நியோமேக்ஸ் புகார்தாரர்களின் பட்டியலை வெளியிட்டது
மாநிலப் பொருளாதாரக் குற்றப்பிரிவு மதுரை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் இயங்கி வந்த நியோமேக்ஸ் மோசடி தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவின் படி புகார்தாரர்களின் பட்டியலை பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் அரசு அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது
நியோமேக்ஸ் உள்ளிட்ட 42 இணை நிறுவனங்கள் மீது பண மோசடிப் புகார் மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல் துறையின் விசாரணையிலிருந்து வருகிறது. முதல் தகவல் அறிக்கை குற்ற எண்: 3/2023 ன் படி வழக்குப் பதிவு செய்த நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளராக மனிஷா சிறப்பு விசாரணை அலுவலராக தற்போது பலர் மாற்றப்பட்டு புலன் விசாரணையை நடத்தி வருகிறார். நியோமேக்ஸ் தொடர்பான நீதிமன்ற வழக்கில், சென்னை மதுரைக் கிளையில் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி, மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவுக் காவல்துறைக்கு சில
வழிகாட்டுதல்களுடன் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியதன் படி, நவம்பர் மாதம் 05 ஆம் தேதி பொது அறிவிப்பை வெளியிடவும் நவம்பர் மாதம்-05 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரையில் பண முதலீட்டாளர்களிடமிருந்து புகார்களைப் பெற வேண்டும்;நவம்பர் மாதம் 16 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் 05 ஆம் தேதி வரையில் புகார்களை ஆய்வு செய்து, டிசம்பர் மாதம்-06 ஆம் தேதி இறுதி செய்யப்பட்ட பண மோசடியில் சிக்கிய முதலீட்டாளர்களின் பெயர் பட்டியலை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்; டிசம்பர் மாதம்-06 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம்-10 ஆம் தேதி வரை ஆட்சேபணை இருப்பின் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும்; டிசம்பர் மாதம்-16 ஆம் தேதி இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; டிசம்பர் மாதம்-18 ஆம் தேதி வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில்,
நவம்பர் மாதம்-04 ஆம் தேதியன்று தமிழில் தினத்தந்தி இதழ், ஆங்கிலத்தில் THE HINDU இதழிலும் பொருளாதாரக்குற்றப்பிரிவுக் காவல்துறையினர் விளம்பரம் செய்திருந்தார்கள். டிசம்பர் மாதம்-15 ஆம் தேதி வரை நேரிலும் தபால் மூலமாகவும் பெறப்பட்ட புகார்களை ஆய்வு செய்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்பர் மாதம்-06 ஆம் தேதியன்று வெளியாக வேண்டிய பட்டியல் ஒருநாள் தாமதமாக டிசம்பர் மாதம்-07 ஆம் தேதியன்று பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறை இணையதளத்தில் வெளியிட்டிருந்தது, தாமதம் தலைமையிடத்தில் தொழில்நுட்பக் காரணங்களாலேயே ஆனதாகத் தகவல். நாளொன்றுக்கு நேரிலும் தபாலிலும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது, புகார் அளித்த பண முதலீட்டாளர்களின் தொலைபேசி எண் பதிவைக் கொண்டு மட்டுமே விவரங்களைச் சரிபார்க்க முடியும் என வடிவமைத்துள்ளார்கள். நாமும் நமக்குத் தெரிந்த புகார்தாரர் ஒருவரின் தொலைபேசி எண உள்ளிட்டு விவரங்களைச் சரிபார்த்தோம்.
நியோமேக்ஸில் அவரது முதலீடு செய்திருப்பது, ஒரு கோடியே இருபது இலட்சத்துக்கு மேல் அவரது பெயரில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத நில விற்பனை ஆவணங்களைக் கைவசம் வைத்துள்ளார். அவரது மனைவி பெயரிலும் முதலீடு செய்யப்பட்ட நிலையில் இரண்டு நபர்கள் பெயரில் அளிக்கப்பட்ட புகார் மனுவிலும் ஒரே கைப்பேசி எண்ணை மட்டுமே பதிவு செய்திருக்கிறார். 15-க்கும் அதிகமான பத்திரங்கள்; அந்த பாண்டுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு புகார்தாரர் ஐ.டி. கொண்டதாக உள்ளது. அப்படி இருக்கையில், முதல் பாண்டில் உள்ள கஸ்டமர் ஐ.டி.யை மட்டும் குறிப்பிட்டு அவரது முதலீடு வெறும் ஐந்து இலட்சம் தான் என்பதாகவே பதிவாகியிருக்கிறது.
