பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சித்தர் போகர் செய்த நவபாஷாண சிலையை
ஆய்வு செய்த ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழுவினர். ஆய்வுக்கு பின்னர் கோவில் கருவறையிலிருந்து வெளி வந்தனர் .
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நவபாஷாண சிலையை ஆய்வு செய்ய கருவறைக்குள் 30 நிமிடங்களுக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது.
தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்களுக்கு 40 நிமிடம் தடை விதிக்கப்பட்டது.
அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கருவறையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் போகரால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்த நவபாஷாண சிலை அசல் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண சிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த நிலையில் சிலையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவில் சிறப்புக்குழுவை அமைக்க உத்தரவிட்டதில் நீதிபதி பொன் காளியப்பன் தலைமையில் ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வந்த முன்னாள் நீதிபதி பொன் காளியப்பன், ஸ்தபதி தட்சிணாமூர்த்தி கொண்ட குழுவினர் இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்திடம் எடுத்துக் கூறினர். அதைத் தொடர்ந்து கால பூஜைகளுக்கு பின்பு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அந்தக்குழுவினர் கருவறைக்குள் சோதனை நடத்தினர். கருவறைக்குள் சுமார் 30 நிமிடத்துக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது.பாசாணம் என்பது நஞ்சுக்கலவை அல்லது கொடிய விஷக்கலப்பாகும் இது கொடிய நோய் தீர்க்கும் சர்வ வல்லமை கொண்ட சஞ்சிகை அதாவது மருந்தாகவும் உள்ளது அதில் ஜாதிலிங்கம் ( ரசம் ), மனோசிலை, தாரம் (அரிதாரம், மால்தேவி), வீரம், கந்தகம், பூரம், வெள்ளைப் பாசாணம், கௌரி பாசாணம், தொட்டி பாசாணம், "பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம் தான் சொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம் கச்சால் வெள்ளை பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" - சித்தர் போகர் அதற்கான நவீன வேதியியல் விளக்கம். கௌரிப் பாசாணம் (Arsenic Penta sulphite) கெந்தகப் பாசாணம் (Sulfur) சீலைப் பாசாணம் (Arsenic Di sulphite) வீரப் பாசாணம் (Mercuric Chloride) கச்சாலப் பாசாணம் (சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை chlorine) வெள்ளைப் பாசாணம் (Arcenic Tri Oxide) தொட்டிப் பாசாணம் (சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை) சூதப் பாசாணம் : (Mercury) சங்குப் பாசாணம் : (சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை) நவ பாசாணக் கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. ஏனென்றால் நவபாசாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையை கொண்டுள்ளதாம். மேலும் பாசாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர் வீச்சு, கட்டுபவரின் மனோநிலையை மேம்படுத்துகிறதாம். நவ பாசாணத்தினால் கட்டி உருவாக்கப்படும் தெய்வச் சிலைகள் நவக்கிரகத்தின் ஆற்றல்களைப் பெற்று விடுகின்றன என சித்தர்கள் நம்பினார்கள். அதனால் தான் பழனி சக்தி நிறைந்த கடவுளாக அருளும் நிலை ஆலயம்சித்தர் போகர் இரண்டு நவபாஷாண சிலைகள் செய்துள்ளார்.இரண்டுமே யானை முட்டி குகையில் உருவானது ஒன்று பிரசித்தி பெற்ற பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி, மற்றொன்று பூம்பாறை அருள்மிகு குழந்தை வேலப்பர் சுவாமி அருள்புரிகிறார் அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகத்தின் தீர்த்தத்தை அருந்தினால், தீராத நோய்கள் தீரும் இது ஐதீகம் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கும், கொடைக்கானல் பூம்பாறை மலைக்கும் இடையிலுள்ள யானை முட்டி குகையில் நவ பாசாணத்தாலான மூலிகை இரசாயனங்களால் உருவாக்கப்பட்டதே நவபாஷாண சிலை அதன் சோதனை முடிந்த பிறகு அலுவலர்கள் தங்கள் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். கருவறைக்குள் நவ பாஷாண சிலையை அலுவலர்கள் ஆய்வு செய்த சம்பவம் குறித்து பக்தர்கள் விபரம் தெரியாத நிலையில் காத்திருந்த நிலையில் அது அங்கு பரபரப்பான சூழல் ஏற்படுத்தியது.
கருத்துகள்