முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீ இராமரைப் பாடிய கவிச்சக்கரவர்த்தியின் காதையை ரசித்தவர்கள் கம்பரைப் போற்றாத நிலை ஏன்?

 "ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூறு ஒழித்துத் தேவன் திருவழுந்துர் நன்னாட்டு மூவலூர் சீரார் குணாதித்தன் சேய் அமையப் பாடினான் காரார் காகுத்தன் கதை"

கம்பர் தமது காவியத்தைப் பாடி முடித்த காலம் சகாப்தம் 1100. அதாவது பொது ஆண்டு 1178 ஆகும். மஹாகவி பாரதியார் ,”கல்வியில் சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு”.  என்கிறார்,              "உற்றது கொண்டு மேல் வந்து உறுபொருள் உணரும் கோளார். மற்றது வினையின் வந்தது ஆயினும். மாற்றல் ஆற்றும் பெற்றியர் பிறப்பின் மேன்மைப் பெரியவர் அரிய நூல்கள் கற்றவர் மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார்......." கம்பராமாயணத்தில் மரபு நடையில் கூறுகிறார்.


ஒரு நாட்டின் அமைச்சன் எப்படி இருக்க வேண்டுமென இலக்கணம் கூறும் கம்பனின் பாடலிது.                 ஸ்ரீ இராமரின் வாழ்க்கையை மக்கள் மனதில் பதிய வைத்ததில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் முன்னோடி!” - ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆகஸ்ட் மாதம் 

இராமேசுவரத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் 'கம்பனில் இலக்கிய தாக்கம் எனும் நூலை வெளியிட இலங்கை இ.ஜெயராஜ் முதல்பிரதியை பெற்றுக் கொண்டார்.இதில் வள்ளல்



டாக்டர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், தற்போதைய பேராசிரியருமான டாக்டர் கே.குணசேகரனுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி வழங்கிச் சிறப்பித்தார்.  ''ஸ்ரீராமரின் வாழ்க்கையை, சாமானிய மக்கள் மனதிலும் கொண்டு செல்வதில் கம்பர் முன்னோடியாகத் திகழ்நதார்'' என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.


தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி இராமேசுவரத்தில் நடைபெற்ற கம்பன் விழா குந்துக்கால் கடற்கரையில் அமைந்துள்ள  சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அங்கு, ஆளுநரை திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவணத்தின் (இந்த மடம் சுவாமி சித்பவானந்தர் மற்றும் வெ வீர நா.அரு  செட்டியார் உதவியால் ஏற்பட்டது) அதன் தற்போதைய நிர்வாகம் ஸ்ரீமத் சுவாமி நியமானந்தா மகராஜ் ஆளுநரை வரவேற்றார்.இராமேஸ்வரம் இலட்சுமண தீர்த்தத்தில் 35 வயது ஆண்டு கம்பன் விழாவில், ​​பாரதத்தின் முக்கிய அடையாளம் மற்றும் விழுமியங்களை உள்ளடக்கிய பிரபு ஸ்ரீ இராமரின் வாழ்க்கை மற்றும் செய்தியைப் பரப்புவதில் கம்பரின் ஆழ்ந்த பங்களிப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவாகக் கூறினார்.


நமது தேசத்தின் விரிவான மறுமலர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், கம்பரின் பணியின் நீடித்த பொருத்தத்தை எடுத்துக்காட்டிய அவர், தேசத்திற்கான தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கம்பர் கழகம் இந்த பார்வையை முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், நமது ஆன்மீக மற்றும் கலாச்சார நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நீதி மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும், மேலும் கருணை மற்றும் இணக்கமான உலகத்திற்கு நமது எல்லைகளுக்கு அப்பால் கொண்டு செல்லவும் ஊக்குவித்தார் எனத் தெரிவித்தார் 

