ஈரோட்டில் எடப்பாடி கே.பழனிசாமியின் நெருங்கிய உறவினரான இராமலிங்கத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை
ஈரோட்டில் எடப்பாடி கே.பழனிசாமியின் நெருங்கிய உறவினரான இராமலிங்கத்திற்குச் சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
நடத்தினர். தமிழ்நாட்டில் 26 இடங்களில் வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், ஈரோட்டில் 26 இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னையில் தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கன்ஸ்ட்ரக்சன் மற்றும் மெட்டல் நிறுனவனத்திற்கு சொந்தமான 6க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியின் உறவினர் ஈரோடு ராமலிங்கம். எடப்பாடி கே பழனிசாமி மகனின் மிதுன் சகலையின் தந்தை தான் ராமலிங்கம். தமிழ்நாட்டில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை செய்து வருகிறார். கர்நாடகாவில் ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனத்தில் 2016-ஆம் ஆண்டு வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். இந்த வருமான வரி சோதனையில் ரூபாய் 152 கோடி சிக்கியிருந்தது. இந்த வழக்கில் தான் ஏற்கனவே எடப்பாடி கே. பழனிச்சாமியின் உறவினரான ராமலிங்கம் வீடுகளில் பல முறை வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் மொத்தம் 26 இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்