முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் நாளை விசாரணை.
தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து அவதூறான கருத்து பேசியதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் மதுரை திருநகர் காவல் நிலையம் மூலம் பதிவான FIR குற்ற எண் 612/ 2024. ன்படி சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் Bharatiya Nagarik Suraksha Sanhita 482.பிரிவில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் நடிகை கஸ்தூரி அவரது வழக்கறிஞர் தினேஷ் ஹரி மற்றும் M சுதர்ஷன், உள்ளிட்டோர் மூலம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நாளை நீதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் CRL OP(MD) 19526/2024 விசாரணைக்கு வருகிறது. சென்னை எழும்பூரில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற பிராமணர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது மதுரை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் வழக்கறிஞர் ஆன நடிகை கஸ்தூரியை கைது செய்ய காவல்துறை தேடி வருகின்ற நிலையில் மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில இன்று மனு தாக்கல் செய்துள்ளதில், “தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத் தோடு, என் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்.” எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்ற சம்மனை வழங்க சென்னை போயஸ் கார்டனிலுள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டுக்கு காவல் துறையினர் நேற்று சென்ற போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதனால் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததனால் காவலர்கள் சம்மனை அவரது வீட்டுச் சுவரில் ஒட்டிவிட்டுச் சென்றனர். கைது நடவடிக்கையை தவிர்க்க நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டார் என்று பேசப்பட்டது. மேலும் அவர் முன் ஜாமீனுக்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.நடிகை கஸ்தூரிக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது
தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளின் படி மதுரை திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி குற்றப்பிரிவு காவல்துறையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சுக்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட சில பிரிவினர் அதிகமாக லஞ்சம் பெறுவதாக பேசிய நடிகை கஸ்தூரியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் !? நிகழ்வுகளை வைத்து, குறிப்பிட்ட பிரிவுகளை சார்ந்த ஊழியர்களை கொச்சைப்படுத்துவதா ? என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட பிரிவினர் மீது தவறான பிம்பம் ஏற்படும் வகையில் விதமாக பேசிய நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பரவலாக லஞ்சம் உள்ளது மட்டும் உண்மை. மற்ற தகவல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை. பிராமணர்கள் சங்கத்தின் நிகழ்வில் பேசிய நடிகை கஸ்தூரி காஷ்மீரில் நடப்பது மட்டும் படுகொலை அல்ல. ஒரு சமுதாயத்தை அழிப்பதும் இனப் படுகொலை தான். பிறப்பிலிருந்து இறப்பு வரை முக்கியமான அங்கமாக இருக்க வேண்டியது பிராமணர் சமூகம். இந்த கைபர் கணவாய் வழியாக வந்தவர்களை பற்றி பேசினால் உங்கள் ஓட்டுகள் தான் குறையும் என பேசினார். அது மட்டும் அல்லாமல் தெலுங்கு மக்களை அவதூறாக பேசியதாக கஸ்தூரிக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்ததோடு
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பிராமணர் சங்க ( தம்ப்ராஸ்) மாநில தலைவர் ஆன நாராயணன்," சமீப காலமாக பிராமண துவேஷம் என்பதை நாம் பொறுத்துக் கொண்டு வந்தோம். சகித்துக் கொண்டு வந்தோம். தற்போது லக்ஷ்மன் ரேகை என்ற எல்லைக்கோட்டை அது தாண்டிவிட்டது. இதனால் நாம் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 400 க்கும் அதிகமான கிளைகளை நிறுவியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் பிராமணர்கள் ஒற்றுமை அருமையாக இருக்கிறது. பிராமணர்களை கோழை என்றோ பலவீனமானவர்கள் என்றோ நினைக்கக் கூடாது. தமிழகத்தில் ஆறாவது பெரிய சமூகம் பிராமணர்கள். அவர்கள் மனதை குலைக்கும் முயற்சிக்கின்றனர்.
குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது" என பேசி இருந்தார். இது தனியே ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. பேசியிருக்கும் நாராயணன்," தமிழ் தாத்தா என்று உ.வே.சுவாமிநாத ஐயரை அழைக்கின்றனர். என்றார். மேலும் அவர் இன்னும் அவதூறு பேசிய பதிவுகள் உலா வருகிறது.
கருத்துகள்