முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டப்படி தனுஷ் நியாயப்படி நயன்தாரா திரையுலகில் நிழல் யுத்தம்

கேரளாவில் பிறந்த நடிகை  டயானா மரியம் குரியன் எனும் நயன்தாரா மலையாளத் திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த மனசினக்கரே  மூலம் நடிகையாக அறிமுகமானார் .


தமிழ்  திரைப்படத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அய்யா, தெலுங்கில்  லட்சுமி  மற்றும் கன்னடத்தில் சூப்பர் மூலம் அறிமுகமானார். தற்போது நெட்ஃபிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் என்ற ஆவணப்படத்தில் முன் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்ட 3 வினாடிகள் கொண்ட வீடியோவுக்கு நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பியதாக நயன்தாரா தெரிவித்தார்.இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், செல்வராகவனின் தம்பியான அன்புக்குரிய தனுஷ் அவர்களே....

(தனித்த அடையாளம் இல்லாமல் வாழும் தனுஷ் என்கிறார்) அதில் அவரது கோபம் புரிகிறது. இதுதான் நடிகை நயன்தாராவின் கடிதத்தின் முதல் வரி. இது சாதரணமாக சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. இதன் பிண்ணனியில் உள்ள விபரங்கள் பொதுவெளியில் வராது.   உங்களைப் போன்றவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துவிடும். ஆனால் தனக்கு அப்படி அல்ல தான் போராடித்தான் இந்த இடத்தை பிடித்துள்ளதாக  நயன்தாரா குறிப்பிட்டு.

தன் வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள ஆவணப் படத்தில், மகத்துவமான காதலை கண்டடைந்த "நானும் ரவுடி தான்" திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது என நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். அந்த படத்தின் காட்சிகள், பாடல்களை பயன்படுத்தும் வகையில் தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம், தடையில்லாச் சான்றிதழைப் பெற 2 ஆண்டுகள் வரை காத்திருந்ததாகவும், ஆனால் அது பலனிக்காததால் அந்த முடிவைக் கைவிட்டதாகவும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.நானும் ரவுடி தான் திரைப்படத்திற்காக இதயத்திலிருந்து எழுதப்பட்ட வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது

அனைவருக்கும் புரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அண்மையில் வெளியான ஆவணப் படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற 3 விநாடிக் காட்சிகளுக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருப்பது விநோதமாக உள்ளதாகவும், கீழ்த்தரமான இந்தச் செயல், தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அந்த கடிதத்தில் நயன்தாரா விமர்சித்துள்ளார்.ஒரு படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தும்போது எனக்கு பங்கு உரிமைக்கு உரிய பணத்தைத் தாருங்கள் எனக் கேட்பது அந்தத் தயாரிப்பாளரின் உரிமை. அதைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால், பணம் என்பது இங்கு விஷயமல்ல. தமது திரைப்படத்தில் பணம் வாங்கிக் கொண்டு நடித்த கதாநாயகி என இருந்தாலும் விட்டுக்கொடுத்திருக்கலாம். இருவருக்கும் இடையிலான நட்பில் பிணக்கு ஏற்பட்டது தான் வியாபாரத்தில் தொந்தரவாக மாறியுள்ளது.



அந்தத் தொந்தரவில் தான் 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்கிறார். உண்மையில், 5 நிமிடங்கள் இருவரும் பேசி இருந்தாலே இந்தப் பிரச்னைகள் தீர்ந்திருக்கும். இது நண்பர்களுக்கு இடையேயான சண்டைதான். திருமணத்தை வியாபாரமாகச் செய்வது என்பதே தமிழ் உலகுக்கு புதிது. அந்த புதிதான விஷயத்தில் 3 நொடிகளுக்கு காசு வேண்டும் என கேட்பது இன்னும் புதிது” எனத் தெரிவித்துள்ளார்.