நினைவிடத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என். ரவி, அங்கிருந்த ஓவியக் கூடத்தையும், வாசக சாலையையும் பார்வையிட்டார். பிறகு சுவாமி விவேகானந்தரின் லட்சியங்கள் மற்றும் போதனைகள், நம்மை எவ்வாறு ஊக்குவித்து, வழிகாட்டி, உற்சாகப்படுத்துகின்றன என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது விவாதித்தார். தொடர்ந்து இராமேசுவரத்திலுள்ள தனியார் அரங்கத்தில் பிற்பகல் துவங்கிய கம்பன் விழாவில் பங்கேற்று மருத்துவர் இரா.குலசேகரன் எழுதிய 'கம்பனில் இலக்கிய தாக்கம்' என்ற நூலை வெளியிட்டார். இந்த நிகழ்வில், கம்பர் பிறந்த தேரழுந்தூர் மற்றும் கம்பர் மறைந்த நாட்டரசன் கோட்டையில் ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் கம்பர் விழா நடத்த வேண்டுமென ஆளுநருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.




கம்பர் புகழை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரப்புவதில் பெரும் பங்காற்றிய அகில இலங்கைக் கம்பன் கழகத்தைச் சேர்ந்த இ.ஜெயராஜுக்கு திருஞானசீலர் விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.


ஆளுநர் பேசும்போது, ''சிறுவயதில் எனது பாட்டி 100 ஆண்டுகளுக்கு முன்பே இராமேசுவரத்திற்கு யாத்திரை வந்ததைப் பற்றியும், இங்குள்ள இராமாயணத் தொடர்புகளையும் எனக்கு கதைகளாகக் கூறினார். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒருமுறையாவது இராமேசுவரத்திற்கு வந்து வழிபட வேண்டும் என்பது வாழ்நாள் கனவாகும். நவீன இந்தியாவை உருவாக்கிய டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமும் இங்கே தான் பிறந்தார்.

கம்பர் கவிச்சக்கரவர்த்தி மட்டும் கிடையாது. அவர் ஒரு சித்தர் மற்றும் மகரிஷியுமாவார். வால்மீகியால் இராமாயாணம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. அது கற்றவர்களால் மட்டுமே படிக்க முடிந்தது. ஆனால் கம்பர், ஸ்ரீ ராமரின் வாழ்க்கையை, சாமானிய மக்கள் மனதிலும் கொண்டு சென்றதில் முன்னோடியாகவே இருந்தார். கம்பரின் பாரம்பரியம் என்றென்றும் நினைவு கூறப்பட வேண்டும்.நாம் வெவ்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், எனும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் நாம் ஒரே நாடாக, குடும்பமாக உள்ளோம். நமது பாரத நாட்டின் ஆன்மாவாக பகவான் ஶ்ரீ ராமர் இருக்கிறார். அவர் நாட்டின் எல்லா இடங்களிலும் இருக்கிறார். 



இராமன் என்ற பெயர் இல்லாத குக் கிராமங்களோ, ஊர்களோ இல்லை,  நாம் உலகப் பொருளாதாரத்தில் 11வது இடத்திலிருந்து, தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். இனிவரும் காலத்தில் 3 வது இடத்திற்கு முன்னேறுவோம்,  உலகில்      கம்பராமாயணத்தை பல மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம். 

இலக்கியம் படைத்து, இராம காதையை பட்டி தொட்டி எல்லாம் பரவச் செய்தவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்"  என ஆளுநர் தெரிவித்தார்.       அவர் பிறந்த இடமான மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா தேரழுந்தூரில் ஆளுநர் முயற்சியால் வெறும் பொட்டல் மேடாக இருந்த இடத்தில்  இந்திய தொல்லியல் துறையின் சில ஏற்பாட்டில் மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள புல்வெளிகள் நிறைந்த கம்பர்மேடாக மாறிய நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஆய்வு மேற்கொண்டார். கம்பர் காலத்தில் கம்பர் குடும்பத்தினர் தங்களது வீட்டில் ஒருநாள் சமைத்த மண் பானையை உடைத்து விட்டு மறுநாள் புதிய பானையில் சமைப்பார்கள் எனவும் அவ்வாறு உடைக்கப்பட்ட ஓடுகள் அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்துள்ளது என ஆளுநரிடம் தெரிவித்தனர்.


