டெல்லி காவல்துறையின் தலைமைக் காவலர்கள் சீமா தேவி மற்றும் சுமன் ஹூடா ஆகியோர் 9 மாதங்களில் காணாமல் போன 104 குழந்தைகளைக் கண்டுபிடித்து சாதனை படைத்தனர்.2 நகர காவலர்கள் காணாமல் போன 104 குழந்தைகளை 9 மாதங்களில் அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்தனர் கடந்த 9 மாதங்களில் காணாமல் போன 104 குழந்தைகளைக் கண்டுபிடித்ததில் தலைமைக் காவலர்கள் சீமா தேவி மற்றும் சுமன் ஹூடா ஆகியோர் பாராட்டத்தக்கவர்கள்
ஹரியானா, பீகார் மற்றும் உத்திரப் பிரதேசத்திலுள்ள தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்று குழந்தைகளைக் கண்டறிந்தனர். குழந்தைகளின் சமீபத்திய புகைப்படங்கள் இல்லாத குடும்பங்கள், பேசும் மொழித் தடைகள், அறிமுகமில்லாத இடங்கள் மற்றும் பிற மாநிலங்களில் அவர்கள் சென்ற இடங்களில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் உட்பட அவர்களை நெருங்கிய சவால்கள் அதிகம். இத்தகைய இடையூறுகள் இருந்த போதிலும், இருவரும் வெற்றிகரமாக குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைத்தனர்.
டில்லி வடக்கு புறநகர் மாவட்டத்தில் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவில் காவலர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் . ஆபரேஷன் மிலாப்பின் கீழ் 2024 ஆம் ஆண்டு மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை மீட்பு நடவடிக்கை நடந்ததாக காவலர் தேவி தெரிவித்தார் .சில தொலைதூரமான இடங்களில், பார்த்திராத நிலப்பரப்பு மற்றும் மக்கள் மற்றும் இடத்தின் அறிமுகமின்மை ஆகியவை முக்கிய சவாலாக இருந்ததாகவும். அவர்கள் உள்ளூர் காவல்துறையினரிடம் உதவி கேட்க வேண்டியிருந்தது. "குழந்தைகள் மக்களைத் தொடர்பு கொள்ளப் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்தன. இது போன்ற சந்தர்ப்பங்களில், தொலைபேசியின் கடைசி இடத்தைக் கண்டறிய அவர்கள் சைபர் குற்றத் தடுப்புக் குழுவின் உதவியைப் பெற்றோம்," எனக் கூறினார்.தேவி ஒரு குறிப்பிடத்தக்க கடத்தல் வழக்கை நினைவு கூர்ந்தார்: "பவானாவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி காணாமல் போனார்.அவள் நலமாக இருப்பதாகக் கூறி பல
தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அந்தக் குழந்தையை அழைத்ததாக அவளுடைய இளைய சகோதரர் காவலர்களிடம் தெரிவித்தார். இருப்பினும், அவர் வெவ்வேறு எண்களைப் பயன்படுத்தியதால் தவறான நபர்கள் என அவர் சந்தேகித்தார். நாங்கள் வழக்கை விசாரித்து, நொய்டாவிலுள்ள ஜார்ச்சாவில். அவளைக் கூர்ந்து கண்காணித்தோம். அங்கு,அவள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பதைக் கண்டோம். உடனடியாக அவளை மீட்டோம்” என்றார். புதிய இடங்களில், பெண்கள் உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டியிருந்தது, இது நேரமெடுத்தது, அதன் பிறகு அவர்கள் வீடு வீடாகத் தேடலாம்.காலாவதியான புகைப்படங்கள் சில குழந்தைகளை பல சந்தர்ப்பங்களில் அடையாளம் காண முடியாமல் போனதாகவும் தேவி கூறினார்.
குடும்பங்களில் தங்கள் குழந்தைகளின் சமீபத்திய புகைப்படங்கள் இல்லாத போது, மீட்கப்பட்டவர்கள், அவர்களில் பெரும்பாலோர் 4 முதல் 17 வயது வரை, பெற்றோரால் உடல் அங்க அடையாளங்கள் ரீதியாக அடையாளம் காணப்பட வேண்டியிருந்தது.
