பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக திருப்பூர் சுப்பிரமணியம் பதவியேற்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி
திருக்கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக திருப்பூர் சுப்பிரமணியம் பதவியேற்றார். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 18 சித்தர்களில் ஒருவரான போகர் காலம் உருவான அதற்கு முன்னர் வழிபாடு செய்த குறிஞ்சி நிலக் கடவுளான முருகன் படைவீடாகும். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள கோவில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக 5 நபர்கள் கொண்ட புதிய அறங்காவலர்கள் குழு
உறுப்பினர்களை சில நாட்களுக்கு முன் கீழ் கண்ட முகவரி கொண்ட நபர்களான 1.க.தனசேகர், த/பெ, கந்தசாமி, எண். 128/69, முதல் தெரு, புது அழகாபுரம், சேலம் வட்டம், சேலம் மாவட்டம்-636016.
2.சு.பாலசுப்பிரமணி, த/பெ. சுப்பையா, எண். 5/168, கிழக்கு வீதி, S வாடிப்பட்டி அஞ்சல், கதிரையன்குளம், சில்வார்பட்டி வழி, திண்டுக்கல் மாவட்டம்-624622.
3.G.R.பாலசுப்பிரமணியம், த/பெ.ராமசாமிசெட்டியார், ரெட்டியபட்டி, சின்னகரட்டுபட்டிகிராமம், ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
4.கே.எம்.சுப்பிரமணியன், த/பெ. கே. முத்துச்சாமி, எண். 32, செந்தூர் இல்லம், சினேகம் கார்டன் கே.பி.என். காலனி 3வது வீதி, திருப்பூர் மாவட்டம்-641601.
5. சி.அன்னபூரனி, க/பெ. சிவக்குமார், கதவு எண். 129, SRS இல்லம், கருப்பணன், தெரு, தும்மிச்சம்பட்டி, ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்-624619. ஆகியோர் நியமிக்கப்பட்டு இதற்கான அறிவிக்கையும்வெளியிட்டதையடுத்து கோவில் தலைமை அலுவலகத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி தலைவரை ஒருமனதாக தேர்வு செய்தனர்.
அதன்படி திருக்கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கே.எம்.சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் புதிய தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எம்.சுப்பிரமணியத்திற்கு திருப்பூர், கோவை உள்பட மேற்கு மண்டலத்தை சேர்ந்த தொழிலதிபர்களும், ஆன்மிக அமைப்புகளின் நிர்வாகிகள், கோவில் பணியாளர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இவர் இதற்கு முன்னர் இந்தக்கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி வகித்து செயல்பட்ட நிலையில் தற்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கே.எம்.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோவில் வளாகத்தில் சுத்தம், சுகாதாரம் மேம்படுத்த முழு நடவடிக்கை எடுக்கப்படும். நெரிசலின்றி பக்தர்கள் வழிபடுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். அரசுடன் கலந்து பேசி திட்டங்களும், வசதிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்"என்றார்.
கருத்துகள்