தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூபாய்.1.26 கோடி மதிப்பிலுள்ள சொத்துக்களை
அமலாக்கத்துறையின் சென்னை மண்டல அலுவலகம் முடக்கியது. தூத்துக்குடி, மதுரை மற்றும் சென்னையில் உள்ள அசையாச் சொத்துக்களை முடக்கியதாகவும் அமலாக்கத்துறை தகவல் தெரிவிக்கிறது. 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து தொடங்கிய விசாரணையையடுத்து அமலாக்கத்துறை வசம் சென்றது. விசாரணை கைமாறிய உடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிரடி காட்டியது அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் உள்ளிட்ட 7 நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, சொத்துக்களை முடக்கியது. இந்த விவகாரத்தால் டென்ஷனான அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில்
அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக தொடர்ந்திருந்த வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடரக் கூடாதென்று கேட்டிருந்தார். வழக்கு விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அமர்வுக்கு முன்பு வந்த போது.
அமலாக்தக்துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல்.சுந்தரேசன் ஆஜராகியிருந்தார்."வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அதனால் வழக்கை ரத்து செய்யக் கூடாது. மாறாக அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்தனர். அது மட்டுமல்லாது விசாரணையை எதிர்கொள்ளவும் உத்தரவிட்டிருந்ததன் தொடர்ச்சியாக தற்போது அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.
கருத்துகள்