இந்தியாவில் பொது சிவில் சட்டம் உத்தராகண்ட் மாநிலத்தில் அமலானது!
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது.
உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இச்சட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத இதற மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தின் சட்டமன்றப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து அண்மையில் அம்மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை உத்தராகண்ட் இன்று அமல்படுத்துகிறது. இதற்கான பிரத்யேக இணையதளத்தை நண்பகல் 12.30 மணிக்கு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைத்தார்.
பொது சிவில் சட்டமானது :-திருமணம், வாரிசுரிமை, விவாகரத்து உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றுவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கமாகும். உத்தராகண்டில் அமலுக்கு வரும் இச்சட்டத்தின்படி, Live in relationship எனப்படும் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வோர், தங்கள் உறவு குறித்து பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்து இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் இதற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டது
ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான & சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என்று கூறுகிறது; பணவீக்கம், பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் இருந்து கவனத்தை திசை திருப்ப உத்தரகாண்ட், அரசாங்கத்திடம் அதை மேற்கொள்ள வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது.பொது சிவில் சட்டம் உத்தரகண்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும், சீரான சிவில் கோட் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய புள்ளிகள்.
அனைத்து குடிமக்களுக்கும் தனிப்பட்ட சட்டங்களில் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக அனைத்து குடிமக்களுக்கும் ஒரு சீரான சிவில் கோட் அதாவது பொது சிவில் சட்டத்தை பாதுகாக்க மாநிலக் கொள்கையின் (DPSP) உத்தரவுக் கொள்கைகளின் பிரிவு 44 மாநிலத்தை வழிநடத்துகிறது.
ஷா பானு ஜீவனாம்ச வழக்கு (1985) ஆம் ஆண்டு மற்றும் சர்லா முட்கல் வழக்கு (1995) ஆம் ஆண்டு போன்ற வழக்குகளில் பொது சிவில் சட்டத்தின் அவசியத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள்