மூலப்பத்திரம் இல்லாவிட்டாலும் அதன் நகலைச் சரிபார்த்து பத்திரப்பதிவு செய்யும் நீதிமன்றத்தின் உத்தரவு
இராசிபுரம் சார்பதிவாளருக்கு தனிப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவு
பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் அல்லது தாய் பத்திரம் அல்லது காணாமல் போன மூலப் பத்திரம் கிடைக்கவில்லை என்ற காவல்துறை வழங்கும் சான்று ஆகியவை இல்லாவிட்டாலும், பத்திரத்தின் சான்றிதழ் நகலை சார்பதிவாளர் அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டு, பத்திரப்பதிவு செய்யலாம்ம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
நாமக்கல்ல் பாப்பு என்பவர், தனது மூதாதையர்கள் சம்பந்தப்பட்ட பூர்வீக சொத்தை தனது பெயரில் இருந்து தனது சகோதரர் பெயருக்கு மாற்று வதற்கு மூலப்பத்திரம் இல்லை என பதிவு செய்ய ராசிபுரம் சார் பதிவாளர் மறுத்துள்ளார். அதே சார்பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே பெறப்பட்ட மூலப் பத்திரத்தின் சான்றிதழ் செய்த நகலை ஏற்க மறுத்து விட்டனர். பத்திரப்பதிவு செயய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய் தார். இதை எதிர்த்து பாப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்
வழக்கை நீதி பதிகள் ஆர்.சுப்ரமணியம், சக்தி வேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது தீர்ப்பு விவரம் வருமாறு -: வழக்கமாக ஒரு பத்திரப்பதிவு செய்ய வேண்டுமானால் பத்திரப் பதிவு சட்டப்படி மூலப்பத்திரம் வேண்டும். மூலப்பத்திரம் இல்லா விட்டால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெற்ற ஜெராக்ஸ் நகல் இருக்க வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னர் பத்திரம் காணவில்லை என விளம்பரங்கள் செய்ய வேண்டும் புகார் கொடுத்து, அதற்கு விசாரணை நடத்தி காவல்துறை அளித்த சான்று இருக்க வேண்டும் என்று தான் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போன மூலப்பத்திரம், அல்லது மூலப் பத்திரம் கிடைக்கவில்லை என்ற காவல்துறையினர் கொடுத்த சான்று ஆகிய இரண்டும் இல்லாவிட்டாலும், பத்திரத்தின் நகலை அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து பதிவு செய்ய வேண்டும். அனைத்து ஆவணங்களும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஏற்கனவே இருக்கும்
என்பதால் அதை ஒப்பிட்டுப் பார்த்து, மனுதாரரின் சொத்து மாற்று பத்திரத்தை ராசிபுரம் சார்பதிவாளர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறோம். எனவே மனுதாரரின் பத்திரத்தை பதிவு செய்ய மறுத்தது தவறானது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
எல்லா நேர்வுகளிலும், மூலப் பத்திரம் கிடைக்கவில்லை என்று காவல் நிலையத்தில் சான்று பெற்று வர வேண்டும் என திருப்பி அனுப்புவது. தேவையின்றி முறைகேடான வழியில் சான்று பெறுவதை ஊக்கு விப்பதாக அமையும். மூலப் பத்திரம் கிடைக்கவில்லை என்ற காவல்துறை சான்று பெறுவதில் உள்ள பெருஞ்செலவுகள், சிக்கல்கள் காரணமாக, வெளிமாநிலங் களில் இருந்து இத்தகைய காவல்துறை சான்றுகள் சமர்ப்பிக்கப்படுவது அதிகரித்துள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது என்றும் இந்த தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு நபரின் வழக்கிலும் இதே தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சில மாதங்களுக்கு முன்பு பிறப்பித்தது. திருநெல்வேலி மாவட்டம் வி.