தேசிய உணர்வு கொண்ட ராணுவ மாவீரர் கதை ‘அமரன்’
பார்த்த கையோடு பரத்வாஜ் ரங்கனுடனான ராஜ்குமார் பெரியசாமியின் உரையாடலும் பார்த்தேன். இந்திய அரசின் 'கவுன்ட்டர் இன்சர்ஜன்சி, கவுன்ட்டர் டெரரிசம்’ தனது படத்திற்கான அரசியல் பின்னணி என்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. அவர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்சனை அவரது மனைவி ஹிந்து ரெபக்கா வர்கீசின் பார்வையின் வழி கதை சொல்கிறார். மனேராதியமான காதலும் உக்கிரமான வன்முறையுமான கலவை தான் அமரன்.
ஹாலிவுட் யுத்தப் படங்களால் இயக்குனர் ஆதர்ஷம் பெற்றிருக்கிறார். மார்ட்டின் ஸ்கோர்சிசே, டெரன்ஸ் மாலிக், ஸபீல்பெர்க் போன்றவர்களை மேற்கோள் காட்டுகிறார். யுத்தம் தொடர்பான அற்புதமான படங்களை எடுத்த ஆலிவர் ஸ்டோன், கொப்பாலோ, சோடர்பர்க் போன்றவர்களிலிருந்து தேர இவருக்கு ஏதுமில்லை. யுத்தத்தில் இரு தரப்புகள் உண்டு. பெரும் ஆயுதங்களுடன் போரிடும் அரசுத் தரப்பு. சமபலமற்ற நிலையில் போரிடும் ஆயுத இயக்கங்கள். இதில் இடம் பெறுபவர்களின் வாழ்வில் உயிரீகமும் அரசியலும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிறது.
இதில் தொழில்நுட்ப அழகு, செய்நேர்த்தி, நடிகர் நடிகையரின் நடிப்பு பற்றிப் பேசுவதற்கு எத்தனையோ திரை விமர்சனம் செய்ய பலரும் இருக்கிறார்கள். நாம் வரலாறும் அரசியலும் பற்றி மட்டுமே பேசுவோம். நடிகர் இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பிலிம் மேக்கர் கமல்ஹாசன், மற்றும் அவரது அண்ணன் மருமகன் மணிரத்னம் எடுத்த இஸ்லாமியர்கள் குறித்த படங்களின் தொடர்ச்சி தான் அமரன்.
ஏ.ஆர்.முருகதாஸ், மணிரத்னம் சிந்தனைப்பள்ளி சார்ந்த ராஜ்குமார் பெரியசாமியிடம் யுத்தபூமி குறித்த மேதைமை கொண்ட ஒரு படத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. அரசு தரப்பில் நின்று போரைப் பற்றி மட்டுமே பேசும் படம் அமரன்.
ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தை இயக்க; கமலஹாசன் தயாரித்திருக்கிறார். இதுவரை நடிப்பை வெளிப்படுத்தாத சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கதைநாயகனாக சிவகார்த்திகேயனுக்கு கதை நாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமியின் மேக்கிங் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருக்கிறது. இந்திய ராணுவத்தில் மேஜர் பணியாற்றி சண்டையின் போது வீர மரணமடைந்த
தமிழ்நாட்டைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது. அதன் காரணமாகவும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஹைப் எகிறியது. படமானது பான் இந்தியா அளவில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
முக்கியமாக சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு கொண்டாடப்படுகிறது. அதிலும் சாய் பல்லவி மிகச்சிறப்பாக ஸ்கோர் செய்து விட்டார். படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்லாதரவு
கிடைத்திருக்கிறநிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அமரன் படம் குறித்து செய்தி விமர்சனம் அவரது எக்ஸ் தளத்தில், "நான் ராணுவத்துக்குச் செல்ல வேண்டும் என்று எனது பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள். என்னுடைய எட்டாம் வகுப்பில் நான் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றேன். இருந்தாலும் பயம் காரணமாக அதில் சேர்ந்து படிக்கவில்லை. இப்போது அமரன் படம் பார்த்து, நான் செய்தது தவறு என உணர்கிறேன். அந்தப் பள்ளியில் நான் படித்திருக்க வேண்டும். மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை ஒரு வீர காவியம். சிவகார்த்திகேயன் அதை முழுமையாக்கியிருக்கிறார். சாய் பல்லவி போன்று படத்தின் தொடக்கத்தில் நானும் அழுதேன். கடைசியில் அவர் தனது அழுகையை கட்டுப்படுத்தியது போல் நானும் செய்தேன். இயக்குநர் எல்லாத் துறையிலும் சிறப்பு செய்திருக்கிறார். அவரைக் கொண்டாட வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
. இந்திய இராணுவத்தின் ராஜ்புத் படைப்பிரிவின் ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜன், தனது அணியின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்த அச்சமற்ற தலைவராக நினைவு கூறப்படுகிறார். ஜம்மு காஷ்மீரில் 44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் என்ற உயரடுக்கு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவில் மேஜர். தமிழ்நாட்டின் சென்னையில் ஏப்ரல் மாதம் 12, ஆம் தேதி 1983 ஆம் ஆண்டில் பிறந்த முகுந்த் வரதராஜன், சிறு வயதிலிருந்தே தலைமைப் பண்புகளையும் வலுவான கடமை உணர்வையும் வெளிப்படுத்தினார். 2014 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது அவரது இறுதி தியாகத்திற்குப் பிறகு அவரது துணிச்சலும் அவரது நாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் அவரை ஒரு பிரியமான நபராக ஆக்கியது. முகுந்த் தனது நீண்ட கால காதலியான ஹிந்து ரெபேக்கா வர்கீஸை 2009 ஆம் ஆண்டில் மணந்தார், ஒரே மகளான. அர்ஷியா முகுந்த், 2011 ஆம் ஆண்டில் பிறந்த நிலையில்.
