மல்லி காவல் நிலையத்தில் நடத்திய விசாரணையில் சிங்கம்புணரியில் பணம் திருடிய குற்றவாளிகள் சிக்கினர் பணம் மீட்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூர் சரவணன் எனும் நபர் திண்டுக்கல் சாலையிலுள்ள கரூர் வைஸ்யா வங்கிக்குச் சென்று
திரும்பிய வழியில் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று நிறுத்தி வைத்திருந்த இரண்டு சக்கர வாகனத்தில் வைத்திருக்கும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பெயரோ முகமோ தெரியாத சிலர் திருடினர்.
அது குறித்து அப்போது சிங்கம்புணரி காவல்நிலையத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொடுக்கப்பட்ட புகார் மீது குற்றவாளி அடையாளம் தெரியாத நிலையில் விசாரணை முடியாத தேக்கநிலை இருந்து வந்த.
சூழ்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லி காவல்நிலையத்தில் நடந்த வேறு ஒரு திருட்டு வழக்கில் பதிவான திருட்டு வழக்கில் விசாரணை நடத்தி வந்தபோது கைதான ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த குற்றவாளிகள் நாகராஜ், (வயது 52), வெங்கடேசன் (வயது 30,) ஆகிய இரண்டு நபர்களிடம் விசாரணையில் பல இடங்களில் திருடியதையும் ஒப்புக்கொண்ட நிலையில் அந்த குற்றாவாளிகளை
சிங்கம்புணரி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் திருடிய பணத்தை மணல்மேட்டுப்பட்டி கூட்டி வந்து குற்றவாளிகள் ஒரு ஆலமரத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பதாகத் கூறிய தகவல் படி குற்றவாளிகள் அடையாளம் காட்டிய அந்த மரத்திலிருந்து ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை சிங்கம்புணரி காவல்துறையினர் மீட்டதாகத் தகவல்.
சிங்கம்புணரியில் வங்கி முன் நூதன முறையில் பணத்தை சோப்படி செய்து திருடிய திருடர்கள் இருவரை மல்லி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்த நிலையில் பணத்தை மீட்டனா். சிங்கம்புணரி காவல் நிலைய வழக்கிலும் இவர்கள் கைதான நிலையில், தமிழ்நாடு மற்றும், ஆந்திரப்பிரதேசக் காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் இந்த இருவர் மீதும் உள்ளதாக தகவல் தெரிவித்தனா்.
கருத்துகள்