மனையிடமாகப் பிரிக்க ஒப்புதல் ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றம் செய்வதாக ஆத்திரப்படும் மக்கள்.
சேலம் மாவட்டம் ராசிபுரம் நகர் மையத்திலுள்ள பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியில் 7 கி.மீ தொலைவில் உள்ள அணைப்பாளையத்திற்கு மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதையொட்டி சர்ச்சைகள் வெடித்தது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்துகிறார்கள். பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதை தடுப்பதற்காக ‘ராசிபுரம் மக்கள் நலக்குழு’ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி வியாபாரம் பாதிப்புகளுக்கு உள்ளாகிக் கவலைப்படும் வியாபாரிகள் கடையடைப்பு, உண்ணாவிரதம் என போராடி வருபவர்கள்,
நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளனர்.பேருந்து நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அருகில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மனையிட விற்பனை நிறுவன உரிமை யாளருக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன இந்த இடத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. இந்தச் சூழலில் அரசியல் கட்சியினர் சிலர் இதில் தலையிட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஆதாயம் பெற்றுக் கொண்டு பேருந்து நிலையத்தை இங்கு மாற்றவைத்ததாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்த போதும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டாக்டர் மதிவேந்தன் கவனிக்க வில்லை என ராசிபுரம் மக்கள் நலக்குழுவினர் ஆதங்கப்படுகிறார்கள் இதுகுறித்து பேசிய அக்குழுவின் செயலாளர் நல்வினைச் செல்வன், “பேருந்து நிலையத்தை மையப்படுத்தித்தான் நகர வர்த்தமுள்ளது. பேருந்து நிலையத்தை 7 கி.மீ, தூரத்துக்கு அப்பால் கொண்டு போனால் வர்த்தம் முற்றிலும் முடங்கும். அதுவுமில்லாமல் பேருந்து நிலையத்துக்காக தேர்வுசெய்யப்பட்ட இடம் நீர் நிலைப் புறம்போக்கு. சேலம் ரியல் எஸ்டேட் நிறுவனம் அந்தப்பகுதியில் லே அவுட் போட்டுள்ளது.
அந்த இடத்துக்காக இந்த நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளது. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குச் சொந்தமான இடம் 200 ஏக்கர். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக யாரும் வீடுகள் கட்டவில்லை. இந்த நிலையில், அணைப்பாளையம் ஏரிக்கு அருகில் 7 ஏக்கர் 3 சென்ட் நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் மொத்த நிலத்தில் பத்து சதவீதம் நிலம் ஒதுக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி பேருந்து நிலையத்துக்காக நகராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளது. இப்போது இங்கு பேருந்து நிலையம் வரப்போகிறது என்றதும் ஒட்டுமொத்த 193 ஏக்கர் நிலத்தின் மதிப்பும் கூடியுள்ளது. இதை முடித்துக் கொடுத்ததற்காக அரசியல் கட்சியினர் ஆதாயம் பார்த்திருக்கிறார்கள்.இந்தப் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் மதிவேந்தனுக்கு 2 மாதங்களுக்கு முன்பே கடிதம் எழுதினோம். அதற்கு இதுவரை அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை” என்கிறார். இதுதொடர்பாக அமைச்சர் மதிவேந்தன் தரப்பு விளக்கம் கேட்ட அவரை பத்திரிகையாளர்கள் பலமுறை தொடர்பு கொண்ட போதும். கிடைக்கவில்லை. இத்தனை மக்கள் ஒரு பிரச்சினைக்காக போராட்டம் நடத்தும் போது தொகுதியில் அமைச்சராக இருப்பவர் அதைக் கண்டும் காணாமல் கடந்து போவது எப்படி சரியாக இருக்க முடியும்? என்பதே அப் பகுதி மக்கள் தரப்பில் வரும் தகவல்.
கருத்துகள்