முகுந்த் வரதராஜன் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் வணிகவியல் இளங்கலைப் படிப்பையும், சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பத்திரிகையில் டிப்ளமோவையும் முடித்தார்.
ஒரு இராணுவக் குடும்பத்தில் கேரளா கிறிஸ்துவரான இந்து ரெபேக்கா வர்கீஸ் கல்லூரிப் படிப்பிற்காகச் சென்னை வந்தார். அதே கல்லூரியில் தான் முகுந்த் படித்தார். இருவரும் பல ஆண்டுகள் காதலித்த நிலையில், 2009 ஆம் ஆண்டு அவர்களுக்குத் திருமணம் நடந்தது 2011 ஆம் ஆண்டு அர்ஷியா முகுந்த் என்ற பெண் குழந்தை பிறந்தது. மேஜர் முகுந்த் வரதராஜன் தியாகத்திற்கு அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டதை இந்து ரெபேக்கா அப்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றுக் கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் உடனிருந்தார்.ரெபேக்கா வர்கீஸ் இப்போது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கிரேஸ்டன்ஸ்ல் வசித்து வருகிறார். அமரன் படத்தில் அவர் ஆசிரியை பயிற்சி பெறுவது போல காட்டப்பட்டுள்ளது இப்போது அவர் ஆஸ்திரேலியாவில் ஆசிரியராக பணியாற்றுகிறார். தாத்தா மற்றும் இரண்டு மாமாக்கள் இராணுவத்தில் பணியாற்றினர். இது இராணுவத்தில் அவர் சேரவும் தனது நாட்டிற்காக போராடவும் அவரைத் தூண்டியது. கல்வியை முடித்த பிறகு, மேஜர் முகுந்த் சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) சேர்ந்தார் , அங்கு அவர் தனது இராணுவப் பயிற்சியை முடித்தார். இந்திய இராணுவத்தில் பணியமர்த்தப்பட்டவர், 22 ராஜ்புத் படைப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.
பின்னர், அவர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடுமையான பணிகளுக்காகவே அறியப்பட்ட இந்திய இராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவான ராஷ்ட்ரிய ரைபிள்ஸில் சேர்ந்தார், அங்கு அதிகாரிகள் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு சவாலான சூழ்நிலையில் செயல்படுகிறார்கள். ஆயுதப் படைகளில் அவரது வாழ்க்கை, பின்னடைவு, தைரியம் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்டது. இது தற்போது மேஜர் முகுந்தாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கதாபாத்திரத்தில் சில உண்மை விபரங்கள் ஏன் இல்லை என்பது இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கு மட்டுமே வெளிச்சம். நிஜ வாழ்க்கையில் மேஜர் முகுந்த் ஒரு ஹிந்து தமிழ் பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை மறைத்து தெலுங்கு பேசும் ஒரு சமூக நபராக திரையில் காட்ட என்ன அவசியம் ? படத்தின் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான பிராமணர் ஐயங்கார் சமூகம் சார்ந்த நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு பிரமாண சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரை அவரது சொந்த அடையாளத்துடன் காண்பிப்பதில் ஏதேனும் பிரச்சினையா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
தற்போது இந்திய நாட்டில் இராணுவம் குறித்து தெளிவான பார்வை ஒவ்வொரு மாணவருக்கும் தேவை
அதுவே நம் தேசத்தின் பற்று உறவை வளர்க்கும் காரணியாகும். சைனிக் பள்ளி மீதான மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை மக்கள் உணரும் விதமாக படம் அமைவதே வெற்றி பெறக் காரணமாக அமைந்தது. கடந்த செப்டம்பர் மாதம். 8 ஆம் தேதி சென்னையில் அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA)-யில் நடைபெற்ற கண்கவர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில், 39 பெண் ராணுவ அதிகாரிகள் உட்பட 258 ராணுவ அதிகாரிகள் இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவு களில் இணைந்தனர். பயிற்சி அகாடமியின் புகழ்மிக்க பரமேஸ்வரன் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணியன் முக்கிய விருந்தினராகப் பங்கேற்று, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஓராண்டு காலம் கடுமையான பயிற்சியின் நிறைவாக இவர்கள் ராணுவத்தில் அதிகாரிகளாக இணைகின்றனர். நட்பு நாடுகளைச் சேர்ந்த ஐந்து பெண் ராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேர் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். அவர்கள் பிற நாடுகளுடனான இந்தியாவின் நடப்புறவைப் பிரதிபலிக்கின்றனர். மேலும், இந்திய ராணுவத்தின் தளராத நம்பிக்கை கொண்ட எதிர்காலத் தலைவர்களாக பரிமளித்துள்ளனர்.
கருத்துகள்