வேங்கை வயல் பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாதலால் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிசிஐடி கோரிக்கை
தமிழ்நாடு CBCID காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாதென வேங்கைவயல் பகுதி ஆதிதிராவிட மக்கள் சார்பில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் நிலையில்
வேங்கைவயல் கிராமத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டது.
கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாத வகையில் ஆங்காங்கே சோதனைச்சாவடிகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26- ஆம் தேதி
குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பல அரசியல் கட்சிகள், சார்ந்த அமைப்புகள், மாநிலத்தின் மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரிக்கை விடுத்தது.
2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் CBCID. காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்தனர். இந்த வழக்கில் ஜனவரி மாதம் 20- ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில், முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக தெரிந்தது.
முட்டுக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பத்மாவின் கணவரைப் பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவுகள் மேற்கண்ட குற்றவாளிகளால் கலக்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தமிழ்நாடு அரசு தெரிவித்ததில் முரளிராஜா வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு குரல் மாதிரி பரிசோதனை, மற்றும் DNA பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மூவரிடமும் ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
அறிவியல் பூர்வமான சாட்சிகளின் அடிப்படையில் CBCID காவல்துறையினர் இவர்களை சம்பந்தப்பட்ட குற்றம் செய்த நபர்களாகக் கருதியுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே குற்றவாளிகள் எனக் கூறியுள்ளதாக அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தினர் சார்ந்த தரப்பினர் எதிர்த்துள்ளனர்.
வேங்கைவயல் பகுதி மக்கள் உண்மைக் குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரிக்கக் கோரியும் வேங்கைவயலில் நேற்று முன்தினம் முதல் அப்பகுதி ஆதிதிராவிட மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. கருப்பு துணியை வாயில் கட்டி அந்த சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தையொட்டி வேங்கைவயல் கிராமத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அந்தக் கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் சென்றுவிடாத நிலையில் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், அந்தக் கட்சிகாரர்களை ஒரு சில விஷயத்தில் மட்டும் தான் கட்சி அவர்கள் தகுதி அடிப்படையில் காப்பாற்றும். சிலர் கட்சிக்கு எவ்வளவு நன்மை செய்திருந்தாலும், நீண்ட காலம் அக்கட்சியில் இருந்தாலும் கூட சமூக விரோதச் செயலில் ஈடுபடுபவர்களை ஒரு சூழ்நிலையில் கட்சி விலக்கி வைத்து விடும்.
மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துக்களையும் விசிக திருமாவளவன் கருத்துக்களையும் எடைபோட்டு ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. கடந்த பத்தாண்டுகளாக திருமாவளவனின் பேச்சுகள் மற்றும் செயலும் ஒவ்வொன்றும் தெளிவான அரசியல் புரிதலோடு நுணுக்கமான அரசியலை அவர் சார்ந்த சமூகத்தின் வெற்றிக்காக தெளிவாகவே பேசுகிறார் என்பது அரசியல் தெறிந்த அனைவரும் அறிந்ததே.
'யாரைக் காப்பாற்றுகிறது அரசு' என்ற அவரின் விமர்சனம் மட்டுமே தற்போது புரிதலற்ற கேள்வியாகிது. இந்த விவகாரம் குறித்து அவருக்கு ஏற்கனவே தெரியாமல் இருந்திருக்காது. காரணம் அவர் தடய அறிவியல் சார்ந்த துறைகளில் பணி செய்தவர் தற்போது இதுபோல ஒரு கருத்தை கூறுவது ஆச்சரியமளிக்கிறது.
இப்போது ஒரு கருத்தை உற்று நோக்கும் நிலையில்
வேங்கைவயல் விவகாரத்தில் Mainstream Media வில் பணிபுரியும் எந்த செய்தியாளர்களிடம் கேட்டாலும் ஒரே பதிலைதான் சொல்வார்கள் அதுதான் உண்மையும் கூட.
காவல்துறைக்கு தெரியாத விஷயங்கள் கூட அட இந்த மாவட்டச் செய்தியாளர்கள், தாலுகா செய்தியாளர்களுக்கு எளிதாக தெரிந்துவிடும். ஏனென்றால் அவர்கள் மக்களோடு மக்களாக இருப்பவர்கள் ஏன் நிறைய செய்திகளில் தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் காவல்துறைக்கு விஷயம் தெரியும். அவர்களுக்கு முன்பே இவர்கள் CCTV யை கேட்ச் செய்து விடுவார்கள்.சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழப்பு கூட ஒரு தொலைக்காட்சி
தமிழ் செய்தியாளரின் சிசிடிவி காட்சி தான் முக்கியத் திருப்பமாக அமைந்தது. செய்தி எழுதும் போது ஏதேனும் தகவல் தேவைப்பட்டாலோ, சந்தேகமிருந்தாலோ செய்தி வழங்கிய செய்தியாளரிடம் நேரடியாக பேசித்தான் செய்தி எழுதுவார்கள் அனைத்து தொலைக்காட்சியிலும். இவ்விவகாரத்தை நானும் நிறைய முறை களத்தில் இருப்பவர்களிடம் கண்டுள்ளேன் கேட்டும் தெரிந்து கொண்டேன். எல்லா செய்திகளையும் யார் கொடுத்தாலும் நான் முழுமையாக விசாரிக்காமல் அதை அணுகியதே இல்லை.
காவல்துறை தற்போது கூறியவை தான் உண்மை, இது அப்போதே அனைத்து செய்தியாளர்களுக்கும் தெரியும். யாரிடம் வேண்டுமானாலும் விசாரிக்கலாம். திமுக மீதும் திமுக அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டு, விமர்சனம், குறைபாடுகள் இருப்பது உண்மைதான் ஆனால் வேங்கைவயல் விவகாரத்தில் அரசை சாடுவது அறமல்ல.
அனைத்துக் கட்சி, மதம், ஜாதி இதில் எல்லாவற்றிலும் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்ட அயோக்கியர்களும் இருப்பார்கள். ஒடுக்கப்பட்டவரே இதை செய்திருப்பாரா என்று சிலர் சொல்வது ஆச்சரியமளிக்கிறது. 'யார் குத்தினாலும் கத்தி குத்தும்', 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் 'என்ற திரைப்படத்தின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற அவர்கள் தரப்பில் கோரிக்கை இருந்தாலும் CBCID காவல் துறை சார்பில் மேலும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலிருந்து மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வாழக்கை மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்ட மனு இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதில் பொது நீதி யாதெனில் பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கை புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2-க்கு மாற்ற
CBCID காவல் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) வசந்தியிடம் வலியுறுத்தினார். மேலும் இதற்கான கடிதத்தை CBCID காவல்துறை. தரப்பில் வழங்கப்பட்டதையடுத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
கருத்துகள்