முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

BSNL வழங்கும் நேரடி சேட்டிலைட் இணைய சேவை அறிமுகம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொலைத்தொடர்புத் துறை நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய சேவையை அறிமுகம் செய்கிறது.


இந்தியாவின் எந்தவொரு பகுதியிலுமுள்ள இந்திய மக்கள் அனைவருக்கும் நெட்வொர்க் இணைப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் டைரக்ட்-டு-டிவைஸ் என்ற புதிய சாட்டிலைட் இணைப்பு சேவையை (direct-to-device satellite connectivity service) அறிமுகம் செய்கிறது. இந்தியாவிற்குள் Starlink சாட்டிலைட் சேவையைக் கொண்டு வர அமெரிக்காவின் எலான் மஸ்க் ட்ரை முயற்சிக்கும் நேரத்தில் BSNL-ன் இந்த அறிவிப்பு எலான் மஸ்க் கவனத்தையே ஈர்த்துள்ளது. இந்திய அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு இயக்குனரான BSNL, கலிபோர்னியா நாட்டைச் சேர்ந்த தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான வியாசாட் (Viasat) உடன் இணைந்து, இந்தியாவில் முதல் நேரடி-சாதன செயற்கைக்கோள் இணைப்பு சேவையை (India's first direct-to-device satellite connectivity service) அறிமுகப்படுத்தியுள்ளது.


பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் வியாசாட் (Viasat) ஆகிய இரண்டு நிறுவனங்களும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு தடையில்லா இணைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

bsnl-satellite-to-device-service கேபிள் இணைப்பு இல்லை செட்-டாப் பாக்ஸ் இல்லை BSNL-க்கு இலவச TV சேவை. 

பிஎஸ்என்எல்-ன் புதிய சாட்டிலைட்-டு-டிவைஸ் சேவை (BSNL's Satellite-to-Device service) இனி பிஎஸ்என்எல் D2D சேவையுடன் இணையும் இதன் பயனாளர்கள் இந்தியாவின் எந்த இடத்தில் குறிப்பாக மலைப்பிரதேசம் மற்றும் பாலைவனம், கடல் வெளி எங்கிருந்தாலும் சரி, எந்தவொரு நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்திலுருந்தாலும் சரி, இனி எளிமையான நினைத்த நேரத்தில் தகவல் தொடர்பு சேவையை பயன்படுத்த முடியுமென்று கூறப்படுகிறது. BSNL அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவை எப்படி இயங்கும்? இதற்கு தனிப்பட்ட SIM கார்டு தேவையா? இல்லையா?நெட்வொர்க் இல்லாமல் எப்படி இணைப்பு வருகிறது? இந்த புதிய சாட்டிலைட் இணைப்பு சேவைக்கான கட்டணம் எவ்வளவு என பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்ததற்கான விடைகளை நாம் தெரிந்துகொள்ளலாம். BSNL ன் புதிய சாட்டிலைட்-டு-டிவைஸ் சேவை (BSNL's Satellite-to-Device service) ஒரு செயற்கைக்கோள் இணைப்பு சேவையாகும். இது நாட்டின் தொலைதூர மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்புக்குள்ள தடைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

BSNL-ன் 26-26 பிளான்.Jio, Airtel, Vi-உள்ள பயனாளர்கள் இனி நெட்வொர்க் மாறுதல் செய்வார்கள் காரணம் 

கிராமப்புறங்களில் கூட இனி செல்லுலார் நெட்வொர்க் தேவையில்லையா? தொலைதூர கிராமங்களில் வசிக்கும் பயனர்கள் மற்றும் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த புதிய செயற்கைக்கோள் சேவையுடன் இணைந்துக்கொள்ளலாம். அதேபோல், இந்த சேவையை பயன்படுத்தி மக்கள் செல்லுலார் அல்லது வைஃபை கவரேஜ் குறைவாக உள்ள பகுதிகளில் அவசர அழைப்புகள் (emergency calls), எஸ்ஓஎஸ் செய்தி (SOS messaging) அனுப்புதல் மற்றும் யுபிஐ (UPI) பணப் பரிமாற்றங்களைக் கூட மேற்கொள்ளலாம் என BSNL அறிவித்துள்ளது.இந்த சேவைக்கு பயனர்கள் வழக்கமான செல்லுலார் நெட்வொர்க்குகளை (cellular network) நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. சரியாக சொல்ல வேண்டுமென்றால். சுமார் 36,000 கிமீ தொலைவில் உள்ள புவிசார் செயற்கைக்கோள்கள் (geostationary satellites) மூலம் இருவழித் தொடர்பை வழங்க இந்த புதிய BSNL சேவை நிலப்பரப்பு அல்லாத நெட்வொர்க் (non-terrestrial network - NTN) இணைப்பைப் பயன்படுத்துகிறது என்பது குறிபிடத்தக்கது.