மார்ச் மாதம் AHTU இல் இணைந்த ஹூடா, குழந்தைகளை அவர்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்க முடிந்ததில் பெரிய பெருமையும் நிம்மதியையும் உணர்ந்ததாகத் தெரிவித்தார். "எங்களுக்கு நிலையான பணி நேரம்மில்லை. காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய தகவல் கிடைத்தால், நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறோம். நான் என் குழந்தைகளைப் பார்க்காத நாட்களும் உண்டு,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்
சில சிரமங்களைப் பட்டியலிட்டவர், ரேடாரில் இல்லாத கிராமங்களில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிவது சவாலானது என்றும் கூறினார். "இதுபோன்ற பகுதிகளில் போக்குவரத்துக்கள் இல்லாததால் நாங்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தோம். பலர் எங்களுக்கு உதவத் தயாராகவே இருந்தனர்,ஆனால் காவல்துறைக்கு உதவுவது சட்டச் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று நினைப்பவர்களும் இருந்தனர்" என காவலர் ஹூடா கூறினார். இரயில் நிலையங்களில் பிச்சைக்காரர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளிடமிருந்து எப்படி முக்கியத் தடயங்கள் கிடைத்தன என்பதை அந்த இரு தலைமைக் காவலர்கள் வெளிப்படுத்தினார்கள். காணாமல் போன குழந்தைகளின் புகைப்படங்களை அவர்களிடம் காண்பிப்பது, அவர்கள் பார்த்தது பற்றிய தகவல்களை அடிக்கடி வெளிப்படுத்தியது. 13 முதல் 17 வயதுடையவர்கள் சமூக ஊடகங்களில் சந்தித்த அந்நியர்களின் செல்வாக்கிற்கு குறிப்பாக எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காவலர் ஹூடா சுட்டிக்காட்டினார்.
காவலர்களின் கூற்றுப்படி, குழந்தைகள் காணாமல் போனதற்கான காரணங்கள், போதைப்பொருள் பழக்கம், பெற்றோரின் கவனிப்பு இல்லாமை மற்றும் போதிய கல்வியின்மை ஆகியவை அடங்கும். காவலர் தேவிக்கு 16 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். "நான் ஓரிரு நாட்கள் வெளியில் இருக்கும்போது, என் இளைய மகன் என்னை மிகவும் மிஸ் செய்கிறான்," எனக் கூறினார். ஒரு தாயாக, பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேசுவதும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதும் மீட்பு முயற்சியில் முக்கியம் என்றார்.
காவல் துறை இணை ஆணையர் டில்லி (வெளி வடக்கு) நிதின் வல்சன் கூறுகையில், ஆபரேஷன் "மிலாப் நடவடிக்கையில் காவலர்கள் சீமா மற்றும் சுமன் செய்த சிறப்பான பணிக்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களின் சாதனை குழந்தைக் கடத்தலை எதிர்த்து நமது சமூகத்தை பாதுகாக்கும் எங்கள் உறுதியை வலுப்படுத்துகிறது" எனக் கூறினார்.இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இதேபோல் ஒரு ஆபரேஷன் நடந்தது அது டெல்லியில் உள்ள குழந்தைகள் இல்லங்கள், ரயில் நிலையத்தின் நடைமேடைகள், பேருந்து நிலையங்கள், சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் தங்கியுள்ள 165 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உள்துறை அமைச்சகமும் இந்த விஷயத்தில் ஒரு முன்முயற்சியை எடுத்து அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஜனவரி, 2015 ல் `ஆபரேஷன் ஸ்மைல்' முறையில் ஒரு மாதத்திற்கு ஒரு நிலையான பிரச்சாரத்தைத் தொடங்குமாறு அறிவுறுத்தியது. மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் எம்ஹெச்ஏவின் முன்முயற்சியைப் பாராட்டின, மேலும் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து கிடைக்கும் அறிக்கைகளின் படி, இந்த நடவடிக்கையின் போது இதுவரை 2500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் அப்போது உறுப்பினர் ஸ்ரீமதியின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி இதனைத் தெரிவித்தார். ஆனால் தற்போது நடைபெற்ற ஆபரேஷன் வித்தியாசமானது மிகவும் சவாலானது. நடிகர் சூர்யா பொய்யாக நடித்த சிங்கம் 1 முதல் 3 வரை படத்தை ரசித்த மக்கள் இந்த உண்மையான டில்லி காவல் துறை தனிப்படையின் இரண்டு சிங்கங்கள் பாராட்டுக்குறியவர்கள்
கருத்துகள்