எவர் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில், மோசடி செய்யப்பட்ட பண முதலீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடக்கூடாது ? ( அப்படி ஒரு விதி ஊழல் தடுப்புச் சட்டத்தில் உண்டா என்றால் இல்லை என்றே கூறலாம்) என்ற அடிப்படையில், தொ எண் மற்றும் மின்னஞ்சல்முகவரியை பதிவு செய்தால் மட்டுமே உள் நுழைய முடியும் என்பதாக வடிவமைத்திருப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், ஒரே முதலீட்டாளர்களிடம் ஒவ்வொரு பாண்டிற்கும் ஒவ்வொரு கஸ்டமர் ஐ.டி. இருக்கும் நிலையில், கஸ்டமர் ஐ.டி.யை உள்ளீடு செய்து விவரங்களை சரிபார்க்கும் வகையில் வடிவமைத்திருக்கலாம்.அல்லது, ஒரே புகார்தாரரின் மொத்த முதலீட்டையும் ஒரே பக்கத்தில் தோன்றும் வகையிலாவது வடிவமைத்திருக்க வேண்டும். இந்தக் குறைபாடு, நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சாதமாக, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கணக்கை குறைத்து காட்டுவதற்காக இப்படி செய்துவிட்டார்களோ என்ற தேவையற்ற சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில்தான் அமைந்திருக்கிறது.
இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் நாம் குறிப்பிட்டு சொன்னது போல, சம்பந்தபட்ட முதலீட்டாளர் நியோமேக்ஸில் முதலீடு செய்தது 1கோடியே இருபது இலட்சத்து சொச்சம். தற்போது இணையத்தில் காண்பித்திருப்பது வெறும் ஐந்து இலட்சம். அவரது கைப்பேசி எண்ணில்தான் அவரது மனைவிக்குமான புகாரையும் பதிவு செய்திருந்தார்.
அவரது மனைவியின் பதிவையும், அவரது விடுபட்ட மற்ற முதலீட்டு விவரங்களையும் அவர் சரிபார்ப்பது எப்படி? அதற்கான வழிமுறை என்ன? அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதே இணைய தள பக்கத்தின் வழியாகவே, தெளிவான தகவலை பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில் எல்லோரது எதிர்பார்ப்பும் இன்னும் வருமான வரி துறைக்கு பயந்து புகார் அளிக்காமல் இருக்கும் கருப்புப் பணம் முதலீடு செய்த நபர்கள் தான் https://tneow.org.in இணையதளத்தில் பட்டியல் வெளியாகியிருக்கிறது. மொத்த முதலீட்டாளர்களின் பெயர் மற்றும் முதலீட்டுத் தொகை விவரங்களுடன் PDF பார்மேட்டில் வெளியாகுமென எதிர்பார்க்க ஆனால் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதைப்போல, தனிப்பட்ட புகார் செய்த முதலீட்டாளர்கள் மட்டுமே விவரங்களைப் பார்வையிடலாம் என வரம்பு நிர்ணயம் செய்துள்ளது இதில் வேடிக்கை என்னவென்றால் அரசு ஊழியர்கள் தான் அதிக அளவில் முதலீடு செய்த நபர்களாகும் வருமான வரி கணக்கு காட்டாத லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் மற்றும் தவறான வழியில் பணம் சேர்த்த பலர் நியோமேக்ஸ் நிலமோசடியில் சிக்கிய போதும் அவர்கள் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் வெளியே கூறமுடியவில்லை, மேலும் இதுவரை புகாரும் கொடுக்க வில்லை இதுவே மோசடி செய்த கும்பலுக்கு சாதகமான நிலையாக உருவாக்க உதவியாக உள்ளது மேலும் இந்த வழக்கு இவ்வளவு நாட்கள் கடப்பதற்கு இந்த நிலங்கள் அணைத்தையும் சதுரமான நிறுவனம் கைப்பற்றத் தான் காலம் கடத்துவதாகவும் ஒரு தகவல் உள்ளது அது உண்மை எனில் அமலாக்கத்துறை தலையீடு உடனே தேவை இதில் பண சூதாட்டம் காரணமாக CBI மற்றும் PMLA சட்டம் மூலம் ED மற்றும் SEBI இதில் விசாரணை வளையத்தில் வராத வரை பொருளாதார குற்றப்பிரிவு பணக்கார மோசடி நபர்கள் மீது நடவடிக்கையைப் பாய்ச்சாது, நீதிமன்றத்தின் வழியில் சொல்லும் வேலைகளை மட்டுமே செய்யும் புலன் விசாரணை முழுமையாக நடக்குமா? என்பதே எழுவினா.
கருத்துகள்