தமிழ்நாடு ஆளுநரின் அறிவிக்கையை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த W.P. (C) 1271 / 2023. வழக்கு தற்போது நிலுவையிலுள்ளது.
தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையின் நிர்வாகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இவற்றுள் குறிப்பிட்ட ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாகவே உள்ளது
குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில், "மாநில அரசு பல்கலைக்கழகங்களின் சட்டப் பிரிவுகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழுவினால் பரிந்துரைக்கப்படும் மூன்று நபர்களில் ஒருவர் சார்ந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக ஆளுநரான வேந்தரால் நியமனம் செய்யப்படுவார். இதுவரை இந்த நடைமுறையையே பின்பற்றப்பட்டு வருகிறது.
அதன்படியே, தமிழ்நாடு அரசால் பாரதியார் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கு, ஆளுநர் அலுவலகக் கடிதத்தில், சார்ந்த பல்கலைக்கழகங்களின் சட்டவிதிகளின் படி மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு அமைத்து அரசிதழில் வெளியிட தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசால் மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு அரசிதழில் அறிவிக்கையாக வெளியிடப்பட்டது.
ஆனால், ஆளுநர் தன்னிச்சையாக, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 2018 ஆம் ஆண்டைய நெறிமுறைகளின்படி, மேற்கண்ட பல்கலைக்கழகங்களின் தேடுதல் குழுக்களில் நான்காவது நபராக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்து பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களுக்கு நான்கு பேர் அடங்கிய தேடுதல் குழு அமைத்து 06.09.2023 நாளிட்ட அறிவிக்கையை வெளியிட்டார். ஆனால், தமிழ்நாடு அரசு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கு அப்பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி மூன்று பேர் மட்டுமே அடங்கிய தேடுதல் குழு அமைத்து அரசாணை அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது.
ஆனால், ஆளுநர் அவர்கள் இத்தேடுதல் குழுவினை ஏற்காமல், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 2018 ஆம் ஆண்டைய நெறிமுறைகளின்படி, மேற்கண்ட பல்கலைக்கழகங்களின் தேடுதல் குழுக்களில் நான்காவது நபராக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்ய முதலமைச்சர் அவர்களுக்கு முகவரியிட்ட கடிதம் வாயிலாக வலியுறுத்தினார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவை அறிவிக்கையாக வெளியிடுமாறு ஆளுநர் அவர்கள் அரசிற்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியுமே தவிர, ஆளுநர் அவர்கள் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்து அறிவிக்கை வெளியிடுவதற்கு அவருக்கு அதிகாரமில்லை.
மேற்கண்ட ஆளுநர் அவர்களின் கடிதம் குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து, மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள் அரசாணையின்படியும், அந்தந்த பல்கலைக்கழக சட்டப்படியும் தான் உள்ளதால், நான்காவது நபராக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுத் தலைவர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரைச் சேர்த்து மேற்கண்ட பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆளுநர் அவர்களுக்கு 13.09.2023 ஆம் நாளிட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர் அவர்களின் அலுவலகத்தின் மூலம் 09.01.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி மூலம் பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர் தேர்வு செய்வதற்காக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் அடங்கிய நான்கு பேர் கொண்ட தேடுதல் குழுவினை அமைத்து வெளியிட்ட தனது 06.09.2023 ஆம் நாளிட்ட அறிவிக்கைகளை திரும்பப் பெற்றுக்கொண்டனர்
தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளின்படி துணைவேந்தர் அவர்களை தேர்வு செய்வதற்கு அமைக்கப்படும் தேடுதல் குழுவில் ஆளுநர் அவர்களால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர், அரசால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர் மற்றும் சார்ந்த பல்கலைக்கழக ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவையினால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர் ஆகிய மூன்று நபர்களைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும்.மாண்பமை உச்சநீதிமன்றத்தால், ஜெகதீஷ் பிரசாத் சர்மா மற்றும் பலர் பீகார் மாநில அரசிற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், "கல்வி என்பது அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியலில் (பிரிவு-3) வருவதால், மாநில அரசானது கல்வியில் தனது சட்டங்களை சொந்தமாக வகுக்க சுதந்திரமும் அதிகாரமும் கொண்டுள்ளதால், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை எனவும், பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு சட்டம் 1956 ன் பிரிவு 26 ல் குறிப்பிட்டுள்ளபடி, எந்தெந்த நெறிமுறைகளை ஏற்க விரும்புகிறதோ அவற்றை மட்டுமே பின்பற்றலாம்" என தீர்ப்பு வழங்கியுள்ளது
"மாநில அரசு பல்கலைக்கழகங்களின் சட்டப் பிரிவுகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழுவினால் பரிந்துரைக்கப்படும் மூன்று நபர்களில் ஒருவர் சார்ந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக ஆளுநர்- வேந்தர் அவர்களால் நியமனம் செய்யப்படுவார். இதுவரை இந்த நடைமுறையையே பின்பற்றப்பட்டு வருகிறது.
