ஒரே நேரத்தில் கந்தனின் பக்தர்கள் கூட்டமும், சிக்கந்தர் கந்தூரிக் கூட்டமும் கூடியதால் பரங்குன்றத்தில் பரபரப்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஹிந்து இஸ்லாமியக் குழுக்கள் கூடிய
நிலையில் ஒரே நேரத்தில் பரபரப்பு. கையில் வேலுடன் முருகனிடம் முறையீடு செய்த இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு வெட்டுவோமென இஸ்லாமியர்கள் கூடி
அறிவித்ததையடுத்து மலை உச்சியில் தீபம் ஏற்றுவோமென ஹிந்து முன்னணியின் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் பக்தர்கள் பொதுமக்களுடன் இணைந்து முருகனிடம் கையில் வேலுடன் வேண்டுதல் முறையீடு. திருப்பரங்குன்றம் ஆறு படை வீடுகளில் ஒன்றான முருகன் கோவில் மலை மீது ஆடு, கோழிகளை அறுக்கத் திரண்ட ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகிகள். அதனால் காவல்துறையினர் குவிப்பு.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் கெடுத்து, முருகப்பெருமானை அவமதிக்கும் விதமாகவும், ஹிந்துக்கள் மனம் புண்படும் விதமாகவும் தடையை மீறி சமபந்தி விருந்து என ஆடு பலியிட்டு கந்தூரி கொடுக்கத் தடையை மீறி வந்த இஸ்லாமியர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். காவலர்களுடன் வாக்குவாதம் செய்தவர்கள் பிறகு கலைந்து சென்றனர். சமீபத்தில் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்ற இராஜபாளையம் நபர் ஒருவர், ஆடு பலியிட முயன்றதை காவலர் தடுத்தார்.
இதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சபாநாயகர் பி.எஸ்.அப்பாவுவிடம் மணப்பாறை தி.மு.க. வின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதற்கு கடிதம் கொடுத்திருந்த நிலையில், சில இஸ்லாமிய அமைப்புகள் தடையை மீறி நேற்று ஆடு, கோழி அறுத்து கந்தூரி சமபந்தி விருந்து கொடுக்கப்போவதாக அழைப்பு விடுத்தன. அதற்கு ஹிந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதனால், மலை மீது யாரும் செல்ல முடியாத வகையில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்ததநிலையில்,
கந்தூரி சமபந்தி விருந்து கொடுக்க இஸ்லாமியர்கள் தடையை மீறி ஆட்டுடன் வந்தனர். அவர்களை மலை மேலே செல்ல அனுமதிக்க முடியாது எனக்கூறி காவல்துறை தடுத்து நிறுத்தினர். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா ஔலியா தர்காவின் சந்தனக்கூடு விழா ஜனவரி மாதம் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜனவரி மாதம் 17-ஆம் தேதி இரவு சந்தனக்கூடு வைபவம் நடைபெற்றதையொட்டி, ஜனவரி மாதம் 18-ஆம் தேதி நேற்று காலை ஆடு, கோழிகள் பலி கொடுத்து கந்தூரி விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததற்கு கிராம மக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. மலை மீதுள்ள தர்காவுக்கு கந்தூரி கொடுக்க ஆடு ஒன்றை தூக்கிக்கொண்டு, ஐக்கிய ஜமாத்தை சேர்ந்த காதர் மற்றும் இதர முஸ்லிம் அமைப்பினர் நேற்று மலை மீது செல்ல முயன்றனர்.
அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். மலை மேல் உயிர்ப்பலி கொடுக்கத் தடை இருப்பதாகத் தெரிவித்தனர். இரு தரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முஸ்லிம்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து, பலியிடுவதற்காக யாரும் மலைமீது செல்லாதவாறு, அடிவாரத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவில், மற்றும் தர்காவுக்குச் செல்லும் பக்தர்கள் மட்டுமே, சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு அவர்கள் கலைந்து சென்றனர் இந்த நிலையில் தடையை மீறி மலைக்கு மேல் கந்தூரி கொடுக்க ஆட்டுடன் செல்ல முயன்ற இஸ்லாமியர்கள் மீது 4 பிரிவுகளின் கீழும், ஹிந்து முன்னணி சார்பில் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் அனுமதியின்றி ஊர்வலம் சென்றவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்