மாநில அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை.
தமிழ்நாடு அரசிடமிருந்து பதில் வரவில்லை என உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அதிருப்தி. பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியில் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து சிறையில் இருந்து வெளிவந்தவர் , உடனடியாக அமைச்சராகப் பொறுப்பேற்றார்.நிபந்தனைகளை மீறியதாகக் குறிப்பிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, வித்தியாகுமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் செந்தில் பாலாஜி சாட்சிகளுக்கு அழுத்தம் தந்து, வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நேற்று டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி நீதிபதிகள் அபய் எஸ் ஒகா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் : கடந்த முறை பதில் சொல்கிறோம் எனக் கூறியதால் நோட்டீஸ் அனுப்பவில்லை. தற்போது வரை தமிழ்நாடு அரசிடமிருந்து பதில் வரவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிவாரணம் வழங்குவதா இல்லையா என்பது தனிப்பட்ட விஷயம். இந்த மோசடியில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், இந்த வழக்கில், சாட்சியங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பட்டியலை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கில் உள்துறை செயலாளரை ஒரு எதிர் மனு தாரராக இணைத்து நோட்டீஸ் பிறப்பித்து, பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்