முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓசூர் வக்கீல் செய்த தவறுக்காக தனியார் குமாஸ்தா செய்த கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கண்ணன், (வயது 30); வக்கீல். கொலை. மூத்த வழக்கறிஞர்


சத்தியநாராயணன் ஜூனியராக உள்ளார் கண்ணன். இவர் நேற்று மதியம் நீதிமன்றத்தில் வேலை முடிந்து அவரது அலுவலகம் திரும்பி கொண்டிருந்தார் நீதிமன்றத்தில் வாசலுக்கு வந்த போது, பின்னால் வந்த வாலிபர், அரிவாளால் கண்ணனை வெட்டினார். கீழே விழுந்தவரை விடாமல் தலை, கழுத்து, தொடை என அரக்கத்தனமாக யாரையும் கண்டு கொள்ளாமல் வெட்டினார்.




கண்ணன் இரத்த வெள்ளத்தில் துடித்த போது, அந்த கொலை வெறி பிடித்த நபர் நிதானமாகப் பார்வையிட்டு, மீண்டும் கழுத்திலும், முகத்திலும் வெட்டினார். சுற்றிலும் பலரும் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை, அவர் கண்டுகொள்ளவில்லை.கண்ணன் அசைவற்றுக் கிடந்ததைப் பார்த்து, உயிர் போயிருக்கும் என்ற எண்ணத்துடன் நீதிமன்றத்தில் உள்ள வளாகத்துக்குள் நடந்து சென்று, அங்கிருந்த காவல் துறையினரிடம் சரணடைந்தார். வக்கீல் கண்ணனை காவலர்கள் துாக்கிச் சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்; அவர் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த நிலையில் கண்ணன் வக்கீலை வெட்டியவர்  ஆனந்தகுமார் வக்கீல் குமாஸ்தா, (வயது 39) அவர் மனைவி வக்கீல்.  கண்ணனும் வக்கீல் இருவரும் பேசிப் பழகியது ஆனந்தகுமாருக்கு பிடிக்கவில்லை; அவர் கண்டித்தும் கண்ணன் கேட்கவில்லை. சமீபத்தில் இது மோதலாக நடந்த நிலையில் ஆனந்தகுமார் முன்னர் அடித்ததில், கண்ணன் சில பற்களை மட்டுமே இழந்தார். ஆனாலும், அவர் பழக்கத்தை விடவில்லை.

அந்தக் கோபத்தில் தான், நேற்று கண்ணனை கொலைவெறித் தாக்குதல் நடத்திய மற்றொரு வழக்கறிஞர் உதவியாளர் ஆனந்தன் என்பவரிடம் காவல்துறை விசாரணை அப்போது வந்த உண்மைத்  தகவல்:- ஓசூரில் மிகவும் பிரபலமான சீனியர் வழக்கறிஞர் சத்திய நாராயணன், அவருக்கு ஜூனியராக இருப்பவர் வழக்கறிஞர் கண்ணன். இவர் போயர் (கல் உடைப்பவர்) சமூகத்தைச் சேர்ந்தவர். திருமணமாகாதவர் ரங்கசாமி பிள்ளை தெருவில் தனியாக வசித்து வருகிறார்.

அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் நாமல்பேட்டையில் குமாஸ்தா ஆனந்தன் வசித்து வருகிறார். இவரது மனைவி, வழக்கறிஞர் சத்யவதி இருவரும் பலிஜா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரே நீதிமன்றத்தில் பணிபுரியும் ஆனந்தனுக்கும், சத்யவதிக்கும் திருமணமாகி ஒருவருட காலமாகிறது. இந்த நிலையில், வக்கீல் கண்ணன் வக்கீல் சத்யவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இதனையறிந்த ஆனந்தன், தனது மனைவி சத்யவதியைக் கண்டித்தபோது, 'கண்ணன் தான் எனக்கு தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார்' என முறையிட்டுள்ளார்.
இதைக் கேட்டுக்கொண்ட குமாஸ்தா ஆனந்தன், வழக்கறிஞர் கண்ணனை பலமுறை கண்டித்துள்ளார். எனினும் கண்ணன் தொல்லைகள் தருவது தொடர்ந்தது.


அதனால் கோபமான ஆனந்தன் கடந்த சில நாட்களாக வக்கீல் கண்ணனைக் கொலை செய்யத் திட்டமிட்டு வந்தார். ஆனால் அதற்கான சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையவில்லை.
இந்தநிலையில் இன்று பணிக்கு வந்த வக்கீல் கண்ணன் எப்போது நீதிமன்றத்தில் இருந்து வெளியே வருவார் என தனியார் குமாஸ்தா ஆனந்தன் காத்திருந்தார்.
மதியம் 12.45 மணியளவில்  பணி முடிந்து அலுவலகத்திற்கு வந்த வக்கீல் கண்ணனை நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே காத்திருந்தார்.

 நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ள தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் அவரை வழி மறித்து. வாக்குவாதம் செய்த நிலையில், ஒருகட்டத்தில் தான் பதுக்கி வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி முகத்தைச் சிதைத்தார் ஆனந்தன்.
ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் துடித்த நிலையில் கண்ணனை அங்கிருந்தவர்கள் அருகிலுள்ள ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தபோதும் அவர் மரணமடைந்தார் 
இதற்கிடையே வக்கீல் கண்ணனை வெட்டிக் கொலை செய்த குமாஸ்தா ஆனந்தன் ஓசூர் நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்கள்  உதவியுடன் சரணடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த வழக்கறிஞர் கண்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, நீதிமன்றத்தில் சரணடைந்த வழக்கறிஞர் குமாஸ்தா ஆனந்தன் என்பவரை காவல்துறையினர் காவலில் எடுத்தது நகர காவல் துறை. இந்த நிலையில்  இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வக்கீல்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்; கைத்துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல ஊர்களில், வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தனிப்பட்ட இரண்டு நபர்கள் விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்துள்ள நிலையில் இதில் வக்கீல் செய்த தவறுக்காக தனியார் குமாஸ்தா செய்த கொலை என்பதே உண்மை நிலை.தமிழ்நாடு
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் குறித்து பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பொதுநல மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.


 ஓசூர் சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. இருந்தாலும் 
தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதில் தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது தொடர் கதையாகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, உள்துறைச் செயலாளர், டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகள் அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



வழக்கறிஞர்கள் மீதான தக்குதல் சம்பவங்களை தடுக்க, மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பரிந்துரை கேட்கப்பட்டது.
மேலும், ஓசூர் சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...