மாண்பமை உச்சநீதிமன்றத்தால், ஜெகதீஷ் பிரசாத் சர்மா மற்றும் பலர் பீகார் மாநில அரசிற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், "கல்வி என்பது அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியலில் (பிரிவு-3) வருவதால், மாநில அரசானது கல்வியில் தனது சட்டங்களை சொந்தமாக வகுக்க சுதந்திரமும் அதிகாரமும் கொண்டுள்ளதால், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை எனவும், பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு சட்டம் 1956ன் பிரிவு 26 ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசாணை (நிலை) எண், 5, உயர்கல்வி (எச்1) துறை, நாள் 11.01.2021 மூலம், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகள் 2018-ல் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறை 7.3 (ii)னை ஏற்காத காரணத்தாலும், உச்சநீதிமன்றத்தால், ஜெகதீஷ் பிரசாத் சர்மா மற்றும் சிலர் பீகார் மாநில அரசிற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் வெளியிடப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், மாநில பல்லைக்கழகங்களுக்கு சார்ந்த சட்டவிதிகளின்படி தேடுதல் குழுவினை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உரிய சட்ட அதிகாரம் மற்றும் உரிமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அரசாணை (டி) எண் 270 உயர் கல்வி (எச்1) துறை நாள் 09.12.2024 மூலம் அடுத்த துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு (Search Committee) அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் அடுத்த துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக, அரசாணை (டி) எண் 277 உயர் கல்வி (ஐ1) துறை நாள் 13.12.2024 மூலம் சார்ந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழுவினை (Search Committee) அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டதில் எவ்வித விதி மீறல்களும் இல்லை.
மேற்கண்ட நிலையில், மேற்குறிப்பிட்ட நான்கு பல்கலைக்கழகங்களுக்கு (அண்ணாமலை, அண்ணா, பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்கள்) அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள் சார்ந்த பல்கலைக்கழக சட்டங்களின் படியும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண், 5, உயர்கல்வி (எச்1) துறை, நாள் 11.01.2021ன் அடிப்படையிலும் தான் உள்ளது, இதில் விதிமீறல்கள் ஏதும் இல்லை. எனவே, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரைச் சேர்த்து, மேற்கண்ட பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் பல்வேறு இடையூறுகளை பலவகையிலும் ஆளுநர் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதிதான் துணை வேந்தர் தேடுதல் குழு அமைப்பு விவகாரத்தில் ஆளுநர் அனுப்பி உள்ள கடிதம்.
பல்வேறு மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநில மக்களின் பண்பாட்டு கூறான கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மாநில மக்களின் தேவைகளை உணர்ந்து அந்தந்த மாநில தேவைகளுக்கு தகுந்தார்போல் உயர்கல்வி அமைப்பினை அமைத்துக் கொள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரமும் உரிமையும் உள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதற்கென்று உருவாக்கப்பட்ட சட்டத்தின் படியே செயல்படுகிறது. பல்கலைக்கழகம் பொதுவான சில பரிந்துரைகளை அவ்வப்போது வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தனது பல்கலைக்கழகத்திற்கு தான் இயற்றிய சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும். பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகம் அல்லது அரசிற்கு ஏதேனும் தெரிவிக்க வேண்டியது இருந்தால் அதை நேரடியாக தெரிவிக்கும்.
வேந்தர் என்ற பதவி வழி பொறுப்பை பயன்படுத்தி அரசு பல்கலைக்கழக சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளை முடக்குவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. ஆளுநர் அவர்கள் சட்டத்தை தவறாக தன் கையில் எடுத்துச் செயல்முறைகள் வெளியிடும் போக்கை அரசு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் பல்வேறு இடையூறுகளை பலவகையிலும் ஆளுநர் செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதிதான் துணை வேந்தர் தேடுதல் குழு அமைப்பு விவகாரத்தில் ஆளுநர் அனுப்பி உள்ள கடிதம். பல்கலைக்கழகங்கள் பல மாதங்களாக துணை வேந்தர் இல்லாமல் செயல்படுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆளுநர் நடந்து கொள்ளவது மாணவர்கள் நலனுக்கு எதிரானது ஆகும்.
மாணவர்கள் நலன் கருதி மாநில ஆளுநர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவிற்கு ஒப்புதல் அளித்திடுவதே அவர் வகிக்கும் பதவிக்கு அழகாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றம் மூலம் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது ஆளுநரின் கடமை.
ஆனால் அதனை செய்யாமல் அரசால் நிறைவேற்றப்படும் மக்கள் நலன் காக்கும் பலவற்றை நிராகரித்து வருகிறார். இதிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் ஒரு பிரதிநிதியாக செயல்பட்டு அரசு பல்கலைக்கழக சட்டத்தினை புறம்தள்ளி பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவிற்கு ஏற்றார்போல் சாதமாக செயல்பட்டு வருகிறார். இனியாவது ஆளுநர் அவர்கள் தனது செயல்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்