அதைக்கேட்டு ஆளுநர் வியந்தார்.        அயோத்தி ஸ்ரீ ராமரும், தமிழ்க் கம்பரும் எனும் நிகழ்ச்சியில் ஜனவரி மாதம் ஆளுநர் ஆர் என் ரவி மயிலாடுதுறை அருகில் தேரழுந்தூரில் கம்பர் பிறந்த இடத்தில் நடந்த  நிகழ்ச்சியில் பங்கேற்றார். 17.1.2024 ல் தமிழ்நாடு ஆளுநர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரழந்தூர் கிராமத்தில் தொல்லியியல் துறையின் கம்பர்மேடு பகுதியினை காலை 11.30 மணிக்கு ஆய்வு செய்தார். காலை 11.45 மணிக்கு கம்பர் கோட்டத்திலுள்ள கம்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற தனியார் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இஆப பூங்கொத்து அளித்து வரவேற்றார்.  கம்பர் பிறந்த இடம், வழிபட்ட ஸ்ரீ வேதபுரீஸ்வர் கோவில், (ஆளுநர் வந்த பின்னர் அதன் புனரமைப்புத் திருப்பணிகள் துவங்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது)  திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற  ஆமருவிப் பெருமாள் கோவில் எனும் தேவாதிராஜன் எனும் வைணவத் திருக்கோவிலும், தேரழுந்தூர் வேதபுரீசுவரர் ஆலயத்தில் சௌந்தரநாயகி அம்மனும் சிவன் கோவிலில் உள்ளது.

கம்பர் இவ்வூரில் பிறந்ததற்கு ஆதராமாக உள்ள கம்பர் மேடு எனும் பகுதி இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர்,  பட்டினத்துப் பிள்ளையார்,  சேக்கிழார், வேதங்களில் பயிற்சி பெற்றவர்கள், தேவரும் மூவரும், திக்குப்பாலகர்கள் முதலியோர் கூடிய ஸ்தலம் திருமங்கையாழ்வார் திருமால் மீது மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் தேரெழுந்தூர் தேவாதிராஜன் கோவில் 23-வது திவ்ய தேசமாகும்.மூலவர் தேவாதிராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தால் ஆனவர். இத்திருத்தலம் திருமணத் தடை நீக்கும் ஸ்தலமாகும்.


கண்ணன் கார்முகில் மன்னனால் மேய்க்கப்பட்டிருந்த பசுக்களை ஒருசமயம் நான்முகனான பிரம்மன் கவர்ந்து சென்றார். அதை அறிந்த கண்ணன், மாயையால் வேறு பசுக்களைப் படைத்தார். நான்முகன் தன் தவற்றை உணர்ந்து, வேண்டவே, பெருமாள் ஆமருவியப்பன் என்ற பெயரால் இத்தலத்தில் எழுந்தருளினார். கம்பரின் அவதாரத் தலமாகும். கம்பர், நரசிம்ம அவதாரம் பற்றி இங்கு தான் பாடினார். கம்பருக்கும் அவர் மனையாளுக்கும் கோயிலுக்குள் சிலை எழுப்பியுள்ளனர். தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். இங்கு பெருமாள் ருக்மிணி, சத்தியபாமாவுடனும் பசுங்கன்றுகளுடனும், நான்கு திருக்கரங்களுடனும் ஸ்ரீ கிருஷ்ணனாக அருள்பாலிக்கிறார். 

