திருமாவளவனின் விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜுனா விலகல் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா கடிதம் மூலம் அறிவிப்பு
நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவர்' என திருமாவளவனைக் குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா இராஜினாமா கடிதம் எழுதினார். கட்சியிலிருந்து ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வீணான விவாதங்களுக்கு வழிவகுக்கக் கூடாது என்று எண்ணுகிறேன். - ஆதவ் அர்ஜூனா விலகல் கடிதம்
இதற்கான அரசியலில் அவர் கொடுத்த விலை 145 கோடிக்காக இருக்கலாம் என்பதே தற்போது அரசியல் தலைவர்கள் மத்தியில் உள்ள பேச்சாக அமையும், ஆதிதிராவிட பழங்குடியினர் மக்களுக்காக அரசியல் செய்வது அவசியம். அவர்களின் நலன் முக்கியம். அது மட்டுமே ஒருவகை, ஆதிதிராவிட பழங்குடியினர் மக்களை மையப்படுத்தி அரசியல் செய்வது அரசியலை சுருங்கச் செய்துவிடும்.
அனைத்து சமூக மக்களுக்கான நல ஜனநாயக வெகு ஜனஅரசியல் வேண்டும். அதே நேரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலையும் தவிர்க்காமல் செய்த ஓமந்தூர் ரெட்டியார், குமாரசாமி ராஜா, ராஜகோபாலாச்சாரி, கு.காமராஜ், சி.என்.அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி எம்.ஜி.ராமச்சந்திரன் இங்கு முதல்வர்கள் போன்ற தலைவர்கள் உண்டு.
ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசியல் மட்டுமே பிரதான அரசியல் என்று கொண்டு போனவர்களும் தற்போது தாங்கள் பொதுவானவர்கள் என்று காட்டிக்கொள்ளும் போது பொதுவான மக்களுக்கான அரசியல், அதில் கூடுதலாக ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த கவன அரசியல் தான் சிறப்பாக இருக்கும். அதை விடுத்து ஒருசாரர் பக்கம் எடுக்கப்படும் அரசியல் மற்ற சமூக மக்களுக்கு எதிரானவர் என்கிற கருத்தை எதிராளிகள் அச்சமூகத்தினர் இடையே பதிவு செய்ய நாமே வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக அமைந்து விடும். அரசியலில் முடிவெடுப்பதில் ஆரோக்கியமான நடுநிலையான கவனமும், பொது சிந்தனையும் முக்கியம்.
என்பதை ஆதவ் அர்ஜுனா விரைவில் உணர்வார் திருச்சிராப்பள்ளியைப் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா 1982ஆம் ஆண்டு பிறந்தவர்.. ஆதவ் அர்ஜுனாவின் தாய் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அலுவலர் திலகவதியின் சகோதரியாவர். ஆதவ் அர்ஜுனாவுக்கு 5 வயதாகும் போதே அவரது தாய் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர்களின் குடும்பத்திற்குப் பெரிய வருமானம் இல்லாமல் இருந்ததனால் குடும்ப வன்முறையை எதிர்கொண்ட தனது தாய் தற்கொலை செய்து கொண்டதாக ஆதவ் அர்ஜுனா ஒரு நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார். தாய் உயிரிழந்து விட்டதால். உறவினர் ஒருவரின் பாதுகாப்பிலேயே ஆதவ் அர்ஜுனா வளர்க்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் சேர்ந்த லாட்டரி சீட்டு மார்ட்டினின் மகள் டெய்ஸியை ஆதவ் அர்ஜுனா காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் கூடைப்பந்தில் ஆர்வமாக இருந்தார். இதனால் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். இப்போது கூட இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக ஆதவ் அர்ஜுனா உள்ளார். விளையாட்டு ஒரு பக்கம் வைத்து அரசியலிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தினார் அது வியாபாரம் கருதியே செய்தார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அப்போது நமக்கு நாமே என்ற பயணத்தை தற்போதய முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அந்தப் பயணத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்களில் ஒருவராக ஆதவ் அர்ஜுனா இருந்ததாகத் தெரிகிறது.
கோயம்புத்தூர் மொத்த லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினின் மகள் டெய்ஸி என்பவரை ஆதவ் அர்ஜுனா காதலித்துத் திருமணம் செய்து கொண்டதன் பிறகும் கூடைப்பந்தில் ஆர்வமாக இருந்தார். இதனால் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக வழி வகுத்தது
"கனத்த இதயத்துடன்.. விசிகவில் இருந்து விலகுகிறேன்.." என ஆதவ் அர்ஜுனா கடிதம் மூலம் அறிவிப்பு
அதன் பிறகு தேர்தல் வியூக வல்லுநர்களான பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனில் ஆகியோருடன் இணைந்து பயணித்து இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் திமுகவுக்காக அவர் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிலிருந்து விலகியவர். 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். விசிகவுக்காக பணியாற்றத் தொடங்கினார். இந்தாண்டு தொடக்கத்தில் விசிக சார்பில் திருச்சிராப்பள்ளியில் "வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் நடந்த மாநாட்டையும் ஒருங்கிணைத்தார்.
அதன் பிறகு தேர்தல் வியூக வல்லுநர்களான பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனில் ஆகியோருடன் இணைந்து பயணித்து இருக்கிறார். அந்த காலகட்டத்தில் திமுகவுக்காக அவர் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அதில் இருந்து விலகிய இவர். 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். விசிகவுக்காக பணியாற்றவே
விசிக: அந்த மாநாட்டில் தான் திருமாவளவன் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா இணைந்தார். அதன் பிறகு 21 நாட்களில் அவருக்கு விசிக துணைப் பொதுச்செயலாளராக பணி வழங்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட அவர் விசிக சார்பில் போட்டியிட இருந்தார். இதற்காகவே விசிக ஒரு பொதுத் தொகுதியைக் கேட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், பொதுத் தொகுதி கிடைக்காததால் அந்தத் தேர்தலில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடவில்லை.
இந்தச் சூழலில் தான் விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அதேநேரம் அவர் நடிகர் விஜய் தலைமை கொண்ட தமிழக வெற்றிக் கழகத்திலும் இணையலாம்.
கருத்துகள்