கள்ளக்குறிச்சி விஷக் கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணை தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைப்பகுதி கருணாபுரத்தில் விஷமான கள்ளச் சாராயம் குடித்த 66 நபர்கள் உயிரிழந்தது தொடர்பான வழக்குகளை மாநிலத்தின் CBCID காவல் துறையினர் விசாரித்தனர். 20 க்கும் மேற்பட்ட போரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் CBI விசாரணை வேண்டுமென அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு, பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில்
தீர்ப்பு வழங்கப்படாமலிருந்த சூழலில் தீர்ப்பை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி 20.நவம்பர்.2024 ல் வழங்கியதில், ‘கள்ளக்குறிச்சி விஷக் கள்ளச்சாராய வழக்கை CBI க்கு மாற்றம் செய்து உத்தரவிட்டதில் எவ்விதக் குறுக்கீடும் இருக்கக் கூடாது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணைக்காக மாநிலக் காவல்துறையினர் தங்களிடம் உள்ள ஆவணங்களை சிபிஐ அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்ததற்கு
முன்பாகவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இறுதியாக 17.டிசம்பர்.2024 ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கான பட்டியலில் Case No. SLP(CRL) NO. 17749-17753/2024 - is listed on 17-டிசம்பர்-2024 in Court No. 14 as Item No. 42 subject to order for the day. - இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் நிலையில் ஏற்கனவே முடிவுற்ற வாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், ‘ வாதத்தில் கள்ளக்குறிச்சி விஷகள்ளச்சாராய வழக்கில் தமிழ்நாடு காவல்துறையினர் விசாரணையை முடித்து விட்டனர்’ எனத் தெரிவித்தபோது, நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளீர்கள் அதிலிருந்தே தெரிகிறது. CBI விசாரணை செய்வதால் உங்களுக்கு என்ன பாதகம்.
தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி. why you are so much interested that it itself shows….? எழுப்பிய நிலையில் வழங்கிய தீர்ப்பில், “இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி விஷக் கள்ளச்சாராய வழக்கைத் தொடர்ச்சியாக சிபிஐ அலுவலர்கள் விசாரிக்கலாம். எவ்விதத் தடையுமில்லை” எனத் தெரிவித்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்