ஊர்த்துவரதன் என்ற மாழவ அரசன் தவத்திறகு மெச்சி பிரம்மா அவனுக்கு ஆகாயத்தில் பறந்து செல்லக் கூடிய ஒரு தேரைப் பரிசாக அளித்தார். அந்த தேரில் ஏறி ஒரு முறை ஊர்த்துவரதன் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த போது ஓரிடத்திற்கு மேல் தேர் முன்னே செல்ல முடியாமல் தடுமாறியது. அதோடு இல்லாமல் பூமியை நோக்கி கீழே இறங்கி பூமியில் அழுந்தி நின்றது.


ஊர்த்துவரதன் தேர் பூமியில் இறங்கி அழுந்தி நின்றதற்கு காரணம் என்ன என்று பார்த்த போது அவ்விடத்தில் அகத்திய முனிவர் இறைவனை பூஜித்து வந்ததைப் பார்த்தான். அதனாலேயே தேர் அவ்விடத்தைத் தாண்டிச் செல்லாமல் கீழே இறங்கி அழுந்தி நின்றது எனபதைக் கண்டான். தேர் கீழே அழுந்தி நின்றதால் இத்தலம் தேரழுந்தூர் என்று பெயர் பெற்றது. மேலும் திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் இத்தலத்தை "அழுந்தை" என்றே குறிப்பிடுகிறார். அழுந்தை எனபதே மருவி அழுந்தூர் என்றானது. இந்த நிலையில் ஆளுநர் அந்த ஸ்தலங்களுக்கு சென்று ஆகியவற்றைப் பார்வையிட்டு கம்பர் கோட்டத்தில் உரையாற்றினார். அதன் பின்னர் நாம் சென்று பார்வையிட்ட போது கம்பர் கோட்டம் அரசு நடத்தும் தற்காலிகப் பள்ளியாக பராமரிப்பு இல்லாமல் செயல்படுகிறது,                                                                                                                        -விளம்பரம்-                                       

-விளம்பரம்-
மத்திய ASI கட்டுப்பாட்டில் உள்ள கம்பர் மேடு பிறந்த இடம் அதில் எந்த ஒரு அலுவலரும் பணியில் இல்லை,  கவிச்சக்கரவர்த்தி கம்பர் சோழநாட்டில் அவரது மகன் அம்பிகாபதி சிரச்சேதம் செய்யப்பட்ட நிலையில் மனம் பேதலித்து கண்கள் கட்டப்பட்ட நிலையில் பாண்டியநாட்டு எல்லை வரை சோழ மன்னரால் நாடுகடத்தப்பட்டவர்.



பின்னர் நெடுங்குடி கைலாசநாதர் ஆலயம் வந்தவர் அங்கிருந்து கமபனூர் வரை கால்நடையாக வந்த பின்னர் பாண்டிய நாட்டில் நாட்டரசன் கோட்டை அருகில் உள்ள அழகாபுரி பாண்டிய அரசி ஆதரவில் அங்கு தங்கி பாட்சாலை பணி செய்து சிலகாலம் சேரநாடு சென்று பின்னர் நாட்டரசன் கோட்டை எனும் ஊரில் காலமானார் ஆம் அவரது சமாதி அங்கு அமைந்துள்ளது.  கம்பர்  நரசிம்ம உபாசகர் நாள்தோறும் அருகிலுள்ள நரசிம்மர் கோயிலுக்குச் சென்று, யோக நரசிம்மரை வழிபட்டு, அங்கேயே சிறிது நேரம் தியானம் செய்வர். இந்த நிலையில் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இயற்றிய ராமகாவியத்தை அரங்கேற்ற


ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு வந்தார் பண்டிதர்களும் அறிஞர்களும் தில்லை  (சிதம்பரம்) வாழ் தீட்சிதர்கள் ஒப்புக் கொண்டால் தான் இங்கு அரங்கேற்றம் செய்யலாம் என்கிறார்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் அருள் புரியும். நரசிம்மரை வழிபட்டபின் தில்லைக்குச் சென்றார். அங்கு தீட்சிதர்களைச் சந்தித்து தான் வந்தது குறித்துச் சொன்னார். அதற்கு அவர்கள், நீங்கள் இயற்றிய இராம காவியத்தை இங்குள்ள மூவாயிரம் தீட்சிதர்களும் கேட்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருரும் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கூறவேண்டும்.

