திருச்சிராப்பள்ளியில் ரூபாய் 75 லட்சம் ஹவாலா பணம் இரயில் முனையத்தில் பறிமுதல்
ஹௌராவிலிருந்து சென்னை வழி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் இரயில் இன்று அதிகாலை 02:45 மணியளவில் திருச்சிராப்பள்ளி ஜங்ஷனை வந்தடைந்த போது ரயில்வே பாதுகாப்புபடை ஆய்வாளர் செபாஸ்டியன் மற்றும் குற்றவியல் காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.ரயில் நடைமேடை எண் 6 ல் வந்த ரயிலிலிருந்து காலை 3 மணியளவில் சுரங்கப்பாதை வழியாக நடந்து வந்துகொண்டிருந்த பயணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த வேதமாணிக்கம் என்பவரது மகன் ஆரோக்கியதாஸ் (வயது 49) அணிந்துவந்த கருப்புநிற தோள்பையை ரெயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் சோதனை நடத்தியதில் 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுக்கட்டாக ஹவாலா பணம் இருந்தது பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், 75 லட்சம் ஹவாலா பணத்தையும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமானவரித்துறையின் துணை இயக்குநர் ஸ்வேதா முன்னிலையில் ஒப்படைத்தனர். தொடர்ந்து ஹவாலா பணத்தை கடத்தி வந்த குற்றம் காரணமாக ஆரோக்கியதாஸ் மீது வழக்குபதிவு செய்து சிறையிலடைத்தனர்.
கருத்துகள்