அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் மற்றும் உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணை தீவிரம்
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கிலுள்ள பின்னணிகளை
முழுமையாக விசாரணை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதன்படி, சென்னை அண்ணா நகர் காவல் துறை துணை ஆணையர் சிநேக பிரியா, ஆவடி காவல்துறை துணை ஆணையர் ஜமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகிய மூன்று பெண் இந்திய காவல் பணி அலுவலர்கள் தலைமையிலான குழுவில் பூஜியக் குற்றக் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் உள்ளனர். முன்னதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் காவலர்கள் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது. அதனால், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், சிசிடிவி கேமரா பதிவுகள், உள்ளிட்ட ஆதாரங்கள்
அனைத்தையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் குழுவினர் அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு. உள்ளதாகவும் கூறப்படுகிற நிலையில், இன்று (ஜனவரி மாதம் 2 ஆம் தேதி) காலை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்துள்ளனர். மேலும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் எந்தெந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது என்பதை நேரடியாகச் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள், சந்தேகப்படும் நபர்கள் உள்ளிட்ட சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் குழுவும் பயன் படுத்தி விசாரணை நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கை தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு ஏற்றது. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, ஆணையத்தின் துணைச் செயலாளர் சிவானி தே ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவும் அமைக்கப்பட்டது.இந்தக் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தி விசாரணையும் மேற்கொண்டது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா குமாரி, பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், தமிழ்நாடு காவல்துறையினர் அவரை எப்படி வெளியில் நடமாடவிட்டார்கள்? காவல்துறையும் அரசும் ஏன் அவர் மீது முன் கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை'' என கோபமாகவே கேள்வி எழுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவத்தை NCW ஏற்கனவே தானாக முன்வந்து எடுத்துக்கொண்டது. இப்போது, மாண்புமிகு தலைவி திருமதி.விஜயா ரஹத்கர் அவர்கள், ஸ்ரீமதி. மம்தா குமாரி, உறுப்பினர், NCW, மற்றும் ஸ்ரீ பிரவீன் தீட்சித், ஐபிஎஸ் (ஓய்வு) மற்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் டிஜிபி, விசாரணை மற்றும் நடவடிக்கை பரிந்துரைக்க. இந்தக் குழு அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் உண்மைகளைக் கண்டறியும். இந்தக் குழு, டிசம்பர் 30, 2024 திங்கட்கிழமை சென்னைக்கு வர வாய்ப்புள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து, தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் விஜய ரஹத்கர் கூறும்போது, "... இந்த விஷயத்தை உணர்ந்து, NCW காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கமான குற்றவாளி என்று தெரிகிறது. இதற்கு முன்பு இதுபோன்ற குற்றங்களைச் செய்துள்ளார், ஆனால் காவல்துறையில் கண்டு கொள்ளவில்லை... எனவே NCW இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வெவ்வேறு நபர்களையும் பாதிக்கப்பட்டவரின் பெற்றோரையும் சந்தித்து வருகிறது. பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக, அண்ணா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை NCW மதிப்பிட்டது, SIT ஐ சந்தித்து, NGOக்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பங்குதாரர்களை ஈடுபடுத்தியது. நடவடிக்கை எடுக்கக்கூடிய பரிந்துரைகளுடன் கூடிய விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு திருமதி மம்தா குமாரி (உறுப்பினர்- NCW) தலைமையிலான NCW விசாரணைக் குழு நேற்று பாதிக்கப்பட்ட மற்றும் குடும்பத்தினரை சந்தித்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மாண்புமிகு தமிழக ஆளுநர், டிஜிபி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடியது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து ஆய்வு எனத் தெரிவித்தார்.
கருத்துகள்