பிஎஸ்என்எல்-ன் புதிய சாட்டிலைட்-டு-டிவைஸ் சேவைக்கு அக்டோபர் 2024 ல், BSNL-ன் நேரடி செயற்கைக்கோள் இணைப்புக்கான சோதனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்தச் சேவையானது BSNL-ன் மூலம் இன்னும் 1 மாதத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. BSNL Satellite-to-Device சேவை கட்டணம் குறித்த தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. அதேபோல், இந்த புதிய சாட்டிலைட் இணைப்பு சேவை ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் இணைக்கப்படுமா அல்லது தனி சந்தாக்கள் தேவையா என்பதையும் BSNL இன்னும் குறிப்பிடவில்லை.மேலும், சாதனத்தின் இணக்கத்தன்மை மற்றும் விலை நிர்ணயம் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை BSNL இன்னும் அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை துவங்க இன்னும் 1 மாத காலம் மட்டுமே இருக்கும் நிலையில், விலை மற்றும் சேவை தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்குள் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் சேவை உள்நுழைவதற்குள் BSNL அதன் சாட்டிலைட் சேவையை அறிமுகம் செய்துள்ளது எலான் மஸ்க்கிற்கு வியப்படையச் செய்துள்ளது.

இனி பிஎஸ்என்எல் D2D சேவையுடன் இணையும் பயனாளர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும் சரி, எந்தவொரு நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்தில் இருந்தாலும் சரி, இனி எளிமையான நினைத்த நேரத்தில் தகவல் தொடர்பு சேவையை பயன்படுத்த முடியுமென்று கூறப்படுகிறது. BSNL அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவை எப்படி இயங்கும்? இதற்கென்று பிரத்தியேக SIM கார்டு தேவையா? இல்லையா

இனி பிஎஸ்என்எல் D2D சேவையுடன் இணையும் வேட்க்கையாளர்கள் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, எந்தவொரு நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்தில் இருந்தாலும் சரி, இனி எளிமையான நினைத்த நேரத்தில் தகவல் தொடர்பு சேவையை பயன்படுத்த முடியுமென்று கூறப்படுகிறது. BSNL அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவை எப்படி இயங்கும்? இதற்கென்று பிரத்தியேக SIM கார்டு தேவையா? இல்லையா?நெட்வொர்க் இல்லாமல் எப்படி இணைப்பு ஏற்படும்? இந்த புதிய சாட்டிலைட் இணைப்பு சேவைக்கான கட்டணம் எவ்வளவு என்று பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கான விடைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க. BSNL இன் புதிய சாட்டிலைட்-டு-டிவைஸ் சேவை (BSNL's Satellite-to-Device service) ஒரு செயற்கைக்கோள் இணைப்பு சேவையாகும். இது நாட்டின் தொலைதூர மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு தடைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.தொலைதூர கிராமங்களில் வசிக்கும் பயனர்கள் மற்றும் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த புதிய செயற்கைக்கோள் சேவையுடன் இணைந்துக்கொள்ளலாம். அதேபோல், இந்த சேவையை பயன்படுத்தி மக்கள் செல்லுலார் அல்லது வைஃபை கவரேஜ் குறைந்துள்ள பகுதிகளில் அவசர அழைப்புகள், எஸ்ஓஎஸ் செய்தி அனுப்புதல் மற்றும் யுபிஐ  மூலம் பணம் அனுப்பி பெறுதல்களையும் மேற்கொள்ளலாம் என BSNL அறிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...