ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப் பேரவைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய சட்டத்துறையின் அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்கிறார்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு நிலையில் இது தொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு அமைத்த உயர் நிலைக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உட்பட பல தரப்பிடம் கருத்துகளைக் கேட்டதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் இந்தக் குழு அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.
தொடர்ந்து சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்த போது அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்பும் நிலையில். அவர் 3 நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்றிருந்தவர் இன்று டெல்லி திரும்புகிறார். அவை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்தே இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது என நாடாளுமன்றத் தகவல் தெரிவித்தன. சுதந்திரம் அடைந்த நாள் முதல் 20 ஆண்டுகளுக்கு ஒரே நாட்டில் ஒரே தேர்தல் நடைமுறையில் இருந்தது. அரசியல் சாசனத்தை மதிக்காமல் நடந்த அப்போதய காங்கிரஸ் அரசு நூறு முறை மாநில அரசுகளை கலைத்த காரணத்தினால் இது போன்ற ஒரு சட்டம் இயற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்திய தேசம் தள்ளப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவு அறிக்கையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் கொள்கையில்
இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படும் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் .எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2016 ஆம் ஆண்டு முழங்கியவர் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா
இதற்கு முற்றிலும் முரணாக எடப்பாடி கே. பழனிசாமி செயல்பட்டு வருகிறார். சுயநலத்திற்காக தி.மு.க.விடம் சரணாகதி அடைந்துவிட்டார். கட்சியின் தனித் தன்மை தாரைவார்க்கப்பட்டு விட்டது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் துரோகக் கூட்டம் நான்காவது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்ட நிலையில் அவைக்கு வராமலிருந்த அன்புமணி ராமதாஸ் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யும் நிலையில் வந்ததாக விமர்சனம் எழுகிறது இந்த நிலையில் விவாதம் நடந்த நிலையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு பேசும் போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு அதன் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்தது.ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு.
கருத்துகள்