நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செபஸ்தியான் சைமன் என்ற சீமான்,
பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், கண்ணியக்குறைவான வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், சென்னை பத்திரிகையாளர் மன்றம் குற்றம்சாட்டு. பொது இடங்களிலும் ஊடகச் சந்திப்புகளிலும் கொந்தளிக்கும் திரைப்பட நடிகர் இயக்குனர் சீமான், தொடர்ந்து ஆபாசமாக இழிசொற்களைப் பயன்படுத்தி வருவதாக செய்திக்குறிப்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் விமர்சித்தது. கோயம்புத்தூர் ஊடக சந்திப்பில், ஒரு தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளரிடம் முகம்சுளிக்கும் வகையில் சீமான் பதிலளித்திருப்பதாக, அதில் சுட்டிக் காட்டியுள்ளது.
பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்புமில்லாமல், அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை சீமான் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதென்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொது இடங்களிலும் ஊடகச் சந்திப்புகளிலும் கண்ணியமறிந்து நடந்து கொள்ள வேண்டுமெனறு சீமானை, சென்னை பத்திரிகையாளர் மன்றம் அதில் வலியுறுத்தியது.
கருத்துகள்