அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்பின் அறிக்கை
அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமஸ்வாமியுடன் இணைந்து செயல்படும் கிரேட் எலோன் மஸ்க், அரசாங்கத் திறன் துறையை ("டாக்") வழிநடத்துவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், "சேவ் அமெரிக்கா" இயக்கத்திற்கு அவசியமான ஃபெடரல் ஏஜென்சிகளை மறுகட்டமைப்பதற்கும் எனது நிர்வாகத்திற்கு வழி வகுக்கும். "இது கணினி மூலம் அதிர்ச்சி அலைகளை அனுப்பும், மேலும் அரசாங்க கழிவுகளில் ஈடுபடும் எவருக்கும், இது நிறைய பேர்!" திரு. மஸ்க் கூறினார்.
இது நம் காலத்தின் "மன்ஹாட்டன் திட்டம்" ஆகிவிடும். குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் "DOGE" இன் நோக்கங்களைப் பற்றி மிக நீண்ட காலமாக கனவு கண்டுள்ளனர். இந்த வகையான கடுமையான மாற்றத்தை ஏற்படுத்த, அரசாங்கத்தின் செயல்திறன் துறையானது அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும், மேலும் பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை இயக்குவதற்கும், அரசாங்கத்திற்கு ஒரு தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்குவதற்கும் வெள்ளை மாளிகை மற்றும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்துடன் கூட்டு சேரும். இதுவரை பார்த்ததில்லை.
எலோன் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன், அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாகச் செய்வார்கள். முக்கியமாக, எங்களின் வருடாந்த $6.5 டிரில்லியன் டாலர்கள் அரசாங்க செலவினங்கள் முழுவதும் இருக்கும் பாரிய கழிவுகள் மற்றும் மோசடிகளை நாங்கள் வெளியேற்றுவோம். நமது பொருளாதாரத்தை விடுவிக்கவும்,
"நாம் மக்களுக்கு" அமெரிக்க அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்யவும் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். அவர்களின் பணி ஜூலை 4, 2026 இல் முடிவடையும் - அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் ஒரு சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்! எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டடிரம்ப்பின் தோள்களைத் தட்டி உற்சாகப்படுத்தும் விவேக்கிற்கு வயது 39 மட்டுமே!
இன்றைய தினம் அமெரிக்காவின் செல்வாக்கான பெரிய தொழிலதிபர். சிறந்த அறிவாளி மற்றும் ஆளுமைத் திறன் கொண்டவராக பார்க்கப்படுபவர்.
தந்தை வழியில் பாலக்காட்டு அந்தணர் குடும்ப மரபில் வந்தவர்! தாய் வழியில் மைசூர் பிராமணர் கலப்பு மரபியல் சேர்ந்தவர்.
கமலா ஹாரீஸ் சற்று முற்போக்கான கொள்கை கொண்டவராக வெளிப்பட்டார். அமெரிக்காவில் இருந்த இந்திய பிற்போக்குக் கொள்கைப் பிராமணர்கள் கமலா ஹரீஷை எதிர்த்து டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு கடுமையாக உழைத்ததற்குக் காரணம், அவர்கள் கமலா ஹாரிஸை ஒரு கறுப்பின பிரதிநிதியாகவே பாவித்தனர். கமலா ஹாரீசின் பரந்துபட்ட சோசலிச நடவடிக்கைகளும், அனைத்து சமூகத்தினரையும் அரவணைக்கும் பண்பும், அவர்களை அவ்வாறு பாவிக்க வைத்தது! கமலா ஹாரிஸின் பூர்வீகப் பின்னணியில் தமிழ்நாடு பிராமண அடையாளம் சிறிது இருந்தாலும், அவர் ஜாதி உணர்வைக் கடந்தவராகவே உருவாகி ஒரு உலக பொது மனுஷியாக தன்னை தகவமைத்துக் கொண்டதை பிற்போக்கு அமெரிக்கப் அந்தணர்கள் விரும்பவில்லை.
என்பதே உண்மை. இந்த இந்திய வம்சாவளி பிற்போக்கு சித்தாந்தப் பிராமணர்களின் பிரதிநிதி தான் விவேக் ராமசாமி. டிரம்ப் வெற்றி பெறுவதற்காக இங்கு இந்தியாவில் பிராமணர்கள் வேள்விகளும் யாகமும் நடத்தினார்கள் என்பதை நாம் அறிவோம். இந்தத் தேர்தலில் விவேக் ராமசாமி டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு அயராது பாடுபட்டார். இவர் யூதர்களோடும் மிக நெருக்கம் பாராட்டுபவர். ஹிந்துத்துவத்தில் மிகவும் பிடிப்புள்ளவர். அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோவில்களுக்கு தவறாமல் செல்பவர். பாலஸ்தீனப் போரை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்.
இவரைத் தான் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிகாரமிக்க செயல்துறையை வழி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இவரோடு பிரபல எலான்மஸ்க்கையும் அறிவித்துள்ளார்.
இந்த (DOGE) எனப்படும் செயல் திறன் துறை தான் அமெரிக்காவின் பொருளாதாரம், நிதி மேலாண்மை தொடர்பான முக்கியமான கொள்கைகளை வகுத்துத் தரும்! அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை விட அதிகாரமிக்கவர்கள் இந்த நியமனப் பிரதிநிதிகளாவர்.
இந்தியாவில் ஆதிகாலத்தில் இருந்தே மன்னர் ஆட்சிக் காலம் முதல் இன்று வரை ஆட்சியாளர்களை பின் இருந்து வழி நடத்துபவர்களாகப் பிராமணர் சமூகத்தவர்கள் இருப்பதை நாம் அறிவோம். தற்போது அமெரிக்க ஐக்கிய நாடு வரை இது விரிவாகியுள்ளது.! என்பதை இங்கு காணப்பட்ட உண்மை.
கருத்துகள்