இலக்கியம், நாடகம், இசை மற்றும் கலைப் படைப்புகள் மற்றும் ஒளிப்பதிவுத் திரைப்படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகளின் தயாரிப்பாளர்களுக்கு சட்டத்தால் வழங்கப்படும் ராயல்டி உரிமையாகும். உண்மையில், இது மறுஉற்பத்தி உரிமைகள், பொது மக்களுடன் தொடர்புகொள்வது, படைப்பின் தழுவல் மற்றும் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட உரிமைகளின் தொகுப்பாகும். வேலையைப் பொறுத்து உரிமைகளின் கலவையில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம் அறிவுசார் சொத்துரிமைகள் என்பது நபர்களுக்கு அவர்களின் மனதின் படைப்புகள் மீது வழங்கப்படும் உரிமைகள் ஆகும்

இந்தியக் காப்புரிமை மற்றும் வடிவமைப்புகள் சட்டம், 1911  ஆம் ஆண்டில் Indian Patent Act அதாவது காப்புரிமைகள் (திருத்தச்) சட்டம் 2002 (சட்டம் 38/2002) 1970 ஆம் ஆண்டு சட்டத்தின் இரண்டாவது திருத்தமாகும். இது மே மாதம் 20 ஆம் தேதி, 2003 ஆம் ஆண்டில்  புதிய காப்புரிமை விதிகள், 2003 ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக ஏற்கனவே இசைஞானி இளையராஜா பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனிடம் கேட்டு சட்ட அணுகுமுறை செய்தது போலவே நயன்தாரா விவகாரம் தற்போது சட்ட அணுகுமுறை கொண்டதாக அமைந்துள்ளது 5 நிமிடங்கள் இருவரும் பேசி இருந்தாலே இந்தப் பிரச்னை தீர்ந்திருக்கும். ஆனால் பேசவிடாத சக்திகள் பல உண்டு . 


 இது நண்பர்களுக்கு இடையேயான சண்டைதான். இருவரும் திருமணத்தை வியாபாரமாக நடத்தியவர்கள் தான். அதுபோல படக்காட்சிகள் இதுவரை ஒருவருக்கொருவர் அப்படி செய்வது தமிழ் திரைப்பட உலகிற்கு புதிது. அந்த புதிதான விஷயத்தில் 3 நொடிகளுக்கு காசு வேண்டும் என கேட்பது இன்னும் புதிது” ஆனால் தனுஷ் தரப்பில் சட்டப்படியான நியாயம் உள்ளது.என அறிவோம்.ஆனால் சில தர்மப்படியான நியாயங்கள் ஜிநயன்தாரா பக்கம் இருக்கும் என்பது தான் தற்போது நடக்கும் விவாதம்.நயன்தாரா ஒரே நாளில் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவில்லை.    அவர் ஒரு உழைப்புப் போராளி.    சந்தைப்படுத்தி பணம் சம்பாதிக்கும் பலரில் இவர் ஒரு நபர் என்பது தவறா?   தனுஷோ அல்லது திரையுலகில் உள்ளவர்களோ இலவசமாகப் படங்கள் செய்கிறார்களா? எல்லோரும் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். 

நெட்ஃபிக்ஸ் போன்ற நிறுவனங்கள் அவ்வளவு எளிதில் பணத்தை எதற்காகவும் தூக்கிக் கொடுப்பதில்லை.    நயன்தாரா பிராண்ட் அமோகமாக விற்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியும்.  

தனுஷ் ஏன் “நானும் ரவுடிதான்” படத்தை பாதியில் கைவிட்டார் என்பது இண்டஸ்ட்ரியில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.   “படத்துக்கும், என் துணைக்கும் எனக்கும் எதிராக நீங்கள் சீர்குலைத்துக்கொண்டிருக்கும் பழிவாங்கல்” என்ற வார்த்தைகள் நிறைய எடையும் அர்த்தமும் கொண்டவை.  



வரிகளுக்கு இடையில் நயன்தாரா அறிக்கையை கவனமாகப் படியுங்கள்.   அவர் நிறைய தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையின் தாக்கத்தை அறிந்திருந்தும், தனுஷுடன் படங்களில் நடித்த பெரும்பாலான நடிகைகள் நயனின் கடிதத்தை லைக் மற்றும் ஷேர் செய்வது ஏன்?   நயனின் வேதனைக்கான திறவுகோல் இங்கே தான் உள்ளது. 



தனுஷ் தான் தயாரித்த படத்தின் கிளிப்களுக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்திருக்கலாம்.  அல்லது அவர் கருணை இருந்தால், நயன்தாரா அதை இலவசமாகப் பயன்படுத்த அனுமதித்த இருக்கலாம்.  ஆனால், அவர் தனது படத்தின் ஸ்டில்ஸ் உட்பட எதையும் கொடுக்க மறுத்து விட்டார்.   மேலும் நயன்தாரா கூறுகையில், “உங்கள் இந்த முடிவு (அனுமதி வழங்காதது) எங்கள் மீதான தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்த மட்டுமே.  அவர் கூறுகையில், தனுஷ் வேண்டுமென்றே முடிவெடுக்காமல் இருந்தார்.  

