500 அரசுப் பள்ளிகளை நிர்வகிக்க தனியார் பள்ளிகள் அமைச்சர் தகவல் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை நிர்வகிக்க தனியார் பள்ளிகள் அமைச்சர் தகவல் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளின் மேற்பார்வையில் அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்புகள் அருகிலுள்ள தனியார் பள்ளிகளின் பங் களிப்புடன் நிறைவேற்றித்தரப்படுமென தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டினார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றதில். அதன் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் வரவேற்றார். தலைவர் பி.டி.அரசகுமார் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சங்கத்தைத் துவங்கி வைத்துப் பேசினார்: தனியார் பள்ளிகள் சங்கத் துக்கு எனது வாழ்த்துகள். 'கல் வியில் சிறந்த தமிழகம் என்பதில் அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாது, தனியார் பள்ளிகளின் பங்களிப்புமுள்ளது.
சங்கம் நடத்துவது மிகவும் சாதாரணமான காரியமல்ல, மாணவர்களின் நலனுக்காக, அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனியார் பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும்.
நல்ல நிர்வாகத்துடன் அரசு உள்ளது என்பதை கவனத் தில் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகள் சங்கம் 9 வகையில் கோரிக்கைகளைவைத்துள்ளது. அவற்றை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.
தனியார் பள்ளிகள் புதிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் சமுதாயத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையோடு மிகப் பெரிய பணியைச் செய்து வருகிறது. தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இயலாது.
முதல் கட்டமாக (2025-2026) கல்வி யாண்டில் 500 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து அந் தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகிலுள்ள தனியார் பள்ளிகளின் பங் களிப்புடன் நிறைவேற்றித்தர நட வடிக்கை மேற்கொள்ளப்படுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனி யார் பள்ளிகளுக்கு தமிழக அரசு அங்கீகாரம் மட்டுமல்ல தனியார் பள்ளி மாணவர்கள் செய்யும்
சாதனைகளையும் அங்கீகரித்து பாராட்டும் அர சாக இந்த அரசு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளது. தனியார் பள்ளிகள் சங்கத் தின் கோரிக்கைகள் நிறைவேற்றத் தேவையான சாத்திய கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிக்கு வருகை தந்து அரசுப் பள்ளியில் நடைபெறும் கல்வி கற்றல் நிலையைப் பாருங்கள். அர சுப் பள்ளி நிர்வாகம் தனியார் பள்ளிக்கு வருகை தந்து அங்குள்ள சுற்றல் திறனைப் பார்வையிடுவர். நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் நம் மாணவர்களுக்கு கொண்டு சென்று மேலும் சிறப்பான கல்வியைக் கற்றுத் தருவோம்" என்றார்.
விழாவில் பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் சோ.மதுமதி, தனியார் பள்ளிகளின் இயக்குநர் மு. பழனிச்சாமி, தொடக்கப்பள்ளி இயக்குனர் பு.ஆ.நரேஷ், தமிழ்நாடு பெற் றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் இந்த நிலையில்.
அணைத்து மாணவர்களுக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழ்நாடு அரசு தப்பிப்பது, நிதிச் சுமையைக் காரணம் காட்டி தனியாருக்கு தத்துக் கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், “அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகிலுள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் நோக்கம் படிப்படியாக அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார் மயமாக்கும் தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும்.
அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்பு நிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக் குறியாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அதில் அரசுப் பள்ளிகளில் 24,310 தொடக்கப் பள்ளிகள், 7,024 நடுநிலைப் பள்ளிகள், 3,135 உயர்நிலைப் பள்ளிகள், 3,110 மேல்நிலைப் பள்ளிகள் என 37,579 பள்ளிகள் இயங்குகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 8,328 செயல்படுகின்றன. இதில் 46 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் குறைந்த அளவு இயங்கும் 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஏறக்குறைய 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அரசுப்பள்ளிகளின் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 2500 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கூட இல்லையென்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரம்பப் பள்ளிகளின் இடைநிற்றல் 16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்தப்படுவதற்குப் பதிலாக அரசுப்பள்ளிளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முனைவது தமிழ்நாடு ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளே கிடையாது. கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழ்நாடு அரசு தப்பிப்பது, நிதிச் சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக்கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துகொடுக்கும் நடவடிக்கையினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்