ஆனால் மூவாயிரம் தீட்சிதர்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது இயலாத காரியம், எனவே வேறு வழியைத் தேடுங்கள் என்றனர்.மீண்டும் ஸ்ரீரங்கம் வந்த கம்பர் அங்குள்ள அறிஞர்களிடம் தன் நிலையைக் கூறினார். அவர்களோ தில்லையில் ஏற்றுக்கொண்டால், தான் ஸ்ரீரங்கத்தில் ராமகாவியம் அரங்கேற்றலாம் என்றனர்.

கம்பர் மனம் தளரவில்லை ஸ்ரீரங்கம் கோயிலிலுள்ள நரசிம்மப்பெருமாள் சன்னிதிக்குச் சென்று நரசிம்மரை வணங்கிவிட்டு தேரழுந்தூர் திரும்பினார். காலம் கடந்தது ஒருநாள் மாலைவேளையில் தேரழுந்தூர் நரசிம்மர் கோயில் மண்டபத்தில் அமர்ந்து நரசிம்மரை உபாசித்த வண்ணம் தியானத்திலிருந்தார். அப்போது உடனே தில்லைக்குச் செல் என்று அசரீரி ஒலித்ததைத் தொடர்ந்து ராமகாவிய ஓலைச் சுவடிகள் கொண்ட கட்டுகளுடன் தில்லை நோக்கிப் பயணமானார் கம்பர் காலை ஆறு மணியளவில் தில்லையை அடைந்தார்.அங்கு ஒரு நபர் உயிர் பிரிந்த சடலத்தின் மேல் தன் நிழல்படும் படி மூன்று முறை வட்டமிட்டு, குரலெழுப்பி தாழப்பறந்து, பிறகு மேலே வட்டமிட்டபடி வானில் உச்சிக்குச் சென்று மறைந்தது கருடன். இந்த அதிசயத்தை அங்கிருந்த மூவாயிரம் தீட்சிதர்களும் ஆச்சரியத்துடன் தரிசித்தார்கள்  கம்பர் அந்தக் கருடனை கைகூப்பினார்.                                                -விளம்பரம்-                           
                            -விளம்பரம்-     
அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் பிணமாகக் கிடந்த சிறுவன் உயிர் பெற்றெழுந்தான் அதைக்கண்டு பரவசமடைந்த தீட்சிதர்கள் அனைவரும் கம்பரை கைகூப்பி வணங்கினார்கள். இறந்தவனையே பிழைக்கவைக்கும் சக்திகொண்ட கம்பரின் பாடல்கள் எந்தவித பரிசோதனைகளுக்கும் கட்டுப்பட்டவையல்ல அவரது இராமகாவியம் அரங்கேற்ற முழுத்தகுதியும் பெற்றுள்ளது. என்று அனைவரும் சான்றோலை அளித்தார்கள். கம்பர் மகிழ்வுடன் அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டார். கம்பர் எந்த தைரியத்தில் சிறுவனை உயிப்பிப்பதாகக் கூறி நாகபாசப் படலம் பாடல்களைப் பாடினார் என்பது கம்பரின் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஒரு சமயம், சடையப்ப வள்ளலின் மகன் சேதிராயன் பாம்பு தீண்டி மாண்டு போனான். இதையறிந்து கம்பர், உடனே தான் இயற்றிய நாக பாசப் படலம் பகுதிகளில் இரண்டு வெண்பாக்களைப் பாடி, அவனை உயிர்ப்பித்தார். அப்பொழுது இராமகாவியம் முழுமைபெறாத நிலையிலிருந்து குறிப்பிடத்தக்கது.