கே புரத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டருக்குச் சொந்தமாக அம்பாசமுத்திரம் தாலுகா சிவஞானபுரம் வடக்குத் தெருவில் இரு சர்வே எண்களில் இரண்டு நத்தம் நிலவரித்திட்ட நிலங்கள் இருக்கிறது. இந்த சொத்துக்கள் அவரது தந்தை கடந்த 29.6.1998 ல் தானமாகக் கொடுத்தது. இந்த சொத்தை அவரது மனைவி பெயருக்கு மாற்றம் செய்வதற்கு வி.கே.புரம் சார்பதிவாளரை அணுகியிருக்கிறார். அப்போது, மூலபத்திரம் அசல் தாக்கல் செய்யவில்லை என்பதால் பத்திரப்பதிவிற்கு மறுத்ததுடன் காவல்துறையில் மூலபத்திரம் தொலைந்ததிற்கான சான்று வாங்கி வந்தால் தான் பத்திரபதிவு செய்யமுடியும் என்று சார்பதிவாளர் திருப்பி அனுப்பியியுள்ளார்
அதனால், மூலபத்திரத்தின் நகலை வைத்து சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்திட உரிய உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அலெக்ஸாண்டர் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், ஒருவர் பத்திரபதிவு செய்ய வேண்டுமானால் பத்திரப்பதிவுக்கு சட்டப்படி மூலப்பத்திரம் இருக்க வேண்டியது அவசியம். ஒரு வேளை மூலப்பத்திரம் இல்லாவிட்டால், காவல்துறையில் பத்திரம் காணவில்லை என்று புகார் கொடுத்து அதற்கு காவல்துறையினர் சான்று அளிக்க வேண்டும் .
ஆனால் அதனை அளித்தால் தான் பத்திரபதிவு செய்யமுடியும் என்று கட்டாயபடுத்தக் கூடாது. எனவே அசல் மூல ஆவணம் மற்றும் போலீஸ் சான்று இல்லாவிட்டாலும் நகலை ஒப்பிட்டுபார்த்து பத்திரபதிவு செய்யவேண்டும்.நகல் மூலப்பத்திரம்: அனைத்து ஆவணங்களும் பத்திரபதிவு அலுவலகத்தில் இருக்கும் என்பதால் அதனை மட்டுமே ஒப்பிட்டு பத்திரபதிவு செய்ய வேண்டும். அசல் மூல ஆவணம் தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தினால் மனு தாரரின் பத்திரத்தினை பதிவு செய்ய மறுத்தது தவறானது. ஆகவே மனு தாரரின் பத்திரத்தினை ஒருவார காலத்திற்குள் பதிவு செய்யவேண்டும். அதற்கு மூலப்பத்திரத்தை கேட்காமல் பதிவாளர் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்
எனவே, மூலப்பத்திரம் இல்லாவிட்டாலும், மூலப்பத்திரம் காணாமல் போனதாக காவல்துறையினர் கொடுக்கும் சான்று இல்லாவிட்டாலும் பத்திர நகலை சார்பதிவாளர் அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டு பத்திரப்பதிவு செய்ய முடியும் என்று பலரும் பேசும் நிலையில் ஆனால், இதுபற்றி முழு தகவல்களை அறிய வழக்கறிஞர்கள் அல்லது சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகிப் பாருங்கள். அது நடைமுறை சாத்தியத்திற்கும் உகந்ததாக இருக்கும். மூலப் பத்திரம் இல்லாமல் பத்திரப் பதிவு செய்வது தவறுகளை ஊக்கப்படுத்துவது போலாகும் , வேறு இடத்தில் மூலப் பத்திரம் மூலம் அடமானக் கடன் வாங்கியவர்கள் கூட சொத்தை பதிவு செய்து விற்பனை செய்யும் மோசடி நிலை நீதிமன்றத்தில் வழக்குகளை அதிகரிக்கும். இது போல பல குற்றங்கள் கூடும் பாகப் பிரிவினை, உயில் மற்றும் பொது அதிகார ஆவணம் உள்ளிட்ட பல அதிகரிக்கும் இதனால் நில மோசடி செய்யும் நபர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட வேண்டும் என்பதே இங்கு பொது நீதி
கருத்துகள்