக்கல் செய்த நிலை அறிக்கையில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்த நான்கு பேர் மட்டுமே போலியான சான்றிதழ்களை அளித்துள்ளனர்.



அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட தமிழ் வழி கற்றல் சான்றிதழில் பிரச்சனைகள் இல்லை.



சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்ற 16 நபர்கள் இந்தச் சான்றிதழைச் சமர்ப்பித்துள்ள நிலையில், அவர்களின் 3 நபர்கள் மீது மட்டுமே சந்தேகமுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நீதிபதிகள், "நமது இந்தியாவில், லட்சக்கணக்கான ஏழை எளிய மாணவர்கள் அரசு பணியாளர்களுக்கான குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவுகளோடு இரவு நேரங்களில் கண் விழித்து விளக்கு வெளிச்சத்தில் மிகவும் சிரமப்பட்டு படித்து த் தேர்வுகளை எழுதுகின்றனர். இது போன்று குறுக்கு வழியில் போலியான சான்றிகள் வழங்கித் தேர்வெழுதி குறுக்கு வழியில் வெற்றி பெறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்ட விரோதமானது.


இது ஏழை எளிய மாணவர்களின் கனவைப் புதைக்கும் செயலாகும். எனத் தெரிவித்தார்கள்.        மேலும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தவிர இதர பல்கலைக்கழகங்களில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இரண்டு மாத காலம் அவகாசம் உள்ள நிலையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழங்கப்படுகிற இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.  இதில் கவனிக்க வேண்டிய  விஷயம் யாதெனில்            பொதுப் பணிகள்  2010 - ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் விதிகள் படி சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி- வழிகாட்டு நெறிமுறைபடி அரசாணை வெளியிடப்பட்டது.தமிழ் வழியில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து பட்டப் படிப்பை படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் மொத்த ஒதுக்கீட்டில் 20 சதவீதம் இட ஒதுக்கீடும். மேலும் 

பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியிலேயே படித்திருக்க வேண்டும். ஆங்கில வழி மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட இதர மொழிகளில் படித்து விட்டு, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடுகள் பொருந்தாது, பணிகளுக்கு தேர்வு செய்வது கிடையாது, தனித் தேர்வர்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது.



தமிழ் வழியில் நேரடியாகப் படித்ததற்கான கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க மெய்த்தன்மை குறித்து சரியாக ஆராய்ந்த பின்னரே, இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அரசாணை கூறுகிறது. இந்த நிலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 320 (3) (c)- ன்படி, தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர்கள் மற்றும் சார்நிலைப் பணியாளர்கள் மீது தமிழ்நாடு குடி முறைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீடு மற்றும் மறு ஆய்வு மற்றும் சீராய்வு மனு தொடர்பான ஆவணங்களை


அரசு தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்து 1954-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், தேர்வாணையத்தின் கருத்தினைக் கோரும் நிலையில்.  மதுரை காமராஜர் பல்லைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 உயர் கல்வி நிறுவனங்களுக்கு திறந்த மற்றும் தொலைநிலைக் கல்வியை வழங்க யுஜிசி சட்ட விதிகள் படி உரிய அனுமதியை வழங்கியுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 22 பட்டப்படிப்புகளை இந்த முறையில் வழங்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதில் 12 இளநிலை பட்டப்படிப்புகளும், 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் அடங்குகின்றன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு 30 பட்டப்படிப்புகளை இந்த வழியில் கற்பிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.


இதில் 12 இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் 18 முதுநிலை பட்டப்படிப்புகளும் வருகின்றன. பல்வேறு பல்கலைக்கழகங்களின் சார்பில் வழங்கப்படும் தொலைநிலைப் பட்டப்படிப்புகளில், எந்தந்தப் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் உள்ளது என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை யுஜிசி-யின் www.ugc.ac.in/deb இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் உள்ள தொலை நிலைக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு யுஜிசி வசம் வந்ததைத் தொடர்ந்து, திறந்த நிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) ன்படி 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது.

 அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது. அந்த அறிவிப்பின் போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலை நிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.

நான்கு பல்கலைக்கழகங்கள் மட்டுமே அனுமதி பெற்றதன் காரணமாக அதில் சென்னைப் மெட்ராஸ் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றதைத் தொடர்ந்து, தொலைநிலைப் படிப்புகளில் குறிப்பிட்ட அளவில் பேராசிரியர்கள் நியமனம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற நிபந்தனையை யுஜிசி விதித்தது. இந்த நிபந்தனையின் காரணமாக சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த 51 படிப்புகளில் 3 படிப்புகளுக்கு மட்டுமே யுஜிசி அனுமதி கிடைத்துள்ளது. மீதமுள்ள 48 படிப்புகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்தது. மேலும் பல பல்கலைக்கழகங்கள் இது போல நடத்திப் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் வழக்குகள் குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் அவ்வப்போது உயர் கல்வி மன்றம் உதவியில் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும்.

அரசுத் துறைகள் தங்கள் அலுவலர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டால் அந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட அலுவலர்கள் அரசிடம் மேல்முறையீட்டு மனு செய்து கொள்ள முடியும்.