தில்லை தீட்சிதர்கள் மூவாயிரம் பேரும் சான்றளித்ததால் கம்பர் இயற்றிய ராமாயணத்தை அரங்கேற்ற ஸ்ரீரங்கம் வாழ் பண்டிதர்களும் அறிஞர்களும் அனுமதியளித்தனர். ஒரு சுபநாளில் கம்பர் ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் ஐந்தாவது பிராகாரத்திலுள்ள சிங்கப்பெருமாள் சன்னிதி முன்னுள்ள மண்டபத்திற்கு வந்தார். அவரது இராமாயணத்தைக் கேட்க ஊர் மக்களும் பெரியவர்களும் சான்றோர்களும் ஓன்று கூடினார்கள். கம்பர், அவர் அமர்ந்திருந்த மண்டபத்தின் எதிரிலுள்ள அழகிய சிங்கப்பெருமாள் சன்னிதியைப் பார்த்து கைகூப்பி வணங்கிய பின், ஸ்ரீ ராமகாவியத்தை ஒவ்வொரு படலமாகப் பாடி விளக்கம்ளிதார்.


ஸ்ரீ ராமகாவியத்தில் இரண்ய சம்ஹாரத்தை மிக அருமையாகக் காட்டியிருந்தார். ராமகாவியத்தில் இரண்ய சம்ஹாரமா? என்று அந்தப் படலத்தை சில அறிஞர்களும் பண்டிதர்களும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று எதிரே காட்சி தந்த அழகியசிங்கப்பெருமாள் சன்னிதியைப் பார்த்தார் கம்பர். அப்போது நிகழ்ந்த வரலாறு இது.  "
திசை திறந்து அண்டங்கீறிச் சிரித்தது செங்கட்சீயம்"........என்ற அடிகளை கம்பர் வாசித்தபோது எதிரிலிருந்த நரசிம்மர் சன்னிதி விமானத்திலிருந்த நரசிம்ம உருவம் அம்மண்டபம் முழுவதும் எதிரொலிக்குமாறு சிரித்ததோடு நில்லாமல், கம்பருடைய பேரறிவாற்றலைப் போற்றுவது போல, பலமாகக் கைதட்டி தலையாட்டின. (சிரக்கம்பம், கரக்கம்பம்) இதனால் திகைப்பும், அதிர்ச்சியுமடைந்த அங்குள்ள அறிஞர்களும் பண்டிதர்களும் ஸ்ரீ ராமகாவியத்தை வைணவர்கள் அங்கீகரித்தனர்.

ஆகவே, கம்பர் அரங்கேற்றிய ஸ்ரீ ராமாயணக்காவிய மண்டபத்திற்கு கம்பர் மண்டபம் என்ற பெயருமுண்டு. கம்பராமாயணம் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றிய காலம் சாலிவாஹனசகம் 807 என்பதாகும். அதாவது பொது ஆண்டு 885 என்கிறது வரலாறு. கம்பர் நரசிம்ம சுவாமி உபாசகர் கம்பத்திலிருந்து தோன்றியதால் நரசிம்ம சுவாமிக்கு கம்பர் என்ற பெயரும் பொருந்துமென்று ஆன்றோர் கூறுவர்.

இரண்டாம் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழனின் மகனாவார், இரண்டாம் குலோத்துங்க சோழன். அவைக்களப் புலவர்களில் பட்டர் எனும் உவச்சர்கள் குலத்தில் ஆதித்தனுக்கு மகனான கம்பரும் ஒருவர்.சோழன் மகள் இளவரசி அமராவதி கம்பர் மகன் கவிஞர் அம்பிகாபதி குலோத்துங்கனின் சரித்திரத்தினைப் பற்றி அறிந்து கொள்ளும் போது ஒரு  முக்கியமான உண்மை இராமானுஜ ஆச்சாரியார். மற்றும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் இடையே ஏற்பட்ட பிரச்சனையே. இது ஒரு தனிப் பிரச்சனையாக இல்லமால் ஒரு சைவ வைணவ சமூகப் பிரச்சனையாகவே மாறியது.
சைவத்தின் மீது தீராப் பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கும் வைணவத்தினைப் பரப்பப் பிறந்த இராமனுஜ ஆச்சாரியாருக்கும் ஏற்பட்ட சாடல்கள் வரலாற்றில் உண்மை வாய்ந்ததே.

