சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த நிகழ்வில் . நடைபாதையில் பிரியாணி கடை நடத்தும் நபர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவி விடுதியில் தங்கி கல்வி பயில்கிறார். அவருக்கும், 3-ஆம் ஆண்டு பயிலும் மாணவருக்கும் சில மாதங்களாக நட்பு இருந்துள்ளது. டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி இரவு 8 மணி அளவில் இவர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது கட்டுமானப் பணிகள் நடந்து வரும் இடத்தின் பின்னால் மறைவான இடத்தில் பேசிக்கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் மறைவான இடத்தில் இருந்து அவர்களை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அங்கு வந்தவர், அந்த வீடியோவைக் காண்பித்து, சமூகவலைதளங்களில் பரப்பி விடுவதாக கூறி அவர்களை மிரட்டியுள்ளார்.
பின்னர், மாணவரை தாக்கியதுடன் விரட்டியுள்ளார். பிறகு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், தப்பியுள்ளது தொடர்பாக விடுதி அறையில் உள்ள தோழிகள் மற்றும் பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். வெளியூரிலிருந்த பெற்றோர் உடனடியாக சென்னை வந்து நடந்த சம்பவம் குறித்து அறிந்து கோட்டூர்புரம் காவல்துறை உதவி ஆணையர் பாரதிராஜாவிடம் டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி புகார் கொடுத்தார். அதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் அருணுக்கு தெரிவிக்கப்பட்டு
அவரது உத்தரவில் தென் சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் நேரடி மேற்பார்வையில், மைலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் நான்கு காவல் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னதாக ராஜா அண்ணாமலைபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகம் முழுவதுமுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கைப்பற்றி சைபர் க்ரைம் காவல் துறை உதவியுடன் தனிப்படைக்காவல் துறை விசாரணை செய்தனர். விடுதி மாணவர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதில், மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது சென்னை கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட
பத்திரிகை செய்திக்குறிப்பில்
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகார் சம்மந்தமாக.
கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 -ந் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அலுவலர்கள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை/ செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
புலன்விசாரணையின் போது, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெருநகர சென்னை காவல் துறை அலுவலர்களும், பல்கலைக்கழக பாதுகாப்பு பணியாளர்களும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. என அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதானவன் சைதாப்பேட்டை திமுகவின் பகுதி மாணவரணி துணை அமைப்பாளர் என்ற தகவல் உண்மை உண்டா என்பது குறித்து சமூக ஊடகங்கள் பேசுகிறது. பெயர் மாற்றம் செய்யப்பட்ட டெல்லி நிர்பயா டாக்டர் எம்.கே ஷர்மிளா மற்றும்
பில்கிஸ் பானு ஹத்ராஸ் உன்னாவ் கதுவா மணிப்பூர் பொள்ளாச்சி ஸ்ரீமதி மற்றும் கொல்கத்தா மருத்துவர் இதெல்லாம் தராத அதிர்ச்சியை இந்த சம்பவம் தந்திருக்கும் நிலையில் கைதான ஞானசேகருக்கு கால் உடைந்த நிலையில் கட்டுப் போட்ட புகைப்படங்கள் வந்த நிலையில் நீதிமன்றத்தில் விரைந்து வழக்கில் குற்றவாளிக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முடிவில் தக்க தண்டனை பெற்றுத் தருவதில் காவல்துறை நடவடிக்கை முக்கியம்.
திமுக வட்டச் செயலாளர் சண்முகம் என்பவரின் இடது கரமாகச் செயல்பட்டார் என்றும் தள்ளுவண்டியில் பிரியாணி விற்கும் நபர். ஆனால் மகேந்திரா தார் ஜீப் வைத்துள்ளார் எனவும் இவர் மீது நீலாங்கரை காவல் நிலையத்தை உடைத்துத் திருடிய கொள்ளை வழக்கும் , பாலியல் வன்முறை வழக்குகளென ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும். 2011 ஆம் ஆண்டு இதே போன்ற பாலியல் வன்முறை வழக்கும் தற்போதைய உள்ளதாகவும். இதே பல்கலைக்கழக வளாகத்தில் இவரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் எனத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர் நேரடியாக புகார் அளிக்க முன் வராதாலும், திமுகவில் கட்சிப் பொறுப்பில் இருப்பவர் என்பதால் இதுவரை தப்பி வந்துள்ளான். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் பேசும் நிலையில்
பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிய ஞானசேகர் கீழே விழுந்ததில் இடது கை மற்றும் இடது கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது என காவல்துறை தரப்பில் தகவல். இதில் பொது நீதி யாதெனில்: எந்த வழக்கறிஞரும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆஜராகாமல் இருக்கும் நிலை வரவேண்டும். தக்க காலம் கடந்து போகாது நீதி நீதிமன்றம் மூலம் வரவேண்டும்
கருத்துகள்