முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அகஸ்தியர்.விழா

ஆன்மீகப் பேச்சாளர் டாக்டர் சுதா சேஷய்யன்  செம்மொழி ஆராய்சி நிறுவனத்திற்கு துணைத் தலைவராவார் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி 

அகத்தியருக்கு விழா செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் கொண்டாடும்! சப்த ரிஷிகளில்  அகத்தியரை .சித்த மருத்துவத்தை வளர்த்தெடுத்த பதினென் சித்தர்களில் ஒருவராகவும் அகத்தியர் விளங்கும் நிலையில்.

ரிக் வேதத்தில் இருக்கும் பாட்டையும் இவர் எழுதியுள்ளதால் நமது  பெயர் தெரியாத சித்தர்கள் எழுதி வைத்த சித்த மருத்துவக் குறிப்புகளும் உண்டு தற்போது நாடி ஜோதிடம் பார்க்கும் பலரும் அகஸ்தியர் பெயரை பயன்படுத்த அந்த ஆதிசிவன் கல்யாணத்தின் போது இருந்ததாகவும், சிவன் கல்யாணத்தைக் காண அனைவரும் வட இந்தியா நோக்கி பயணப்பட்டு விட்டதால், பூமி தென் திசையில் சமன் குறைந்து கீழே போய்விடும் என்பதால், அதைச் சமன் செய்ய அகத்தியரை தென் திசைக்கு அனுப்பியதாக வரலாறு பேசும் நிலையில், தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவரும் அகத்தியரே என அவருக்கு மொழி அறிஞர் என்ற அந்தஸ்தை தந்துள்ளனர்.

தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவரே அகத்தியர் என பல காலம் நம்மை நம்ப வைத்து இருந்ததால், நமது மகாகவி பாரதியாரும் "நம்பி போகிற போக்கில், ஆதிசிவன் பெற்றுவிட்டான்– என்னை ஆரிய மைந்தன்  அகத்தியன் என்றொர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணம் செய்தான்". அகத்தியர் தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.அகத்தியமலை  மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ஒரு மலை முடியாகும். அதன் உயரம் 1,868 மீட்டர். மேட்டுப்பாளையம் அருகிலுள்ள அகத்தியர் ஞான பீடத்தில் குருபூஜை விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் செல்லும் சாலையில் கல்லாறு இரயில்வே குறுக்கீடு அருகே அகத்தியர் ஞானபீடமுள்ளது. இங்கு சித்தர் நெறிமுறைப்படி சர்வதேச நிவாரண மூலிகை மகா யாகமும், ஞான பீடத்தின், 22 ஆம் ஆண்டை முன்னிட்டு, அகத்தியர் குருபூஜை விழாவும் நடைபெற்றதுது. காலையில் ஏழு மணிக்கு கொடியேற்றம், அதைத்தொடர்ந்து, 18 சித்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் குருபூஜை விழா துவங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அகத்தியர் ஞானபீட பீடாதிபதி தவத்திரு சரோஜினி மாதாஜி அம்மையார் தலைமை தாங்கினார் தொடர்ந்து பஜனை நடைபெற்றது . பின்னர் சாதுக்கள் அருளாசியும், சரோஜினி மாதாஜியின் அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம், 2:00 மணிக்கு சர்வதேச நிவாரண யாகம் நடைபெற்றது. மாலை, 5:00 மணிக்கு பிரசாதம், தீர்த்தம் ஆகியவை வழங்கப்பட்டன  ராமசுப்பிரமணியம் நன்றி கூறினார் அதேபோல திருநெல்வேலி: உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு அகத்திய முனிவர் கோவிலில் திருவிழா நடந்தது. அத்தாளநல்லுார் கிராமத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அகஸ்தியர் திருக்கோவிலில் ஆயில்யம் நட்சத்திரதினத்தில் மகரிஷி



அகஸ்திய மாமுனிவரின் உதயதினம் மற்றும் உலக சித்தர்கள் தினத்தினை முன்னிட்டு அத்தாளநல்லுார் அகத்தியருக்கு திருவிழா நடந்ததில் அகத்திய முனிவருக்கு காலை சிறப்பு ஹோமம், பூஜைகள் அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள், மேள தாளங்கள் முழங்க நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட அகத்தியர் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சிகொடுத்தார். ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர். இந்த நிலையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்கு செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்மொழி ஆய்வு மற்றும் தமிழ் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதல்வரைத் தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ரா.சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார். செம்மொழி தமிழாய்வு துணை தலைவராக சுதா சேஷய்யன் கடந்த செப்டம்பர் மாதம் நியமனம் செய்யப்பட்டார் 

இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யனை நியமித்து மத்திய கல்விஅமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. அவர் பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார். மருத்துவர் சுதா சேஷய்யன் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியையாகவும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் ஆர்வலரானஅவர், 30-க்கும் மேலான இலக்கிய, ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி, சொல்லின் செல்வர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அகஸ்தியர் விழா நடத்த உள்ள நிலையில் அதற்கு கடவுள் மறுப்பாளர்கள் மத்தியில் விவாதம் நடக்கிறது அகஸ்தியர் ஒரு ஆன்மீக சித்தர் என்பதை அறியாமல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...