இவ்வாறு கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு அருளிய நரசிம்மர் நம் எல்லாருக்கும் அருளக்கூடியவர். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் நரசிம்மரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பார்கள்.


கவலைகள், கடன் தொல்லைகள், எதிரிகள் தரும் இடையூறுகள் மற்றும் பல துன்பங்களிலிருந்து விடுபட நரசிம்மரை பிரதோஷ காலத்தில் வழிபட வேண்டும் நெருக்கடியான சமயத்திலும், தொலைதூரப் பயணம் செய்பவர்களுக்கு உற்ற துணையாகவும் இருந்து உதவுபவர் நரசிம்மப் பெருமாள் தீராத வியாதிகளையும் தீர்த்து நலமுடன் வாழவைப்பார் நரசிம்மார் ..       
கம்பன் பிறந்த ஊர்; காவேரி தங்கும் ஊர், கும்பமுனி சாபம் குலைந்த ஊர் — செம்பதுமத்தாதகத்து நான்முகனும் தாதையும் தேடிக் காணா ஓதகத்தார் வாழும் அழுந்தூர்"                       கம்பரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவரோ திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்தவர்.  திருவெண்ணெய்நல்லூர் எனும் பெயர் தான் தற்போது கதிராமங்கலமாக மாறியது, கம்பர் வாழ்ந்த காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பது பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் கருத்து, திரைப்படத்தில் பாடல்கள் எழுதிய பல்வேறு நபர்கள் பல வகையான மரியாதை பெரும் நிலையில் அரசு கவிச்சக்கரவர்த்தி கம்பரை இதுவரை சரியாகக் கண்டு கொள்ளாமல் இருப்பதும், கம்பன் கழகம் என்ற அமைப்பு கூட தங்கள் தேவைகளை நிறைவேற்றும் ஒரு அரிமா சங்கம் மற்றும் சுழல் சங்கம் போல செயல்படுவதே கம்பர் மேடு காலப்போக்கில் இஸ்லாமிய குடியேற்றம் நடந்த பிறகு யாரும் தேடாத பகுதியாக உள்ளது.           "அவனி முழுதுண்டும் அயிரா பதத்துன் பவனி தொழுவார் படுத்தும்—புவனி உருத்திரா உன்னுடைய ஓரங்கல் நாட்டில் குருத்திரா வாழைக்குழாம்".

பிரதாப ருத்திரன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு (1162 ஆம் ஆண்டு முதல் 1179 ஆம் ஆண்டு வரை) மாநில ஆளுநர் ஆர் என் ரவி அங்கு ஜனவரி மாதம் செல்லாமல் இருந்திருந்தால் அந்த இடம் அவ்வூர் மக்கள் கூறும் கம்பர் பொட்டல் தான் அது இன்னும் சீரமைப்பு செய்து பின்னர் மக்கள் பார்க்க தமிழறிஞர் பெருமக்கள் வழிவகைகள் காணவேண்டும் இதுவே இங்கு பொது நீதி.                            "போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்

தூற்றினும் தூற்றுவர் - சொன்ன சொற்களை

மாற்றினும் மாற்றுவர் வன்கணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடியவரே" –சோழன்

"மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ

உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் - என்னை

விரைந்து ஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ

குரங்கேற்றுக் கொள்ளஈத கொம்பு"—கம்பர்.                                                    தனது துவக்க நிலையிலுள்ள      "இரவி தன்குலத்து எண்ணில் பார்வேந்தர்தம் பரவும் நல் ஒழுக்கின்படி பூண்டது சரயு என்பது; தாய்முலை அன்னது; இவ் உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்". என்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...