பல உயிர்கள் வாழ்வதற்கு வழி செய்த பிரபல மருத்துவர் கே.எம்.செரியன் காலமானார்.
நேற்று பெங்களூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர் செரியனுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது, பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கு எதிர் வரும் வியாழக்கிழமை நடைபெறுமென்று அவர் மகள் சந்தியா செரியன் தெரிவித்தார். மூளைச்சாவடைந்த நோயாளிகளிடமிருந்து இதயத்தை எடுத்து, அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்குப் பொருத்தி, வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்து, இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை முறையில் முன்னோடியாவார். மருத்துவத்துறையில் அவரது சேவையைப் பாராட்டி, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்துள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் அனுபவம் கொண்டவர் டாக்டர் கே.எம். செரியன் இந்திய இதய அறுவை சிகிச்சை நிபுணர். (கோட்டரத்து மம்மன் செரியன் என்பதே) 1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் தேதி பிறந்த டாக்டர் கே.எம். செரியன்இ ந்தியாவில் முதல் கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்
1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் குழந்தை இருதய அறுவை சிகிச்சையின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்தவர்
வேலூரில் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை விரிவுரையாளராகப் பணியாற்றினார்ப்ரியா எம்.மேனனால் எழுதப்பட்ட செரியன் பற்றிய வாழ்க்கை வரலாறு, 2015 ஆம் ஆண்டில் வெளி வந்தது . டாக்டர் கே.எம்.செரியன் மறைவு, மருத்துவத் துறைக்கும் நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவுக்கு விபரம் தெரிந்த அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்