ரபி ரே-க்கு மக்களவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை
மக்களவை முன்னாள் சபாநாயகர் திரு ரபி ரேயின் பிறந்த நாளை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திரு ரபி ரே படத்துக்கு, மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், மக்களவை பொதுச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங் மற்றும் மாநிலங்களவை பொதுச் செயலாளர் திரு பி.சி.மோடி ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களும் திரு ரபி ரே-க்கு மரியாதை செலுத்தினர்.
ஸ்ரீ ரபி ரே 1926 நவம்பர் 26 அன்று ஒரிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பனராகர் கிராமத்தில் பிறந்தார். 1967-ம் ஆண்டில் முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் (4-வது மக்களவை). திரு ரே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். திரு ரபி ரே ஒன்பதாவது மக்களவையின் சபாநாயகராக 1989 டிசம்பர் 19 முதல் 1991 ஜூலை 09 வரை பதவியில் இருந்தார்.
கருத்துகள்