முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை ரத்து, பதவி ஏற்ற நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு

பதவியேற்ற  முதல் நாளில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை ரத்து: 

பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் இரத்து செய்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் நாளில் வெளியிட்ட அறிவிப்பால், அமெரிக்காவில் வசிக்கும் பல லட்சம் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். அதிபராகப் பதவியேற்ற முதல் நாளில் பல அறிவிப்புகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார். அவரது ஓவல் அலுவலகத்தில் 26 முக்கிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

முன்பிருந்த அமெரிக்கா அரசுகள் கடைபிடித்த கொள்கைகளிலிருந்து அது முற்றிலும் விலகும் வகையிலுள்ளது, பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் மிகப்பழமையான திட்டத்தை டிரம்ப் ரத்து செய்திருப்பது அமெரிக்காவில் வாழும் பல லட்சம் இந்தியர்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவில், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அந்த நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கப்பட்டதற்கான சட்டம் 1868 ஆம் ஆண்டு முதலே அமலிலுள்ளது. தற்போது அதை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை குடியுரிமை பெற, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்கக் குடிமகனாக, சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக (கிரீன் கார்டு உள்ளவர்) அல்லது அமெரிக்கா ராணுவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத் தவிர்த்து, தந்தை அமெரிக்கா குடிமகனாக இல்லாவிட்டாலோ, சட்டப்பூர்வமான நிரந்தரக் குடியுரிமை இல்லாதவர் என்றாலோ அல்லது தாய் சட்டவிரோதமாகக் குடியேறியவர் அல்லது மாணவர், சுற்றுலா விசாவில் வந்திருப்பவர் என எந்த வகையாக இருந்தாலும் அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு தாமாகக் குடியுரிமை கிடைக்காது என்பது தான் டொனால்ட் டிரம்ப் அரசின் புதிய கொள்கையாக அறிவிக்கப்பட்டது. இது, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு மட்டுமே பொருந்துமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்1பி வீஷா போன்ற சட்டப்பூர்வக் குடியேற்றமாவர்களுக்கும் பொருந்துமென கூறப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த உத்தரவு அடுத்த 30 நாளில் அமலுக்கு வருகிறது.


அதன்பின், எச்1பி வீஷாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் மற்றும் கிரீன்கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தாமாகக் குடியுரிமை கிடைக்காது. தற்போது நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன் கார்டுக்காக 10 லட்சம் இந்தியர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு இந்தக் கொள்கை முடிவு பாதிக்கும். இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்களே அதிகளவில் எச்1பி வீஷாவில் அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றுகின்றனர். கிரீன்கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களும் பெரும்பாலானவர்கள் இந்தியர்களும், சீனர்களுமாகவே உள்ளனர்.

பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவது கேலிக்குரியது என ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலையில் இதன் மூலம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதன் மூலம் குறுக்கு வழியில் அமெரிக்கக் குடிமகனாகி விடுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், டொனால்ட் டிரம்பின் இந்த நிர்வாக உத்தரவு பல்வேறு சட்ட ரீதியான வழக்குகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது மட்டுமின்றி, பிரிக்ஸ் அமைப்பிலுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு மாற்றமாக பிற கரன்சிகளை வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், அந்த நாடுகளுக்கு 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுமென்றும் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் .


பதவி ஏற்கும் முன்பே விலகிய விவேக் ராமசாமி

அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் அரசின் செயல்திறன் ஆலோசனைக் குழுவில் தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியினரான விவேக் ராமசாமி ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் பதவியை ஏற்கும் முன்பாகவே விவேக் ராமசாமி விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். ஒஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார். எனவே அரசின் செலவினத்தை குறைக்க பரிந்துரைகள் வழங்கும் செயல்திறன் குழுவில் இனி எலன் மஸ்க் மட்டுமே செயல்படுவார்.


அமெரிக்காவுக்கே முன்னுரிமை என முழங்கிய டிரம்ப், மெக்சிகோ வளைகுடா என்பதை அமெரிக்கா வளைகுடா என பெயர் மாற்ற வேண்டுமெனவும், வட அமெரிக்காவின் உயரமான மலையான டேனலியை மவுண்ட் மெக்கென்லே என முன்னாள் அமெரிக்க அதிபர் பெயர் சூட்டப் போவதாகவும் அறிவித்துள்ளார். மெக்கென்லே மலை என முன்பிருந்த பெயரை முன்னாள் அதிபர் ஒபாமா டேனலி என மாற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.


