தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படையின் இயக்குனர் பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால் இ கா ப மத்திய அரசுப் பணிக்கு இடம் மாற்றம்
செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசின் சார்பில் நிர்வாகக் காரணங்களுக்காக IAS மற்றும் IPS அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவர். அதோடு IAS மற்றும் IPS அலுவலர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்படுகின்றன. மேலும் மத்திய அரசுப் பணிக்கும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை இயக்குனராகப் பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால் எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குனராகக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதல் இயக்குனராக நான்காண்டுகள் பணி வகிப்பார் என தகவல் வெளியாகியது. போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு துணை இயக்குநராகப் பணியாற்றியவர். கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய வழக்கில் பணிக்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு ஆயுதப்படையின் துணை இயக்குநரானார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால் 1972 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது தந்தையைப் போலவே சட்டம் படித்து விட்டு, காவல்துறைப் பணியில் சேர்ந்தார். 1994 -ஆம் ஆண்டு அவரது 22 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு கேடர் IPS அலுவலராகப் பணியில் சேர்ந்தார். தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் கண்காணிப்பாளராகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். 2001 -ஆம் ஆண்டு சென்னை மாநகரில் பூக்கடை துணை ஆணையர், போக்குவரத்து துணை ஆணையர் பணிகளை வகித்தார். தொடர்ந்து, CBI அலுவலராக பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளார்.
கருத்துகள்