லோக் ஆயுக்தா மாநிலத்தின் சட்ட வரம்பில் பிழை ஊழல் நடவடிக்கைகள் முதல்வரையும் கட்டுப்படுத்தும் உயர் நீதிமன்றத்தில் சுவாரஸ்ய விவாதமும் விசாரணையும்
தமிழ்நாடு லோக்ஆயுக்தா சட்ட வரம்பில் பிழை, ஊழல் நடவடிக்கைகள் முதல்வரையும் கட்டுப்படுத்தும். சுவாரஸ்ய விவாதமும் விசாரணையும் ;
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் கே.குருநாதன் என்பவர் 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பெற்ற முதல் SLP உத்தரவின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு பல வாய்தாக்கள் கடந்த நிலையில் கடந்த 08.11.2024 வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் பணியாளர்களான பொது ஊழியர்கள், மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள், மாநிலத்தின் முதல்வர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மீதான ஊழல் லஞ்ச லாவண்யங்கள் மற்றும் சொத்துக்கள் குவிப்பு குறித்து புகார்களை விசாரிக்க
மத்திய அரசு சிறப்பு வாய்ந்த லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை 2013 ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. இதைப் பின்பற்றி தமிழநாடு அரசு 2018 ஆம் ஆண்டில் லோக்ஆயுக்தா சட்டம் கொண்டு வந்தது.
லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் தேர்வுக்குழுவில் தேசத்தின் பிரதமர், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, சட்ட நிபுணர்கள் அதில் இடம் பெற்றுள்ளனர். இந்தக்குழுவின் பரிந்துரைப் படி தலைவர், உறுப்பினர்களைக் குடியரசுத்தலைவர் நியமனம் செய்வார்.
தமிழ்நாடு லோக்ஆயுக்தா அமைப்பு தலைவர், உறுப்பினர்கள் தேர்வுக்குழுவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, சட்ட நிபுணர்கள் இடம் பெறவில்லை. இது மத்திய அரசின் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது.
மத்திய லோக்பால் சட்டப்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்த காவல் துறைத் தனிப்பிரிவு அமைப்பு உள்ளது. மாநிலத்தில் அது போன்ற அமைப்போ, பிரிவுகளோ இல்லை. மத்திய லோக்பால் சட்டப்படி ஊழல் செய்த அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய
லோக்பாலுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மாநில லோக்ஆயுக்தாவிற்கு அதுபோன்ற அதிகாரம் இல்லை, மத்திய சட்டப்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்த தனிப்பிரிவு அமைப்பு உள்ளது. மாநிலத்தில் அது போன்ற பிரிவு இல்லை.
மாநில லோக்ஆயுக்தாவின் அதிகார வரம்பிற்குள் முதலமைச்சர் வரமாட்டார். என லோக் ஆயுக்தா சட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் லோக்ஆயுக்தா சட்டம் நம்முடைய மாநிலத்தில் அதிகாரமற்றதாகவே உள்ளது.
ஆனால் கர்நாடகா மாநிலத்தில் வலுவான நிலையில் உள்ளது, அதை நமது மாநிலத்தில் வலுவானதாக மாற்றம் செய்ய லோக் ஆயுக்தா சட்டத்திருத்தம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு நான் உரிய வழிமுறைப்படி மனு அனுப்பினேன். ஆனால் தமிழ்நாடு அரசு அதைப் பொருட்படுத்தாமல் உள்ள நிலையில் தமிழ்நாடு லோக்ஆயுக்தா சட்டம் செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.அந்த மனுவானது நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு முன்பு வந்த நிலையில் விசாரித்தது.
அப்போது ஆஜரான அரசு தரப்பு:- முதல்வர் மற்றும் அரசு அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருந்தால் லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊழல் ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்கள் உள்ளன. லோக்ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவில் மாநிலத்தின் முதல்வர், மற்றும் சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது பெரும்பான்மை சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் இடம் பெறுவர், இந்தக்குழு பரிந்துரைப்படி தலைவர், உறுப்பினர்களை மாநிலத்தின் ஆளுநர் நியமிப்பார்.
அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றி சரியாகப் பரிசீலித்து தமிழ்நாடு லோக்ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றுமாறு கோருவதற்கு மனுதாரருக்கு எந்த முகாந்திரம் இல்லை. இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும். என மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
நீதிபதிகள் இது குறித்த அடுத்த விசாரணையை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேற்கண்ட வழக்கு விபரம் வருமாறு:- மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் WP (MD)17639/2021 ன் படி WMP(MD)14513/2021 உப மனுவாக மனுதாரர் கே குருநாதன். வக்கீல் தரப்பின்றி நேரடியாக ஆஜரானார் /எதிர்/ வழக்கறிஞர் எஸ்.ஜெயசிங். பிரதிவாதி 1 க்கான மெமோ, கவுண்டர் (R1)-797/2022, GP கவுண்டர் அஃபிடவிட் (R2 முதல் R4 வரை). 2 மற்றும் 3 ஆம் பிரதிவாதி தமிழ்நாடு மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சார்பில் வாதம் தற்போது நடந்துள்ளது. அடுத்ததாக விசாரணை தொடரும் . ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசு அணைத்து உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் மீதான ஊழல் புகார்களை விசாரித்து, விரைவில் நடவடிக்கை எடுக்க உதவும் அகில இந்திய அளவில் லோக் பால் சட்டம் உள்ளது. மற்றும் அதுபோல மாநில அளவில் லோக் ஆயுக்தா சட்டத்தை விவாதங்களின்றி அவசரமாகப் நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் ஆன தமிழ்நாடு அரசு திட்டமிட்டது என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது.
உச்சநீதிமன்றத்தின் அழுத்தம் காரணமாகவே லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழ்நாடு அரசு அப்போது கொண்டுவந்தது என கடந்த நான்கு ஆண்டுகளாக லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரவேண்டும் என ஊழல் தடுப்பு சார்ந்த சட்ட வல்லுநர்கள் பலர் கோரிக்கை வைத்த நிலையில்
பலரும் முதலில் சட்டத்தை வரவேற்போம் பின்னர் அதில் மாற்றுக்கருத்துகள் இருந்தால் அதைச் சரிசெய்ய முயற்சி செய்யவேண்டும் என்ற குரல்கள் அப்போது ஒலித்தன. நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சட்டத்திற்கான வரைவு வடிவத்தை முன்கூட்டியே பொதுத்தளத்தில் வெளியிடுகிறார்கள், பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்கிறார்கள். லோக் ஆயுக்தா சட்டம் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம், ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீதான புகார்களை தீர விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கொண்டுவரப்படும் சட்டம். இதனை பொதுத்தளத்தில் விவாதிக்காமல் கொண்டு வருவது நியாயமில்லை, இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அவசரமாக நிறைவேற்றி அப்போது ஆளும்கட்சி எடுக்கும் முடிவுகள் பல சந்தேகங்களைக் கிளப்பியிருந்த நிலையில் "ஊழல் புகார்களை உடனடியாக விசாரிக்க வேண்டும், தீர்ப்பு விரைவில் அளிக்கப்படவேண்டும் என்பது லோக் ஆயுக்தா சட்டத்தின் சாராம்சம். கர்நாடகா மாநிலத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் முறைகேடுகளில் ஈடுபட்ட முன்னாள் முதல்வரை சிறைக்கு அனுப்பியது. தற்போது முதல்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல தமிழ்நாட்டிலும் ஊழல் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த சட்டத்தை முதலில் வரவேற்போம்,'' என நம்பிக்கையுடன் பேசிய ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தமன். தெரிவித்திருந்தார்.
சாதாரண மக்களின் புகார்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் லோக் ஆயுக்தா சட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், ''லோக் ஆயுக்தாவின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்படுபவர்களைப் பொருத்துத் தான் இந்த சட்டத்தின் பயன்பாடு அமையும். ஊழல் புகார்களில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்ற நபர்களை தலைமைப் பொறுப்பில் அமர்த்தினால், இந்த சட்டம் எந்தப் பயனும் தராது. அதேபோல இதனை நடைமுறைப்படுத்துவதில் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார். தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மாநிலத்தின் தலைமைப் பொறுப்புக்கு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றிய தேவதாஸ் நியமிக்கப்பட்டார் அதன் பதிவாளராக மாவட்ட தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய பாண்டியன் நியமிக்கப்பட்டார் அதுபோல செயலாளராக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ராஜாராமன் நியமிக்கப்பட்டார். லோக் ஆயுக்தா அமைப்பு சென்னை கிண்டி தொழிற் பேட்டையில் அமைந்துள்ளது, இருந்த போதிலும் மத்திய லோக்பால் சட்டம் சார்ந்த மாநிலத்தின் லோக் ஆயுக்தா சட்டமும் விதிமுறைகள் பொருந்தவில்லை, மேலும் பல குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் மாநிலத்தின் சட்டம் இயற்றப்பட்டது குறித்து பல மூத்த வழக்கறிஞர்கள் குறை கூறும் நிலையில் நாம் நேரில் கண்ட பல விபரங்கள் அதில் அடங்கும். நமது தேசத்தின் பாராளுமன்றத்தில் "லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம், 2013 (சட்டம் எண்.1 /2014)" இயற்றியது. இந்த சட்டமானது 16.01.2014 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது, ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் படி, மத்தியச் சட்டம் எண் 1/2014 மூலம் திருத்தப்பட்டதன் படி, தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு அரசு பொது ஊழியர் செய்துள்ளார் என்று, அட்டவணை-V, (விதி 22, தமிழ்நாடு லோக்ஆயுக்தா விதிகள், 2018) ல் பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் புகார் அளித்திருக்க வேண்டும். மாநிலச் சட்டம்.16 of 2018 (பிரிவு 2(1)(d), தமிழ்நாடு லோக்ஆயுக்தா சட்டம் பார்க்கவும்) தமிழ்நாடு லோகாயுக்தா சட்டம், 33 /2018 என்பது மத்திய சட்டமான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 இன் பிரிவு 63 க்கு இணங்க வில்லை என்பதே
தற்போது உள்ள நீதிமன்றத்தில் உள்ள வழக்கும் வாதமும், தமிழ்நாடு சட்டமன்றம் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018 ஐ நிறைவேற்றியுளதன் கீழ் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள சட்டம் 13.11.2018 அன்று அரசாணை (Ms) No.153, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் (N-SPL) துறை சார்ந்து 13.11.2018 ஆம் தேதியில் நடைமுறைக்கு வந்தது . தமிழ்நாடு லோக்ஆயுக்தா சட்டத்தின் 13 வது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களில்.
ஊழல் சார்ந்த குற்றம் நடந்த நாளிலிருந்து 4 ஆண்டுகளுக்குள் செய்யப்படாத புகார்கள் (பிரிவு 40, தமிழ்நாடு லோக்ஆயுக்தா சட்டம்.) கட்டுப்படுத்தாது என்பதே ஊழல் செய்தவர்களை காப்பாற்ற என்பது தெளிவாகிறது, இது மத்திய அரசு இயற்றிய லோக்பால் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு முரண்பட்டதாகும். தமிழ்நாடு லோகாயுக்தா, அலுவலகம், சிட்கோ கார்ப்பரேட் அலுவலகம், 6 வது மற்றும் 7வது தளத்தில், சிட்கோ தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை, தமிழ்நாடு 600032. ல் செயல்படுகிறது . இந்த நிலையில் மனுதாரர் கே குருநாதன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனு தீர்ப்பு ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அமைந்து தமிழ்நாடு அரசு சார்பில் சட்டத்திருத்தம் ஏற்பட வழிவகுக்கும் என நம்பலாம்.
ஐந்து பகுதிகளில் கவனம் செலுத்தி, தடுப்பு விழிப்புணர்வைக் குறித்து அனைத்து நிறுவனங்களும் மூன்று மாத காலம் பிரச்சாரத்தை (16 ஆகஸ்ட் 2024 முதல் 15 நவம்பர் 2024 வரை) மேற்கொள்ள வேண்டும் என ஆணையம் விரும்புகிறது.
கருத்துகள்