1,500 பேருக்கு பொது மன்னிப்பு

2021ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது  ஆதரவாளர்கள்  1,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஏற்காததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

 இந்த அறிவிப்புகள் காரணமாக 

அமெரிக்கா விசா விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி கடுமையாக்கப்பட வேண்டும். எந்தவொரு நாடும், தனிநபரும் அமெரிக்காவின் தேச நலன், கலாச்சாரம், பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலிருப்பது வீஷா வழங்குவதிலேயே உறுதி செய்யப்பட வேண்டுமென்கிற உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.


மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதைத் தடுக்க தெற்கு எல்லையில் தேசிய அவசர நிலையை டொனால்ட் டிரம்ப் பிரகடனப்படுத்தினார்.  அதற்காக தெற்கு எல்லையில் ராணுவத்தைக் குவிக்க நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். தனது முதல் ஆட்சிக் காலத்தில் எல்லை முழுவதிலும் மதில் சுவர் கட்ட டிரம்ப் உத்தரவிட்டார். அதில் பல இடங்களில் பணிகள் முடிக்கப்படவில்லை. தற்போது மீண்டும் எல்லை சுவர் கட்டும் பணியை தொடங்கி முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

சீனாவுக்குச் சொந்தமான சமூக ஊடக தளமான டிக்டாக்கை தடைசெய்யும் சட்டம் செயல்படுத்தப்படுவதை 75 நாட்களுக்கு நிறுத்திவைக்கும் உத்தரவு ஒன்றிலும் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

கருத்து சுதந்திரத்தை மீண்டும் வழங்கும் வகையில் அரசு தணிக்கை தடுக்கும் உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.

போதைப் பொருட்கள், மனித கடத்தல் கும்பல்கள் மற்றும் சர்வதேச சட்டவிரோத கும்பல்களையும் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவிலும் கையெழுத்திட்டார்.

கனடா மீதான 25 சதவீத வரி விதிப்பை 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கும் உத்தரவும் கையெழுத்தானது.

அமெரிக்காவில் ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என்கிற உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன் மூலம் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அவர் வாபஸ் பெற்றார். முன்னாள் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்ட 3ஆம் பாலினத்தைச் சேர்ந்த ராணுவத்தினர் பாதுகாப்புகளையும் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். தற்போது அமெரிக்க ராணுவத்தில் 9,000 முதல் 14,000 3 ஆம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

முன்னாள் அதிபர் ஜோ பைடன் மரண தண்டனைக்கு எதிராக இருந்த நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மீண்டும் மரண தண்டனை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். டிரம்ப்பின்

முந்தைய ஆட்சியில் 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகல்

கொரோனா காலகட்டத்திலேயே உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்த டிரம்ப், அந்த அமைப்புக்கு நிதி வழங்குவதைத் தவிர்க்க அப்போதே விலகுவதற்கான நடவடிக்கையை தொடங்கினார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் அந்த முடிவையடுத்து வந்த அதிபர் ஜோ பைடன் நிராகரித்த நிலையில், தற்போது மீண்டும் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி தந்தார்.

உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதி வழங்குவது அமெரிக்கா என்பதால் அந்த நாடு விலகியதால் இனி அந்த அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதே போல, பாரிஸ் பருவகால ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் அமெரிக்கா விலகுவதாகத் தெரிவித்தார். தனது முதல் ஆட்சியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், அடுத்ததாக பதவியேற்ற ஜோ பைடன் ஒப்பந்தத்தில் இணைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.முன்னால் அதிபர் ஜோ பைடனின் 78 உத்தரவுகளையும் ரத்து செய்தார் 

இது நாடாளுமன்றத்தின் தலையீடு இல்லாமல், அதிபர் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஒரு வழியாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களால் நேரடியாக இவற்றை ரத்து செய்ய முடியாது. ஆனால், நாடாளுமன்றம் மூலமாக நிர்வாக உத்தரவுகளை செயல்படுத்த விடாமல் தடுக்க முடியும். அல்லது தடைகளை ஏற்படுத்தலாம்.

