மதுரை பொதுப்பணித்துறையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய்.1.11 லட்சத்துடன் சிக்கிய சையது ஹபீப்.
மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய்.1.11 லட்சத்துடன் சிக்கிய சையது ஹபீப். மதுரை பொதுப்பணித்துறையின் தலைமை அலுவலகத்தில் அலுவலர்கள், மற்றும் கடைநிலை ஊழியர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார்கள் வந்துள்ள நிலையில் சம்பவத்தன்றும் ஏராளமான லஞ்சப்பணங்கள் கைமாறியதாகவும் தகவல்கள் கிடைத்ததையடுத்து,
பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் அன்றாட நடவடிக்கைகளை கவனித்தவர்கள், நீர்வளத்துறை வைகாசி இல்லத்தில், நடத்திய
சோதனையில் அங்கு பணியிலிருந்த உதவி செயற்பொறியாளர் சையது ஹபீப் நிறைய பணம் வைத்திருப்பதைக் கண்டனர். அதற்கு முறையான கணக்குகள், மற்றும் ஆவணங்கள் இல்லை என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டதையடுத்து, சையது ஹபீப் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து எண்ணிய போது.மொத்தம் ரூபாய்.1.11 லட்சம் இருந்தது. எந்தக்கணக்கிலும் வராத பணத்தைப் பறிமுதல் செய்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை அலுவலர்கள், சையது ஹபீப்பை அடுத்த நிலை விசாரணைக்காக கூட்டிச்சென்றனர். விசாரணை நடந்து வருகிறது.
கருத்துகள்