மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிபிஐ உருவாக்கிய பாரத்போல், இணையதளத்தை புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா நாளை (2025-ம் ஆண்டு ஜனவரி 07) புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உருவாக்கியுள்ள பாரத்போல் இணையதளத்தை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் சட்ட அமலாக்க அமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசு பல முக்கிய முன்முயற்சிகளை எடுத்துள்ளது. பாரத்போல் இணையதளம் குறிப்பிடத்தக்க வகையில் இந்திய சட்ட அமலாக்க முகமைகள் சர்வதேச காவல் துறை உதவியை விரைவாக நாடுவதற்கு உதவுகிறது.
இந்தியாவில் சர்வதேச காவல் துறையின் தேசிய பணியகமாக உள்ள சிபிஐ அமைப்பானது சட்ட அமலாக்க முகமைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு புலனாய்வு முகமைககளுடன் இணைந்து குற்றவியல் தொடர்பான விஷயங்களில் சர்வதேச புலனாய்வு அமைப்புடன் ஒத்துழைக்க இந்த இணையதளம் உதவுகிறது. மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் மூலம் சர்வதேச காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள உதவுகிறது.
கருத்துகள்