மாணவர்கள் முத்தமிழை கற்கும் நிலை வரவேண்டும் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி கருத்தரங்கில் பேராசிரியர்கள் உரை
காரைக்குடி அருகே அமராவதி புதூர் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரிகள், ஸ்ரீ ராஜராஜன் CBSE பள்ளி சார்பில் இசைத்தமிழ் கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் சிவக்குமார் வரவேற்றார். கல்விக் குழும ஆலோசகர், டாக்டர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.சுப்பையா தலைமை வகித்துப் பேசும் போது, எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழுக்குத்தான் தனிச்சிறப்பாக செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. தமிழ் மொழியிலுள்ள இயல்,இசை,நாடகம் ஆகிய முத்தமிழையும் மாணவர்களுக்குகற்றுத்தர வேண்டும். தற் போது ஆசிரியர்கள் இயல் வழியில் மட்டுமே கற்பிக்கின்றனர். இசை தான் முதல், அதன் பிறகு தான் பேசத் துவங்குகின்றனர், பின்னர் தான் தமிழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு இசை ஞானம், நாடகம் குறித்துத் தெரியவில்லை.
இசை ஞானம் இல்லாமல் இலக்கியம் கற்க முடியாது. எனவே மொழியாசி ரியர்களுக்கு இயலுடன் இசை, நாடகத் திறமை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே தான் எங்கள் பள்ளியில் ஒவ்வொரு மொழிக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கிறோம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மெய்யியல் துறைத்தலைவர்
பேராசிரியர் முனைவர் நல்லசிவம், டாக்டர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் சின்டிகேட் உறுப்பினர்கள் பேராசிரியர் டாக்டர் மோகன், பேராசிரியர் டாக்டர் குணசேகரன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர் டாக்டர் அய்யாவு, பேராசிரியர்கள் முனைவர் பாலசுந்தரி, பழனிவேல், பிரசாத் உள்ளிட்ட பலரும் சிறப்பு அழைப்பார்களாகக் கலந்து கொண்டனர். காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் நடந்த இசைத் தமிழ் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினருக்கு முன்னாள் டாக்டர் அழகப்பா பல்கலைக்கழகத்த் துணை வேந்தரும், பேராசிரியருமான டாக்டர் எஸ்.சுப்பையா பரிசுகள் வழங்கினார் ஸ்ரீ ராஜராஜன் CBSE பள்ளியின் முதல்வர் வடிவாம்பாள் நன்றி தெரிவித்தார்.அதேபோல் காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் CBSE பள்ளியில் உணவுத் திருவிழாவும் நடைபெற்றது
காரைக்குடி ஸ்ரீ ராஜ ராஜன் CBSE பள்ளியில் உணவுத் திருவிழாவில் மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்வை கடைபிடிக்கும் நோக்கத்துடன் இயற்கை வழி நவதானி யங்களால் ஆன சிற்றுண்டிகள் செட்டிநாட்டுப் பாரம்பரிய பலகார வகைகளை பள்ளிக்கு தயாரித்துக் கொண்டு வந்து அழகுடன் நேர்த்தியாக காட்சிப்படுத்தியதுடன் அதன் எளிய விற்பனையும் செய்ய வைத்தது தன்னம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியாகும்.
பெற்றோர்களை இந்த உணவுத் திருவிழாவிற்கு அழைத்து உணவுகளை வழங்கினர். இந்த நிகழ்வில் பள்ளியின் முதல்வர் வெங்கடரமணன், துணை முதல்வர் தனலெட்சுமி, ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள் மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். துரித உணவு களை உண்ணும் பழக்கம் தவிர்க்க சிறுவர்களின் இன்றைய சூழலில் சத்தான ஆரோக்கியமான உணவுகளை வைத்து உணவுத் திருவிழா நடைபெற்றது.
கருத்துகள்