உஷா வான்சை புகழ்ந்த டிரம்ப்

துணை அதிபராக பதவியேற்ற ஜேடி வான்சின் மனைவி உஷா வான்ஸ். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட உஷா சிலுகுரியின் பெற்றோர், 1970 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த நிலையில். அங்கேயே பிறந்து வளர்ந்து, ஹிந்து மதத்தைப் பின்பற்றிய உஷா சிலுகுரி, 2013 ஆம் ஆண்டு யேல் சட்டப்பள்ளியில் படிக்கும் போது, ஜேடி வான்சை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியினருக்கு இவான், விவேக் என இரண்டு மகன்களும், மிராபெல் என்ற மகளுமுள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டிசியில் வழக்கறிஞராக பணிபுரிந்தார் உஷா வான்ஸ். இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், ‘‘ஜேடி வான்சை நீண்ட காலமாக நான் கவனித்து வருகிறேன். அவர் மிகச்சிறந்த செனட்டர், மிகச்சிறந்த புத்திசாலி. அவரை விட அவரது மனைவி மிகப்பெரிய புத்திசாலி. அவர் அரசியலில் இருந்திருந்தால், துணை அதிபர் பதவிக்கு எனது தேர்வு உஷாவாக இருந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை’’ என்றார்.    இந்த நிலையில் இந்தியப்         பிரதமர்  நரேந்திர மோடியை, மை டியர் பிரண்டு என அழைக்கும் டொனால்ட் டிரம்ப் , அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்படவில்ல,

பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப்

உலகின் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முதல் இடத்திலிருக்கும் நாடு அமெரிக்கா.  இத்தகைய சக்திவாய்ந்த நாட்டின் 47 வது அதிபராக டொனால்டு டிரம்ப் , இந்திய நேரப்படி நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அதையடுத்து, துணை அதிபராக ஜே.டி வேன்ஸ் பதவியேற்றுக் கொண்ட 

விழாவானது, கேபிட்டல்ஸ் என அழைக்கப்படும் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில், முன்னாள் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் , பல நாட்டுத் தலைவர்கள், உலகப் பணக்காரர்கள் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியும், அவரது மனவி நீதா அம்பானியும் பங்கேற்றனர். அம்பானி சார்பில், இந்த விழாவிற்கு சுமார் 8 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்ததாகவும் தகவல். ஆனால், இவ்விழாவில் டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய நண்பராக பார்க்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, கலந்து கொள்ளாதது  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் வழக்கமாக, அதிபர் பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படமாட்டாது, உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம். ஆனால், அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக, இம்முறை வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.விழாவில் , 8 நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பானது விடுக்கப்பட்டிருப்பதாக அல்ஜைரா சர்வதேச செய்தி ஊடகம் தெரிவித்ததில் 

சீன அதிபர் ஜி ஜின்பிங்,


அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே,


இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி,


ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன்,


ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா,


எல் சால்வடார் அதிபர் நயீப் புகேலே,


பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ,


முன்னாள் பொலிஷ் பிரதமர் மொராவீக். 


ஆகிய 8 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சீனா அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை, அதற்குப் பதிலாக துணை அதிபர் ஹான் ஜெங் பங்கேற்க அனுப்பப்பட்டார் 

 இந்தியப் பிரதமர் ஏன் அழைக்கப்படவில்லை என பார்த்தால், பிரிக்ஸ் கூட்டமைப்பானது டாலருக்கு எதிராக புதிய நாணயத்தை உருவாக்குவது குறித்து பேசியது, டொனால்ட் டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தியா , புதிய நாணயம் குறித்தான நகர்வுக்கு மறுப்பு தெரிவித்து விட்டது. அப்படியென்றால் ,சீனாவும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ளது, சீன அதிபருக்கு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி, ஏன் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என்ற கேள்வியும் அம்பானி சென்ற விழா அதானி செல்லாத நிலை என்பது அரசியல் பொருளாதார அமெரிக்கா செயல்பாடு குறித்து பலராலும் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தியாவின் மீது டிரம்ப்புக்கு கோபமா அல்லது அரசியல் தந்திரம் தானா என கேள்வியும் எழுகிறது. 

ஆனால், இந்தியாவின் மீது டொனால்ட் டிரம்ப்புக்கு கோபமிருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இந்தியா பொருளாதார ரீதியாக டாப் 5 இடத்திற்குள் வந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்கிறது. இந்த நிலையில், இந்தியாவைப் புறந்தள்ள , டொனால்ட் டிரம்ப் நினைக்க மாட்டார், மாறாக நட்புடன் தான் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. .கமலா ஹாரீஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக இருந்தது. இதனால், தேவையில்லாமல், மற்ற நாடுகளில் அரசியலில் தலையீடு செய்ய வேண்டாம் என்ற நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி எடுத்தார். ஆனால், நெருங்கிய நண்பர் நரேந்திர மோடி, இந்தியர்களிடம் வாக்குச் சேகரிக்கவில்லை என்ற கோபமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடியை அழைக்கவில்லை எனவும் தகவல் தெரிவிக்கின்றன். மேலும், 2 வது முறையாக அமெரிக்கா அதிபராக டிரம்ப்பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக, அமெரிக்காவின் எதிரி நாடாகப் பார்க்கப்படும்  சீனாவுக்கும் , அதற்கடுத்துத் தான் இந்தியாவுக்கும் பயணம் செய்யவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...