அரசே அதற்கு தண்டனை வழங்கும். நேர்வுகளில். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மறு ஆய்வு மனுவின் மீதும் அரசு தேர்வாணையக் கருத்தினை பெற்று அதன் பிறகு உரிய ஆணை பிறப்பிக்கும்.

மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என தேர்வாணையம் பரிசீலித்து அரசுக்கு தனது ஆலோசனையை வழங்குகிறது. அரசு தேர்வாணையத்தின் ஆலோசனையினை ஏற்று ஆணை பிறப்பிக்கும். தேர்வாணைய ஆலோசனையிலிருந்து மாறுபட்டு அரசு ஆணை பிறப்பிக்கும் இனங்களை தேர்வாணையம் தனது ஆண்டறிக்கையில் குறிப்பிடும்.  பனிரெண்டாம் வகுப்பு அதாவது பிளஸ் டூ தேர்ச்சி பெற்று தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கலைப் பட்டம் பெற்றால், அரசு பணிகளுக்குச் செல்லவும், உயர்படிப்புகளுக்குச் செல்லவும் அது பயன்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது மேலும் ப்ளஸ் டூ தேர்ச்சிபெறாத பட்சத்தில் அந்தப் பட்டப் படிப்பு அடிப்படையில் உயர்கல்விக்குச் செல்லமுடியாது. மேலும் அரசு பணியும் கோரமுடியாது என அரசாணை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் உத்தரவும் உள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், தமிழ்நாட்டில் மட்டுமே தொலைநிலைக் கல்வியை வழங்க முடியும். அதன் பயிற்சி மையத்தை வேறு மாநிலங்களில் நிறுவக் கூடாது என்றும் யூ.ஜி.சி கூறிவிட்டது, அரசுப் பணிக்குச் செல்வதற்கான போட்டித் தேர்வுகளில் தான் முழு கவனமும் செலுத்த வேண்டும் என நினைக்கும் பலருக்கும், தொலைநிலைக் கல்வி முறை கைகொடுக்கிறது. அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் பதவி உயர்வுக்குத் தேவையான படிப்புகளை தொலைநிலைக் கல்வி மூலமாகவே படிக்கின்றனர். இப்பட்டியலில் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள், நீதிபதிகள், துணை வேந்தர்கள் மற்றும் குரூப் 1 மற்றும் குரூப் 2 பணியாளர்கள் என தமிழ்நாட்டில் 25 சதவீதம் வரை அரசு பணியில் உள்ளனர். அதனால், அதன் நம்பகத்தன்மையில் சந்தேகம் தேவையில்லை என யூஜிஜி மற்றும் பல்கலைக்கழகத்தினர் கருத்து. இந்த நிலையில் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை கற்ற பின்னர் பட்டம் பெற்ற நபர்கள் தொலை நிலைக் கல்வி மூலம் பெற்றால் செல்லும் என தமிழ்நாடு GO (MS) எண் 107 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் அரசாணை உள்ள நிலையில் அந்த அரசாணையை நீதிமன்றத்தில் தற்போது சவால் செய்து வழக்குத் தாக்கல் செய்த நிலையில் தீர்ப்பு வந்தால் இங்கு பணியில் இருக்கும் 25 சதவீதம் பணியில் இருக்கும் பலரும் பணியில் தொடர்வார்களா இல்லை அதற்கும் ஆபத்து வருமா என்பது தெரியும்.ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மதன் கேப்ரியல் எதிர் என்.ரமேஷ் வழக்கிலும் எஸ். ராமன் மற்றும் பலர் எதிர் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வழக்குகளில் தீர்ப்பு வந்த நிலையில் பதினைந்து ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் சரியான புரிதலின்றி வழக்குகள் தாக்கல் செய்யப்படும் நிலையில் உள்ளதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் யூஜிசி எனும் பல்கலைக்கழகங்களின் மானியக் குழு மற்றும் மாநிலத்தின் உயர் கல்வித்துறை சார்ந்த அணைத்து அரசாணைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஒருங்கிணைந்த ஒரு சட்டத் திருத்தம் உருவாகாமல் இந்தப் பிரச்சினை இறுதியில் தீர்வாகப் போவதில்லை. பல்கலைக்கழகங்களில் வழங்கும் பட்டப் படிப்பு அரசு பணியில் செல்லும் என்ற உறுதிமொழி அடிப்படையில் உள்ள அரசாணையின் படி தான் மாணவர்கள் சேர்க்கை நடந்து படித்து முடித்து பின்னர் பட்டமளிப்பும் நடக்கிறது. ஆனால் அந்தப் படிப்பு செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து வேறு உத்தரவு எதிர் நோக்கும் நிலை என்பது அரசின் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மீறும் செயலாகும். The Doctrine of Promissory Estoppel குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய முன் தீர்ப்புகள் உள்ளது மேலும் அணைவரும் கல்விக் கட்டணம் செலுத்திய பிறகு தான் படித்துப் பட்டம் பெற்ற பின்னர் செல்லாத நிலை வந்தது குறித்து நுகர்வோர் ஆணைய முறையீடு மூலம் இழப்பீடு பெறத் தகுதி உண்டு ஆனால் அது போல இதுவரை யாரும் துணிந்து செயல்படவில்லை என்பதே உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...