இது “நானும் ரவுடிதான்” படத்தின் செட்டில் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் காதலிக்கிறார்கள், படத்தின் கிளிப்புகள் மற்றும் படத்தின் செட் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தை முழுமையடையச் செய்திருக்கும்.   ஆனால், தனுஷ் அதை பழிவாங்கும் விதமாக மறுத்து, ஏதோ சோகமான நிலை பெற்றதாகத் தெரிகிறது.  


நயன்தாரா கூறியது போல், 3 வினாடி காட்சிக்கு 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்புவது தனுஷின் உண்மையான குணத்தை காட்டுகிறது.  

நயனின் மற்ற கூற்றுகள் சுய விளக்கமாக உள்ளது.    தனுஷ் யார் என்று ஒட்டுமொத்த திரையுலகிற்கும் தெரியும்.   

தனுஷ் போன்ற பவர்ஃபுல் ஹீரோவை நடிகையாக எடுக்க அபார தைரியம் வேண்டும்.   நடிகை நயன்தாரா அதைச் செய்துள்ளார்.  மலையாளிகள் அறிவு சார் துணிவு கொண்டவர்கள் அதனால் தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார்.நயன்தாரா விக்னேஷ் சிவன் : இவர்கள் இருவரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) மனை நிலம் வாங்கினார்கள். 20 கோடி மதிப்பிலான நிலத்தை 2 கோடி என பத்திரம் பதிவு செய்தனர். இது தவறா?  சரியா ? அந்த நிலம் வாங்கிய இடத்தில் சில கட்சி சார்பில் பினாமிகள் தொடங்கி , சென்னை பாசியம் குரூப் வரை நிலம் வாங்கினர் அந்த இடத்தில் அடுத்த 3 மாதத்தில் அரசு கடற்கரை மேம்படுத்துதல் என்ற பெயரில் புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டது அதன் மதிப்பு 100 கோடி. இதனால் அந்தப் பகுதி நிலங்களின் மதிப்பு ஒரே நாளில் 3 மடங்கு உயர்ந்தது?   


 இதில் என்ன தவறு? ஆமாடா தவறு தான்! இது போல் அரசு தரப்பு முடிவு முன்பே தெரிந்து கொண்டு திட்டமிட்டு முதலீடு செய்வது குற்றம் தான் இது தான் விமான நிலையம் விரிவாக்கப் பகுதியில் நடந்த நிலை  முன்கூட்டியே மதிப்பு கூட்டி பதிவு செய்வது குற்றம் எனில் பின்னர் வருவது தெரிந்து சொத்து வாங்குவது ஊழல் தான், மேலும் செஸ் விளையாட்டிற்கு செஸ் ஒலிம்பியாட் 2022 விக்னேஷ் சிவன் நிறுவனம் அதை மேற்கொள்ளும் உரிமையை அந்த ஆண்டு தான் பெற்றது இதில் விக்னேஷ் சிவன் நிறுவனம் சுமார் 26 கோடிக்கு மேல் முறைகேடு செய்தது! அதாவது மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்தனர். அடித்த கொள்ளை கருப்பு பணத்தை முதலீடு செய்ய நிலம் வாங்கியதோடு அதையும் பல கோடிக்கு ஆதாயம் அடைய மீண்டும் வழி ஆதாயத்தை தேடி அதற்கு ECR நிலம் வாங்கி அதிலும் தில்லுமுல்லு  சினிமா தாண்டி இந்த நயன்தாரா பவர் என்னனு புரியனும். அப்போ அதே பவரை வைத்து தனுஷ் சமாளிச்சிருக்கலாமே! அதை முயற்சித்து தோல்வி வந்தால் மத்தியில் மாநிலத்தின் செல்வாக்கு பெற்ற ரஜினிகாந்தையே  சமாளித்த தன்மீது வந்த ஆள் மாறாட்ட வழக்கை சமாளித்த தனுஷ் என்ற தெலுங்கு தாய்மொழி கொண்ட நடிகருக்கு  மலையாளம் தாய் மொழி கொண்ட நடிகை எம்மாத்திரம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...