பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் காலமானார்,
எழுத்துச் சித்தர் பாலகுமாரனுக்குப் பிறகு சிறு வயது முதல் எனக்கு மிகவும் பிடித்த ஆன்மிக எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன் பல அமானுஷ்ய நாவல்கள் (மர்மதேசம், விடாது கருப்பு) பல ஆன்மீக நாவல்கள் புகழ்பெற்றவை, இவரது பல நாவல்களை நான் படித்து ரசித்தவன் என்ற முறையில் இவரது மறைவு என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது - இவரது நாவல்களில் ஒன்றுதான் "எந்திரம்", "மந்திரம்", "தந்திரம்" என்பது பற்றி மிகத்தெளிவாகக் கூறியிருப்பார். அதில் என் மனதில் நின்றதை மட்டும் பகிர்கிறேன் -
அதாவது எந்திரம் என்றால் ஆங்கிலத்தில் மெஷின். ஒரு எந்திரம் இயங்கும் மந்திரம் தேவை அதாவது பெட்ரோல், மின்சாரம் போன்று- தன் திறம் அதாவது சுயசக்தி - நமது ஹிந்து ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்கிரகங்கள் யாவும் எந்திரங்கள் (ஒவ்வொரு கோவில்களிலும் யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்) சமஸ்கிருத மந்திரங்களால் அந்த எந்திரங்களுக்குச் சக்தியூட்டி கோவில்களில் அதைப் பரவச்செய்கிறோம். அவர் தென்னிந்திய இந்து மரபுகள் மற்றும் புராணக் கதைகளில் நிபுணத்துவம் பெற்றவர் . அவர் முழுநேர எழுத்தாளராக ஆவதற்கு முன்பு டிவிஎஸ் குழும நிறுவனங்களில் பணிபுரிந்தார் . அவரது கதைகள் பொதுவாக இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், தெய்வீகத் தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்றவற்றை பெரும்பாலும் தமிழ்நாடு மாநிலத்தைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து கூறப்படும் உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்லது ஈர்க்கப்பட்டவை .
இந்திரா சௌந்தர்ராஜன் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி 1958 ஆம் ஆண்டில் பிறந்த இன்று காலமான போது 66 வயதாகிறது தமிழ் எழுத்தாளர், பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியவர். நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித்தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல துறைகள் மூலம் புகழ் பெற்றவர். தென்னிந்திய மரபுகள் மற்றும் புராணக்கதைகளின் அடிப்படையில் வரலாறு, சமூகம், ஆன்மிகம், மர்மங்கள், சித்தர்கள் பற்றிய நூல்களை எழுதிக்கொண்டிருப்பவர்.
இந்தியா சௌந்தரராஜனின் மனைவி ராதா. மகள்கள் ஐஸ்வர்யா, ஸ்ரீநிதி. டி.வி.எஸ் நிறுவனத்தில் துணைப்பொறியாளராக பணியாற்றி. பின்னர் தொலைக்காட்சியிலும் திரைப்படத்துறையிலும் பணியாற்றத் தொடங்கினார். தாய் பெயர் சூடிய இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய என் பெயர் ரெங்கநாயகி என்னும் படைப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் 1999-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான மூன்றாம் பரிசினை பெற்றது .
சிருங்காரம் என்ற திரைப்படம் 2007- ஆம் ஆண்டுக்கான தேசிய விருது, மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருது மற்றும் தமிழ்ச்சங்கம் விருதுகளைப்பெற்றுள்ளது .
'ருத்ரம்' தொலைக்காட்சித் தொடருக்காக தமிழ்நாடு அரசின் விருது பெற்றார்
'இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது பெற்றார்
'அள்ளி அள்ளித் தருவேன் ’ நாவல் ஏர்வாடி கவிஞர் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை விருதைப் பெற்றது. இந்திரா சௌந்தர்ராஜனின் படைப்புக்கள் தமிழ்நாட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்த உண்மைச்சம்பவ நாட்டார் தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் சித்தர்கள் போன்ற மரபான நம்பிக்கைகளையும் புனைவுகளுக்கு அடிப்படையாகக் கொள்வதனால் அவை பொதுமக்களின் ரசனைக்குரியவையாக உள்ளன. இவரது நாவல்கள் கிரைம் ஸ்டோரி மற்றும் டுடே கிரைம் நியூஸ் போன்ற வெளியீடுகளில் ஒவ்வொரு மாதமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுவரை இவர் 700 சிறுகதைகள், 340 நாவல்கள் மற்றும் 105 தொடர்களை எழுதியுள்ளார். இவரது பல படைப்புக்கள் மின் நூலாகவும் கிடைக்கின்றன. அவரது படைப்புகளில் கண்ட வார்த்தைகளில்:- "அயோத்தியில் சூர்ய வம்சத்தில் அரசாட்சி புரிந்து வந்த வைவஸ்வத மனு புக்ரனான இக்ஷாவாகுவுக்கும் இப்படித்தான் அவன் வாழ்வில் ஞானம் குறித்த எண்ணம் ஏற்பட்டது. ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மாறிடும் தன் உடல் திசுக்கள், இளமை முதுமை எனும் அதன் அடையாளங்கள், சற்றும் எதிர்பாராமல் வரும் உடல் உபாதைகள், உடன் இருந்து அன்பு காட்டுபவரின் மரணங்கள்’ என்று அவன் வாழ்வின் சம்பவங்கள், `மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாறாதது’ என்பதை அவனுக்கு உணர்த்தியதோடு, இப்பூவுலகில் நிலைத்த இளமையோடு வற்றாத சக்தியோடு வாழ்ந்தவர் என்றோ, வாழப்போகிறவர் என்றோ ஒருவர் கூட இல்லை என்கிற உண்மையையும் அவனுக்கு உணர்த்திற்று" .
ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதலா வதும் பூலோக வைகுண்டம் எனப்படுவதுமான ஸ்ரீ ரங்கம் தொடரின் பிரதானக் களம்! காவிரி நதியையே தன் தோள்மாலை போல் நிலமிசை சூடிக்கொண்டு, தாமச நித்திரையில் துயில் கொண்டிருப்பது போல் தோற்றம் தரும் அரங்கநாதப் பெருமாளே தொடரின் நாயகன்!
அரங்கன், தொடரின் நாயகன் மட்டுமல்ல, ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் அவனே நாயகன்! மண்மிசை குடிகொண்டிருக்கும் இவன் கோயிலின் பின்புலத்தில் தான் எத்தனை ரசமான சங்கதிகள்! `கோவில்’ என்றாலே பிரதான மிக்கதாயும், வரலாற்றுத் தொடர்புடையதாகும் அற்புதங்களின் நிலைக்கலனாகவும் இருப்பதை, நாம் நம் மண்மிசை உள்ள பல கோயில்களை வைத்து உணரலாம். தனக்கும் முதுமை வரும், தன் வாழ்வும் ஒரு நாள் முடிந்து போய்விடும் என்கிற எண்ணம் அவனை நெருடத் தொடங்கி விட்டது. இந்த நெருடல், `நிறைவான பூரணமான வாழ்வென்பது எது’ என்கிற கேள்வியையும் எழுப்பியபோது, அதற்கான விடை அவன் தந்தையான மனுவிடமிருந்தே அவனுக்குக் கிடைத்தது.பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனின் எழுத்தில் உள்ள ரசனை இது, அவரது உறவினர் ஏ.எஸ்.ராகவன் எழுத்தாளர். சேலத்திலிருந்த எழுத்தாளர் மகரிஷியுடன் நெருக்கம் பா.செயப்பிரகாசம் எழுதி சிகரம் இதழில் வெளியான இருளுக்குள் இழுப்பவர்கள் சிறுகதை அவரை எழுதத்தூண்டியது இந்திரா சௌந்தரராஜன். தனது முன்னோடியாக பா.செயப்பிரகாசம் மற்றும் லா.ச. ராமாமிர்தம் ஆகியோரை குறிப்பிடுகிறார். இவர் தன் அன்னை பெயரை இணைத்துக்கொண்டு எழுத தூண்டியவர் மகரிஷி.
இந்திரா சௌந்தர்ராஜனின் முதல் படைப்பு 1978- ஆம் ஆண்டில் கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற 'ஒன்றின் நிறம் இரண்டு' என்ற குறுநாவல். இந்திரா சௌந்தர்ராஜன் எழுத வந்த காலங்களில் மர்மக்கதைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் அவரும் மர்மக்கதைகள் பல எழுதி அதில் நிறைவில்லாமல் வாழ்க்கை பற்றிய தேடல்கள், கேள்விகள் மூலமாக மூலம் அமானுஷ்ய நாவல்களை எழுத ஆரம்பிக்கிறார். ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த 'கோட்டைபுரத்து வீடு' என்ற தொடரின் மூலம் பொதுவாசகர்களைக் கவர்ந்த இவர் பின்னர் 'ஐந்து வழி மூன்று வாசல்', 'ரகசியமாய் ஒரு ரகசியம்' போன்ற தொடர்களை எழுதினார். அமானுஷ்யம், சித்தர்கள் பற்றிய குறிப்புகள், ஆன்மிக மர்மங்கள் போன்றவற்றை களமாகக்கொண்டு கதைகளை எழுதினார்.
காலமான. பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன்
மதுரை டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
தனது வீட்டில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. பத்திரிகையாளர்கள் மற்றும் இலக்கிய வட்டம் திரைப்பட எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட காலப் பெட்டகம் காலமானதால் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்